என் மலர்

  செய்திகள்

  கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்
  X
  கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்

  அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்சை தொடர்ந்து இங்கிலாந்திலும் 20 ஆயிரம் பேர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொரோனாவுக்கு இங்கிலாந்தில் நேற்று ஒரே நாளில் 813 பேர் பலியாகினர். இதனால் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது.
  லண்டன்:

  உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு கொரோனா பரவியுள்ளது. தற்போதைய நிலவர்ப்படி, உலகம் முழுவதும் 29 லட்சத்து 12 ஆயிரத்து 823 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 18 லட்சத்து 76 ஆயிரத்து 974 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

  கொரோனா பரவியவர்களில் 8 லட்சத்து 32 ஆயிரத்து 876 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு இதுவரை 2 லட்சத்து 2 ஆயிரத்து 973 பேர் பலியாகியுள்ளனர்.

  சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை புரட்டி எடுத்து வருகிறது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய 4 நாடுகளில் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

  கோப்பு படம்

  இந்நிலையில், இங்கிலாந்திலும் கொரோனா தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 20 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கையில் 20 ஆயிரத்தை கடந்த நாடுகள் பட்டியலில் 5-வது நாடாக அந்நாடு இடம்பெற்றுள்ளது.
   
  தற்போதைய நிலவரப்படி, இங்கிலாந்தில் ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 377 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் புதிதாக 4 ஆயிரத்து 913 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

  வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 813 பேர் பலியாகியுள்ளனர். இதனால் இங்கிலாந்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்து 319 பேர் உயிரிழந்தனர்.  

  கொரோனாவுக்கு 20 ஆயிரத்துக்கும் அதிகமாக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள்:-

  1) அமெரிக்கா - 54,121
  2) இத்தாலி - 26,384
  3) ஸ்பெயின் - 22,902
  4) பிரான்ஸ் - 22,614
  5) இங்கிலாந்து - 20,319
  Next Story
  ×