search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடுதலாக ஆயிரம் மருத்துவத்துறையினர், ராணுவ அதிகாரிகள் நியூயார்க் அனுப்பப்படுவார்கள்
    X
    கூடுதலாக ஆயிரம் மருத்துவத்துறையினர், ராணுவ அதிகாரிகள் நியூயார்க் அனுப்பப்படுவார்கள்

    கூடுதலாக ஆயிரம் மருத்துவத்துறையினர், ராணுவ அதிகாரிகள் நியூயார்க் அனுப்பப்படுவார்கள்: டொனால்டு டிரம்ப்

    கொரோனா வைரஸ் தொற்று காட்டுத்தீயாக பரவி வரும் நிலையில் நியூயார்க் நகருக்கு கூடுதலாக ஆயிரம் மருத்துவத்துறையினரையும், ராணுவத்தையும் அனுப்ப இருக்கிறோம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. ஒவ்வொரு நாடுகளும் என்ன செய்ய வேண்டும் எனத் தெரியாமல் திணறி வருகின்றன. குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், அமெரிக்கா நாடுகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றன.

    0நாளுக்கு நாள் ஐந்நூறு பேருக்கு மேல் இறப்பதும், 30 ஆயிரம் பேருக்குமேல் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் உள்ளது. அமெரிக்காவில் இதுவரை மூன்று லட்சத்து 11 ஆயிரத்து 658 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8500 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் நியூயார்க் நகரத்தைச் சேர்ந்தவர்கள்.

    நியூயார்க்கில் நகரில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் டாக்டர்களால் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால் அவர்கள் சிகிச்சை அளிக்க பயப்படுகிறார்கள்.

    இந்நிலையில் மேலும் மருத்துவத்துறையைச் சேர்ந்த டாக்டர்கள், சுவாச நிபுணர்கள், நர்ஸ்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை நியூயார்க் நகருக்கு அனுப்பி வைக்கப்பட இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அத்துடன் ஆயிரம் ராணுவ வீரர்களையும் களம் இறக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    ‘‘நாங்கள் இதை செய்து கொண்டுதான் இருக்கிறோம். தற்போது கூடுதலாக செய்ய வேண்டியுள்ளது. இன்னும் அதிக அளவில் நியூயார்க் நகருக்கு தேவைப்படுகிறது. பாதுகாப்பு செயலாளர் ராணுவ அதிகாரிகள் அனுப்பப்படுவது குறித்து விளக்கம் அளிப்பார்’’ என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×