search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிங்கப்பூர் பிரதமர்
    X
    சிங்கப்பூர் பிரதமர்

    சிங்கப்பூரில் 7ம் தேதி முதல் ஒரு மாதம் ஊரடங்கு உத்தரவு

    கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக சிங்கப்பூரில் 7ம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    சிங்கப்பூர்:

    உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த, சமூக விலகலை கடைப்பிடிப்பதுதான் ஒரே வழி. இதற்காக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

    அவ்வகையில் சிங்கப்பூரில் வரும் 7-ம் தேதி முதல் ஒரு மாதம் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான உத்தரவை பிரதமர் லீ சியங் லூங் வெளியிட்டுள்ளார்.

    சிங்கப்பூரில் தற்போது வைரஸ் பாதிப்பு  கட்டுக்குள் இருந்தாலும், மக்கள் கண்டிப்பாக சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தி உள்ளார். நோய்வாய்ப்பட்டவர்கள் மட்டுமே மாஸ்க் அணிய வேண்டும் என்ற நிலையை மாற்றுவது குறித்து அரசாங்கம் பரிசீலனை செய்வதாகவும் அவர் கூறினார்.

    சிங்கப்பூரில் கொரோனோ பாதிப்பு எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. இன்றை 65 புதிய நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் கொரோனா பாதிப்பு 1114 ஆக உயர்ந்துள்ளது. 5 பேர் உயிரிழந்துள்ளனர். 
    Next Story
    ×