search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் - அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது

    கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    வாஷிங்டன்

    சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் உள்ள 190-க்கு மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இதனால் தற்போது வரையில் 7,82,000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அத்துடன், 37 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

    ஐரோப்பாவில் இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பலரும் கொரோனா தொற்றினால் அங்கு உயிரிழந்துள்ளனர்.

     உலக அளவில் அமெரிக்காவிலேயே கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ளது.

    அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 12 ஆயிரத்து 478 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதனால் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,61,000-ஐ கடந்துள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று அங்கு 271 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 3000-ஐ தாண்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×