search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிபர் கோத்தபய ராஜபக்சே
    X
    அதிபர் கோத்தபய ராஜபக்சே

    இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு - அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவிப்பு

    இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார்.
    கொழும்பு:

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில், கோத்தபய ராஜபக்சே அமோக வெற்றி பெற்றார். இதனைத்தொடர்ந்து அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சேவை பிரதமர் பதவியில் அமர வைத்தார்.

    இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதம் நிறைவடைய உள்ள நிலையில் முன்கூட்டியே கலைத்து, தேர்தல் நடத்த கோத்தபய ராஜபக்சே திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

    இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார். மேலும் ஏப்ரல் 25-ம் தேதி இலங்கை நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×