search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க அதிபர் டிரம்ப்
    X
    அமெரிக்க அதிபர் டிரம்ப்

    இந்தியாவில் 2 நாள் பயணம்- டிரம்ப் 24-ந்தேதி தாஜ்மகாலை பார்க்கிறார்

    2 நாள் பயணமாக இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை பார்க்கிறார்.

    ஆக்ரா:

    அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடக்கிறது. டொனால்டு டிரம்ப் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

    இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் 2 நாள் அரசு பயணமாக இந்தியா வருகிறார். வருகிற 24 மற்றும் 25-ந்தேதிகளில் அவர் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

    அப்போது இந்தியா- அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    டெல்லி மற்றும் அகமதாபாத்தில் டிரம்ப் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடக்கிறது. அகமதாபாத்தில் நடைபெறும் பிரமாண்ட நிகழ்ச்சியில் அவரும், மோடியும் உரையாற்ற உள்ளனர். மேலும் அங்குள்ள காந்தி ஆசிரமத்துக்கும் டிரம்ப் செல்கிறார்.

    இதற்கிடையே இந்தியா வரும் டிரம்ப் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை பார்க்கிறார். அவர் தனது மனைவி மெலானியாவுடன் தாஜ்மகால் செல்கிறார்.

    அவர் அங்கு செல்ல இருப்பது குறித்த அதிகாரப் பூர்வ தகவலை வெள்ளை மாளிகை வெளியிட வில்லை. ஆனாலும் இந்திய பயணத்தின் போது டிரம்ப் தாஜ்மகால் செல்வது உறுதியாகி விட்டது.

    டிரம்ப் 24-ந்தேதி மாலை 4.30 மணிக்கு அகமதாபாத்தில் இருந்து ஆக்ரா புறப்படுகிறார். தாஜ்மகாலை சுற்றி பார்த்த பிறகு அவர் அன்று மாலையே டெல்லி செல்கிறார். இரவில் அவர் மோடியுடன் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    தாஜ்மகால்

    டிரம்பின் சுற்றுப் பயணத்தில் முதலில் தாஜ்மகால் இடம்பெறவில்லை. தற்போது அவர் அங்கு செல்வதால் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க தூதரக அதிகாரிகள் ஆக்ரா சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்கிறார்கள்.

    இதற்கிடையே இந்திய சுற்றுப்பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாக டிரம்ப் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×