search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துபாய்
    X
    துபாய்

    துபாயிலும் கொரோனா வைரஸ் - அமீரக சுகாதாரத்துறை தகவல்

    உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசினால் ஐக்கிய அரபு அமீரகத்திலும் ஒரு சீனக்குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    துபாய்:

    சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. சுவாசக் கோளாறுகள் ஏற்படுத்தி உயிரிழப்பை உண்டாக்கும் இந்த வைரசினால் இதுவரை சீனாவில் 132 பேர் உயிரிழந்துள்ளனர். 

    சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவிய இந்த கொரோனா வைரஸ் ஜப்பான், அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, ஜெர்மனி, தைவான், மலேசியா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் பரவியுள்ளது. 

    இந்த வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க அனைத்து நாடுகளும் மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகியவை இந்த வைரஸ் நோய்க்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    கொரோனா வைரஸ்

    இந்நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகத்தில் சீனாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    ‘சீனாவின் வுகான் நகரிலிருந்து இங்கு வந்துள்ள குடும்பத்தினருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் தனி சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது அவர்களது உடல்நிலை நன்றாக உள்ளது’ என அமீரக சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
    Next Story
    ×