search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க தூதரகம் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்
    X
    அமெரிக்க தூதரகம் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்

    ஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல்

    ஈராக் நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே 3 ஏவுகணைகளை வீசி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
    பாக்தாத்:

    ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் உயர் பாதுகாப்பு நிறைந்த பசுமை மண்டல பகுதியில் அமெரிக்க தூதரகம் அமைந்துள்ளது. இதன் அருகே இன்று 3 ஏவுகணைகள் திடீரென வந்து விழுந்து வெடித்தன. இந்த தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

    ஏவுகணை தாக்குதலை அடுத்து போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டனர். ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்தன. 

    இந்த தாக்குதலை ஈரான் ஆதரவு பெற்ற துணை ராணுவ படை குழுக்கள் நடத்தியிருப்பதாக அமெரிக்கா குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது. சமீப காலங்களில் பசுமை மண்டல பகுதியில் இதுபோன்ற தாக்குதல்களை இந்த குழுவினர் நடத்தியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

    எனினும், இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.  அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் மூளும் சூழ்நிலை எழுந்துள்ள நிலையில், ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல்கள் நடந்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×