search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    பாகிஸ்தானுக்குள் சட்ட விரோதமாக நுழைந்த இந்தியர்கள் கைது
    X
    பாகிஸ்தானுக்குள் சட்ட விரோதமாக நுழைந்த இந்தியர்கள் கைது

    பாகிஸ்தானில் சட்ட விரோதமாக நுழைந்ததாக 2 இந்தியர்கள் கைது

    உரிய ஆவணங்கள் இன்றி சட்ட விரோதமாக பாகிஸ்தானுக்குள் நுழைந்ததாக இந்தியர்கள் இருவரை அதிகாரிகள் செய்தனர்.
    லாகூர்:

    பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்துக்கு உட்பட்ட பகவல்பூரில் நேற்று அந்த நாட்டு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி இந்தியர்கள் இருவர் தங்கியிருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, சட்ட விரோதமாக பாகிஸ்தானுக்குள் நுழைந்ததாக அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களில் ஒருவர் மத்திய பிரதேசத்தை சேர்ந்த பிரசாந்த் என்றும், மற்றொருவர் தெலுங்கானாவை சேர்ந்த தரிலால் என்றும் தெரியவந்துள்ளது. அவர்கள் எதற்காக பாகிஸ்தானுக்கு வந்தனர் என விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் என்ஜினீயர் என கூறப்படுகிறது. மேலும் அவர் பயங்கரவாத தாக்குதலுக்காக வந்திருக்கலாம் என பாகிஸ்தான் செய்தி நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.

    பாகிஸ்தானுக்குள் சட்ட விரோதமாக நுழைந்ததாக இந்தியர்கள் இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×