search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சஜித் பிரேமதாசா
    X
    சஜித் பிரேமதாசா

    இலங்கை அதிபர் தேர்தல் - ஆளும் கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா முன்னிலை

    இலங்கை அதிபர் தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளரான சஜித் பிரேமதாசா சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
    கொழும்பு:

    இலங்கையின் தற்போதைய அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் வரும் ஜனவரி மாதம் 9-ம் தேதி முடிகிறது. இதையொட்டி, அங்கு அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.

    அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. இந்த தேர்தலில் சுமார் 80 சதவீதம் வாக்குகள் பதிவானது. அங்கு பதிவான வாக்குகளை எண்ணும் பணி பலத்த பாதுகாப்புடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த தேர்தலில், பொது ஜன பெரமுனா கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் தம்பி கோத்தபய ராஜபக்சே மற்றும் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் மகனான சஜித் பிரேமதாசாவுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்து இரு கட்சி வேட்பாளர்களும் மாறி மாறி முன்னிலையில் இருந்து வருகின்றனர்.

    இந்நிலையில், காலை 7 மணி நிலவரப்படி, ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா முன்னிலையில் இருந்து வருகிறார். இவர் கோத்தபய ராஜபக்சேவை விட கூடுதலாக ஒரு லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.
    Next Story
    ×