search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாண்டா நாய்குட்டிகள்
    X
    பாண்டா நாய்குட்டிகள்

    சீனாவில் கவனம் ஈர்க்கும் ‘பாண்டா’ நாய்குட்டிகள்

    சீனாவில் வளர்ப்பு பிராணிகள் நிலையத்தில் பாண்டா கரடிகளை போன்ற உடல்வாகு கொண்ட நாய் குட்டிகள் மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
    பீஜிங்:

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் தலைநகர் செங்டு நகரில் வளர்ப்பு பிராணிகள் நிலையம் உள்ளது. இங்கு அந்த நாட்டின் தேசிய விலங்கான பாண்டா கரடிகள் ஏராளமாக வளர்க்கப்படுகின்றன. இந்த நிலையில் இந்த வளர்ப்பு பிராணிகள் நிலையத்தில் பாண்டா கரடிகளை போன்ற உடல்வாகு கொண்ட நாய் குட்டிகளை கொண்டு வந்து, அவற்றின் உடலில் வெள்ளை மற்றும் கருப்பு வண்ணம் பூசி அச்சு அசலாக பாண்டா கரடிகள் போலவே மாற்றி இருக்கிறார்கள்.

    இந்த ‘பாண்டா’ நாய்குட்டிகளின் படங்களையும், வீடியோவையும் வளர்ப்பு பிராணிகள் நிலையம் இணையத்தில் வெளியிட்டது. இது மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர்கள் வளர்ப்பு பிராணிகள் நிலையத்துக்கு வந்து, பாண்டா நாய்குட்டிகளை பார்த்து செல்கின்றனர். ‘பாண்டா’ நாய்குட்டிகள் ஒரு தரப்பு மக்களிடம் வரவேற்பை பெற்றாலும், விலங்குகள் நல ஆர்வலர்கள் வளர்ப்பு பிராணிகள் நிலையத்தின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். வண்ணம் பூசுவது நாயின் முடி மற்றும் தோலுக்கு தீங்கு விளைவிக்கும் என அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்

    Next Story
    ×