search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஹாமாஸ் நாட்டில் டொரியன் புயலால் பாதிக்கப்பட்ட பகுதி
    X
    பஹாமாஸ் நாட்டில் டொரியன் புயலால் பாதிக்கப்பட்ட பகுதி

    பஹாமாசை புரட்டிப்போட்ட டொரியன் புயல் - 7 பேர் பலி

    கரிபியன் பகுதிகளில் மையம் கொண்டிருந்த டொரியன் புயல் பஹாமாஸ் நாட்டை தாக்கியதில் 7 பேர் பலியாகினர்
    மெக்சிகோ:

    கரிபியன் பகுதிகளில் மையம் கொண்டிருந்த டொரியன் புயல் கடந்த வாரம் போர்டோ ரிகோ, வெர்ஜின் தீவுகள் போன்ற இடங்களை தாக்கியது. இதனால் கடும் மழையும் காற்றும் சுழன்றடித்ததால் அப்பகுதிகளில் அதிக அளவில் பொருட்சேதம் ஏற்பட்டது. இதையடுத்து அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் டொரியன் புயல் கரையை கடக்கும் மற்றும் பஹாமாஸ் நாட்டின் பகுதிகளை தாக்க வாய்ப்பு உள்ளது எனவும் கடந்த வெள்ளிக்கிழமையன்று தேசிய புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்தது. இதனால் புளோரிடா, ஜியார்ஜியா மாநிலங்களில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 

    இந்நிலையில் சக்திவாய்ந்த டொரியன் புயல் பஹாமாஸ் நாட்டை நேற்று தாக்கியது. கடுமையான காற்றுடன் பலத்த மழையும் பெய்தது. இந்த புயல் மழைக்கு 7 பேர் பலியாகி உள்ளனர். மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதாக அந்நாட்டு பிரதமர் மின்னிஸ் தெரிவித்துள்ளார்.  

    தற்போது, டொரியன் புயல் வடக்கு நோக்கி அமெரிக்காவின் கடற்கரை பகுதிகளை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக  கணிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×