search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புல்லட் ரெயிலில் பயணம் மேற்கொண்ட ராஜ்நாத் சிங்
    X
    புல்லட் ரெயிலில் பயணம் மேற்கொண்ட ராஜ்நாத் சிங்

    இந்தியாவின் புல்லட் ரெயில் திட்டம்: ஜப்பானில் பயணம் செய்து ராஜ்நாத் சிங் ஆய்வு

    அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றுள்ள மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அங்கு அதிநவீன போர் விமானத்தின் செயல்பாட்டை பார்வையிட்டும், புல்லட் ரெயிலில் பயணித்து ஆய்வு செய்தார்.
    டோக்கியோ:

    இந்தியா-ஜப்பான் இடையேயான வருடாந்திர பாதுகாப்பு மந்திரிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். 

    பாதுகாப்பு மந்திரிகள் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்த ராஜ்நாத் சிங் இருநாட்டு உறவு மற்றும் பாதுகாப்புத்துறையில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்.

    எப்-15 போர் விமானத்தை ஆய்வு செய்த ராஜ்நாத் சிங்

    இந்நிலையில், ராஜ்நாத் சிங் இன்று அந்நாட்டின் ஷின் யோகோஹாமா நகரில் இருந்து ஷின்கான்சென் புல்லட் ரெயில் மூலம் ஹமாமாஸ்சுவில் உள்ள ஜப்பான் விமானப்படை தளத்துக்கு சென்றார். அங்குள்ள ஜப்பான் நாட்டு விமானப்படை தளத்தை பார்வையிட்ட ராஜ்நாத் சிங் அதிநவீன எப்-15 போர் விமானத்தில் ஏறி அதன் செயல் திறனை ஆய்வு செய்தார்.      

    முன்னதாக ஜப்பான் கடற்படைக்கு சொந்தமான கப்பல் கட்டும் தளத்தையும் ராஜ்நாத் சிங் ஆய்வு செய்தார்.
    Next Story
    ×