search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இஸ்ரேல் விமானங்கள்
    X
    இஸ்ரேல் விமானங்கள்

    ஹமாஸ் ஆயுதத்தளங்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்

    ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹமாஸ் ஆயுதத்தளங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை வான்வெளி தாக்குதல் நடத்தியது.
    ஜெருசலேம்: 

    இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே நெடுங்காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. பாலஸ்தீனத்தை பொறுத்தவரை, அங்கு ஹமாஸ் இயக்கம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

    பாலஸ்தீன மக்களிடையே செல்வாக்கு பெற்ற அந்த இயக்கம் காஸா முனைப் பகுதியில் உள்ள எல்லையில் இருந்து இஸ்ரேல் ஆயுதத்தினர் மீது தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. 

    தாக்குதல் நடந்த பகுதி

    இதற்கிடையில், காஸா பகுதியில் இருந்து  ஹமாஸ் இயக்கத்தினர் நேற்று இரவு இஸ்ரேலின் தெற்கு எல்லையை குறிவைத்து மூன்று ராக்கெட்டுகளை ஏவினர். அதில் இரண்டு ராக்கெட்டுகள் இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்பு (டிரோன்) மூலம் தடுக்கப்பட்டது. ஆனால் மற்றொரு ராக்கெட் குடியிருப்பு பகுதியை தாக்கியதில் பெண் உள்பட 7 பேர் காயமடைந்தனர்.

    இந்நிலையில், ஹமாஸ் அமைப்பின் ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக காஸா பகுதியில் உள்ள அந்த அமைப்பின்  பல்வேறு ஆயுதத்தளங்களை குறிவைத்து  இஸ்ரேல் விமானப்படை இன்று வான்வெளி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் வடக்கு காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பின் ஆயுதத்தளங்கள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×