என் மலர்

  செய்திகள்

  மாதிரி படம்
  X
  மாதிரி படம்

  அமெரிக்காவில் பயங்கரம்: மர்ம நபர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் 4 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மர்ம நபர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.
  லாஸ் ஏஞ்சல்ஸ்:

  அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தின் தென்கிழக்கு பகுதியில் கார்டன் கிரோவ் நகரம் அமைந்துள்ளது. அந்நகரில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு அங்கிருந்த இரண்டு பேர்  மீது சரமாரியாக குத்தினார்.

  பின்னர், அப்பகுதியில் இருந்து தப்பி சென்ற அந்த நபர் அருகில் இருந்த உணவகம் மற்றும் பெட்ரோல் நிலையத்தில் இருந்த பொதுமக்கள் மீது கத்தியால் குத்தினார். இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.

  தாக்குதல் நடைபெற்ற பகுதி

  தகவலறிந்த போலீசார் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு 33 வயதான நபரை கைது செய்தனர். மேலும், இந்த கத்திக்குத்து தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

  Next Story
  ×