என் மலர்

  செய்திகள்

  மாதிரி புகைப்படம்
  X
  மாதிரி புகைப்படம்

  காங்கோவில் படகு கவிழ்ந்து விபத்து: 11 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காங்கோ நாட்டில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் மாயமான 50 பேரை தேடும் பணியில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
  கின்ஷாசா:

  மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவில் போதுமான சாலைவசதிகள் இல்லாத காரணத்தால் பெரும்பாலான மக்கள் படகு போக்குவரத்தையே பிரதானமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், அந்நாட்டின் ஹாசி பகுதியில் இருந்து தலைநகர் கின்ஷாசா நோக்கி லுகேனே ஆற்றில் படகு ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த படகு 77 பயணிகளோடு அதிக பாரம் கொண்ட சரக்குகளையும் ஏற்றி சென்றது. 

  அப்போது பாரம் தாங்காமல் படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படகில் இருந்த அனைவரும் தண்ணீரில் தத்தளித்தனர். இதையடுத்து ஆற்றின் சிக்கி தவித்த 16 பேர் தண்ணீரில் நீச்சல் அடித்து உயிருடன் கரையை அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் விபத்து நடந்த பகுதிக்கு சென்று தண்ணீரில் மூழ்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

  ஆனால் மீட்பு குழுவினர் வருவதற்கு முன்னர் தண்ணீரில் மூழ்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 50 பேர் மாயமாகியுள்ளதாகவும் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருவதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.   
  Next Story
  ×