search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தெரசா மே
    X
    தெரசா மே

    ராஜினாமா கடிதத்தை பிரிட்டன் அரசியிடம் அளித்தார் தெரசா மே

    பிரிட்டன் பிரதமர் தெரசா மே தனது ராஜினாமா கடிதத்தை அந்நாட்டின் அரசி இரண்டாம் எலிசபத்திடம் இன்று ஒப்படைத்தார்.
    லண்டன்:

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்துக்கு எம்.பி.க்களின் ஆதரவை பெற முடியாததால் பிரதமர் தெரசா மே, பதவி விலகுவதாக கடந்த மாதம் அறிவித்தார்.

    பிரிட்டன் நாட்டை பொருத்தவரை ஆளும் கட்சியின் தலைவர் பதவியை அலங்கரிப்பவரே, நாட்டின் பிரதமர் நாற்காலியிலும் அமர வைக்கப்படுவார். அதன்படி ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான போட்டி தொடங்கியது.
     
    இதில் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி போரிஸ் ஜான்சனுக்கும், தற்போதைய வெளியுறவுத்துறை மந்திரி ஜெராமி ஹண்ட்இடையே நேரடி போட்டி நிலவியது.

    கன்சர்வேட்டிவ் கட்சியின் 1 லட்சத்து 60 ஆயிரம் உறுப்பினர்களின் தபால் ஓட்டுகள்தான் கட்சியின் புதிய தலைவரை தீர்மானித்தன.

    பிரிட்டன் அரசி எலிசபெத், தெரசா மே (கோப்புப் படம்)

    உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்கு அனுப்பப்பட்ட வாக்குச்சீட்டுகளில் யாருக்கு வாக்கு அளிக்கிறோம் என்பதை குறிப்பிட்டு, கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு திருப்பி அனுப்பினர். வாக்குச்சீட்டுகளை திருப்பி அனுப்புவதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிந்தது.

    வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டன. அதன்படி, இங்கிலாந்தின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், மரபுகளின்படி இன்று பக்கிங்காம் அரண்மனைக்கு சென்ற தெரசா மே தனது ராஜினாமா கடிதத்தை அந்நாட்டின் அரசி இரண்டாம் எலிசபத்திடம் ஒப்படைத்தார் என பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
     
    Next Story
    ×