search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கை குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டனர்- ரணில் விக்ரமசிங்கே
    X

    இலங்கை குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டனர்- ரணில் விக்ரமசிங்கே

    இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் தொடர்புடைய அனைத்து பயங்கரவாதிகளும் கைது செய்யப்பட்டு விட்டனர் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
    கொழும்பு:

    இலங்கையில் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் பண்டிகையன்று தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. ஆனால் இதற்கு உள்நாட்டு பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (என்.டி.ஜே.) மீது இலங்கை அரசு குற்றம் சாட்டியது.

    இலங்கை தொடர் குண்டுவெடிப்புகளில் 258 பேர் பலியாகினர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் 9 பேர் தற்கொலை வெடிகுண்டுகளை வெடிக்க செய்துள்ளனர். என்.டி.ஜே. அமைப்பின் தலைவரான ஜஹ்ரான் ஹாசிம் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியாகி விட்டார்.

    இந்நிலையில், இலங்கையில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் தொடர்புடைய அனைத்து பயங்கரவாதிகளும் கைது செய்யப்பட்டு விட்டனர் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

    இலங்கையின் தெற்கே கல்லி நகரில் நடைபெற்ற கூட்டத்தில் அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ஜஹ்ரானின் குழுவை சேர்ந்த அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டனர் என போலீசாரிடம் இருந்து எனக்கு அறிக்கை வந்துள்ளது. அவருடன் தொடர்பு வைத்திருந்தவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. ஜஹ்ரானின் போதனை கூட்டங்களில் கலந்து கொண்டோரிடமும் விசாரிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×