search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெக்சிகோ அதிபர் தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் லோபஸ் ஆப்ரதோர் வரலாற்று வெற்றி
    X

    மெக்சிகோ அதிபர் தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் லோபஸ் ஆப்ரதோர் வரலாற்று வெற்றி

    மெக்சிகோவில் அதிபர் பதவிக்கு நேற்று நடந்த தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் லோபஸ் ஆப்ரதோர் 53 சதவிகித வாக்குகள் பெற்று வரலாற்று வெற்றி பெற்றுள்ளார். #MexicoElections #LopezObrador
    மெக்சிகோ சிட்டி:

    வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் அதிபர் பதவி, பாராளுமன்றம் மற்றும்  3 ஆயிரம் பிராந்திய பதவிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. தற்போதைய அதிபராக உள்ள பெனா நெய்டோ மீது ஊழல் குற்றச்சாட்டுகள் குவிந்துள்ளதால், அவர் சார்ந்துள்ள ஐஆர்பி கட்சி தோல்வியை தழுவும் என கருத்து கணிப்புகள் முன்னரே வெளியாகின.

    அதேபோல, வாக்கு எண்ணிக்கையில் அந்த கட்சி பின் தங்கியது. ஐஆர்பி கட்சியில் இருந்து பிரிந்து இடதுசாரி சித்தாந்தங்கள் கொண்ட தேசிய ரீஜெனரேசன் இயக்கம் தொடங்கிய லோபஸ் ஆப்ரதோர் இரண்டு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். அவருக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதே போல தேர்தல் முடிவுகள் எதிரொலித்தன.

    53 சதவிகித வாக்குகள் பெற்று அவர் முதலிடம் பிடித்துள்ளார். மெக்சிகோவை கடந்த ஒரு நூற்றாண்டாக ஆண்டுள்ள இரு கட்சிகளை தோற்கடித்தவர் என்ற வரலாற்று சாதனையை லோபஸ் ஆப்ரதோர் படைத்துள்ளார். மற்றொரு முக்கிய கட்சியான தேசிய ஆக்‌ஷன் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரிகார்டோ அனாயா 23 சதவிகித வாக்குகளுடன் இரண்டாமிடம் பிடித்துள்ளார்.

    ஊழல், வறுமை, போதை மாபியா ஆகியவற்றை ஒழிப்பதே தனது முதல் இலக்கு என லோபஸ் ஆப்ரதோர் தனது தேர்தல் வாக்குறுதியில் அளித்திருந்தார். அமெரிக்காவின் குடியேற்ற கொள்கையை கடுமையாக ஆப்ரதோர் விமர்சித்து வந்தாலும், இவரது வெற்றிக்கு டிரம்ப் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×