search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொடர்ந்து அரசியல் கொலைகள் - நகரத்தின் ஒட்டுமொத்த போலீசாரும் கூண்டோடு கைது
    X

    தொடர்ந்து அரசியல் கொலைகள் - நகரத்தின் ஒட்டுமொத்த போலீசாரும் கூண்டோடு கைது

    நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகள் தொடர்ந்து கொல்லப்பட்ட நிலையில், சந்தேகத்தின் பெயரில் நகர பாதுகாப்பு செயலாளரை சிறப்பு படையினர் கைது செய்வதை தடுத்த போலீசார் ஒட்டுமொத்தமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
    மெக்சிகோ:

    வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் வரும் ஜூலை 1-ம் தேதி பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. அதிபர், செனட்டர், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 3 ஆயிரம் பிராந்திய பதவிகளுக்கும் தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் அங்கு தொடர்ந்து அரசியல் கொலைகள் நடந்து வருகின்றன.

    போதை மாபியா ஆதிக்கம் கொண்ட நாடான மெக்சிகோவில் இது போன்ற அரசியல் கொலைகள் வழக்கமானது என்றாலும், சமீபத்தில் நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகள் கொல்லப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த வாரத்தில் மட்டும் மூன்று முக்கிய அரசியல்வாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    மிசோவ்கன் மாநிலத்தில் உள்ள ஒகாம்போ நகர மேயர் பதவிக்கு போட்டியிட்ட பெர்னாட்னோ ஜுவாரெஸ் என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலையில் சம்பந்தப்பட்ட கும்பலுக்கும் நகர பாதுகாப்பு செயலாளர் ஆஸ்கர் கார்சியாவுக்கும் தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

    இதனை அடுத்து, ஆஸ்காரை கைது செய்ய சிறப்பு படையினர் ஒகாம்போ நகருக்கு விரைந்தனர். ஆனால், ஒகாம்போ நகர போலீசார், சிறப்பு படையினரை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனை அடுத்து, நகர காவல் பணியில் உள்ள 27 போலீசார் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

    27 போலீசாருடன் ஆஸ்கர் கார்சியாவும் கைது செய்யப்பட்டார். 
    Next Story
    ×