என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 குழந்தைகள் பலி
Byமாலை மலர்14 May 2018 11:07 AM GMT (Updated: 14 May 2018 11:07 AM GMT)
அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி காங்கோவைச் சேர்ந்த 5 குழந்தைகள் உயிரிழந்தனர். #NorthCarolina #apartmentfire
வாஷிங்டன்:
அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி காங்கோவைச் சேர்ந்த 5 குழந்தைகள் உயிரிழந்தனர்.
காங்கோவில் இருந்து அகதிகளாக அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த குடும்பம் ஒன்று வடக்கு கரோலினா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தது. அவர்கள் தங்கியிருந்த வீட்டில் அதிகாலை 4 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். அந்த தீயில் சிக்கி 2 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த மூன்று குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்று குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் அந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்த 5 குழந்தைகளும் 8 வயதுக்கும் குறைவானவர்கள் என்று கூறப்படுகிறது. #NorthCarolina #apartmentfire
Next Story
×