search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடகொரியா கைது செய்த 3 பேரை விடுதலை செய்து அழைத்து வந்தார் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி
    X

    வடகொரியா கைது செய்த 3 பேரை விடுதலை செய்து அழைத்து வந்தார் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி

    அறிவிக்கப்படாத திடீர் பயணமாக இன்று வடகொரியா தலைநகர் பியாங்யாங் சென்ற அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்ப்பியோ அங்கு கைதான மூன்று அமெரிக்கர்களை விடுவித்து அழைத்து வந்தார். #Trump #MikePompeo #Pyongyang #3Americandetainees
    வாஷிங்டன்:  

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் நேருக்குநேர் சந்தித்துப் பேச ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையில், அமெரிக்காவை சேர்ந்த மூன்று பேரை வடகொரியா அதிகாரிகள் கைது செய்து வைத்துள்ளதாக தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

    இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்ப்பியோ அறிவிக்கப்படாத திடீர் பயணமாக இன்று வடகொரியா தலைநகர் பியாங்யாங் சென்றார்.

    வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன்-னை டிரம்ப் சந்தித்துப் பேசப்போகும் இடம் மற்றும் தேதி இந்த சந்திப்பின்போது உறுதிசெய்யப்பட்டது. மேலும், வடகொரியா கைது செய்துள்ள மூன்று அமெரிக்கர்களை விடுவிப்பது தொடர்பாகவும் மைக் பாம்ப்பியோ பேச்சுவார்த்தை நடத்தினார்.


    இதன் தொடர்ச்சியாக, அந்த மூன்று அமெரிக்கர்களும் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களுடன் மைக் பாம்ப்பியோ வாஷிங்டன் நகருக்கு புறப்பட்ட தகவலை அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

    இந்த தகவலால் தாம் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிட்ட டிரம்ப், இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் வாஷிங்டன் நகரில் உள்ள ஆண்டுரூஸ் விமானப்படை தளத்துக்கு வந்துசேரும் மைக் பாம்ப்பியோவை நேரில் சென்று வரவேற்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார். #Trump #MikePompeo #Pyongyang #3Americandetainees
    Next Story
    ×