என் மலர்

  செய்திகள்

  வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வாபஸ்
  X

  வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வாபஸ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
  கொழும்பு:

  இலங்கை வடக்கு மாகாணத்தில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய கல்வி அமைச்சர் குருகுலராஜா, விவசாயத்துறை அமைச்சர் ஐங்கரநேசன் ஆகியோர் பதவி விலகும்படி முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தினார். 

  முதலமைச்சரின் இந்த அதிரடி முடிவினால் ஆளும் தமிழ் தேசிய கூட்டணியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து, சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

  வட மாகாண சபையில் உள்ள மொத்தம் உள்ள 38 உறுப்பினர்களில் ஆளும் கட்சியைச் சேர்ந்த 16 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 6 உறுப்பினர்கள் சேர்ந்து கையெழுத்திட்டு, வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினால்ட் கூரேயிடம் தீர்மான கடிதத்தை ஒப்படைத்தனர். 

  அந்த தீர்மான கடிதத்தில், சி.வி.கே.சிவஞானத்தை புதிய முதலமைச்சராக நியமிக்கும்படி பரிந்துரை செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

  நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக கிளிநொச்சி, ஜாப்னா ஆகிய நகரங்களில் மாபெரும் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த போராங்களில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

  இந்நிலையில், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டணி உறுப்பினர்கள் தங்களது தீர்மானத்தை வாபஸ் பெறுவதாக கடந்த ஜூன் 19-ம் தேதி அறிவித்து இருந்த நிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக வாபஸ்பெற்றனர்.  விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக தொடர்ச்சியாக நடைபெற்ற போராட்டங்களே நம்பிக்கையில்லா தீர்மானம் வாபஸ் பெறப்பட்டதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இது மக்களுக்கு கிடைத்த வெற்றி என்று வடக்கு மாகாண ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

  இதனிடையே, விவசாயம் மற்றும் கல்வி துறைக்கு புதிய மந்திரிகள் நியமிக்கும் வரை தான் அந்த பொறுப்புகளை கவனிக்க உள்ளதாக ஆளுநர் கூரேவிடம் உறுதியளித்தார்.


  Next Story
  ×