என் மலர்tooltip icon

    உலகம்

    • ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தான் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக இந்தியா கூறுகிறது.
    • F-16 விமானத்தையும் சுட்டு வீழ்த்தியதாக இந்தியா தெரிவித்துள்ளது.

    ஜம்மு-காஷ்மீரில் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இந்தியா பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது.

    அதன்பின் மே 7 முதல் மே 10ஆம் தேதி வரை 88 மணி நேரம் இந்தியா- பாகிஸ்தான் இடையே சண்டை ஏற்பட்டது. பின்னர் இரு நாடுகளும் சண்டையை நிறுத்திக் கொள்ள சம்மதித்தன.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தினோம் என பாகிஸ்தான் தெரிவித்தது. இதில் ரஃபேல் விமானங்களும் அடங்கும் எனத் தெரிவித்தது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 5-க்கும் மேற்பட்ட விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன எனத் தெரிவித்தார். ஆனால் பாகிஸ்தான் போர் விமானங்களா? அலல்து இந்தயி போர் விமானங்களா? என்று அவர் குறிப்பிடவில்லை.

    இதற்கிடையே சில தினங்களுக்கு முன்னதாக இந்திய விமானப்படை தளபதி, பாகிஸ்தானைச் சேர்ந்து 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம். மேலும், ஒரு பெரிய விமானத்தை வீழ்த்தினோம் எனத் தெரிவித்தார்.

    இந்த நிலையில் ஆங்கிலப்பத்திரிகை ஒன்று அமெரிக்க அரசிடம், F-16 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதா? எனக் கேள்வி எழுப்பியது.

    இதற்கு அமெரிக்கா நேரடியாக பதில் அளிக்க மறுத்துவிட்டது. மேலும், F-16 விமானங்களைப் பற்றி விவாதிக்க பாகிஸ்தான் அரசாங்கத்திடம் நாங்கள் உங்களைப் பரிந்துரைக்கிறோம் எனக் கூறியுள்ளது.

    அமெரிக்க நிறுவனம்தான் பாகிஸ்தானுக்கு F-16 போர் விமானத்தை வழங்கியுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. தொழில்நுட்ப ஆதரவு குழுக்கள் என்ற குழு பாகிஸ்தானில் 24/7 என்ற அடிப்படையில் இயங்கி வருகிறது. இந்த குழு F-16 போர் விமானத்தின் முழு விவரத்தையும் ஒப்பந்த்தின்படி அறிந்து கொள்வது அவர்களது கடமையாகும். அப்படி இருக்கும்போது F-16 போர் விமானம் குறித்த தகவல்கள் அமெரிக்காவுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

    • இந்தியா- பாகிஸ்தானுடனான அமெரிக்காவின் உறவு மாறாமல் உள்ளது.
    • இந்தியா- பாகிஸ்தான் மோதலை தடுக்க அமெரிக்கா முயற்சிகளை மேற்கொண்டது.

    பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் சமீபத்தில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் சிந்து நதி குறுக்கே இந்தியா அணை கட்டினால் ஏவுகணைகளை வீசி அழிப்போம் என்று மிரட்டல் விடுத்தார்.

    இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூசிடம், பாகிஸ்தான் ராணுவ தளபதியின் அமெரிக்க பயணம் மற்றும் இந்தியாவுக்கு அவர் விடுத்த மிரட்டல் ஆகியவை பற்றி கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்கு பதிலளித்த டாமி புரூஸ், "இந்தியா- பாகிஸ்தானுடனான அமெரிக்காவின் உறவு மாறாமல் உள்ளது. பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுடன் எங்களுக்கு ஒரு அனுபவம் இருந்தது. இரு நாடுகள் இடையேயான மோதல் பயங்கரமாக வளர்ந்திருக்கலாம். இதை தடுக்க அமெரிக்கா முயற்சிகளை மேற்கொண்டது" என்றார்.

    • உக்ரைன் தனது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களிலிருந்து விலகாது. அது அரசியலமைப்பிற்கு முரணானது.
    • இது எதிர்கால ரஷிய படையெடுப்பிற்கு ஒரு ஊக்கமாக மட்டுமே செயல்படும்.

    ரஷியா- உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில் இப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.

    ரஷிய அதிபர் புதினுடன் வருகிற 15-ந்தேதி டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அமைதி ஒப்பந்தத்தின்படி சில நிலங்களை உக்ரைன் விட்டுகொடுக்க வேண்டியதிருக்கும். இரு நாடுகளும் நில பரிமாற்றங்கள் செய்து கொள்ள வேண்டும் என்று டிரம்ப் தெரிவித்தார்.

    இதற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எதிர்ப்பு தெரிவித்தார். இந்த நிலையில் ஜெலன்ஸ்கி கூறியதாவது:- போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் மீதமுள்ள 30 சதவீதத்திலிருந்து உக்ரைன் விலக வேண்டும் என்று ரஷிய அதிபர் புதின் விரும்புகிறார்.

    உக்ரைன் தனது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களிலிருந்து விலகாது. அது அரசியலமைப்பிற்கு முரணானது, எதிர்கால ரஷிய படையெடுப்பிற்கு ஒரு ஊக்கமாக மட்டுமே செயல்படும்.

    இவ்வாறு ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    • பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
    • பாகிஸ்தான் தண்ணீரை ஒரு சொட்டு கூட உங்களால் பறிக்க முடியாது என்றார்.

    இஸ்லாமாபாத்:

    சிந்து நதி நீர் ஒப்பந்த ரத்து விவகாரம் தொடர்பாக இந்தியாவுக்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர், பாகிஸ்தான் முன்னாள் மந்திரி பிலாவல் பூட்டோ ஆகியோர் மிரட்டல் விடுத்து இருந்தனர்.

    இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக, இஸ்லாமாபாத்தில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்ற ஷபாஸ் ஷெரீப் பேசியதாவது:

    எங்கள் தண்ணீரைத் தடுத்து நிறுத்துவதாக அச்சுறுத்தினால், பாகிஸ்தானின் தண்ணீரை ஒரு சொட்டு கூட உங்களால் பறிக்க முடியாது என்பதை எதிரியிடம் நான் சொல்ல விரும்புகிறேன்.

    இதுபோன்ற செயலை இந்தியா செய்ய முயற்சித்தால் உங்கள் காதுகளைப் பிடித்துக் கொண்டு இருக்க வேண்டிய அளவுக்கு மீண்டும் ஒரு பாடம் கற்பிக்கப்படும் என தெரிவித்தார்.

    • வியட்நாமில் நிலம் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இழப்பீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகளுக்கு உரிமை இல்லை.
    • 990 ஹெக்டேர் நிலம் வாழைப்பழங்கள், லாங்கன்கள் மற்றும் பல பயிர்களால் நிறைந்துள்ளது. இங்குள்ள அனைத்து விவசாயிகளும் தலைமுறை தலைமுறையாக இங்கு வசித்து வருகின்றனர்.

    வியட்நாமில் அமெரிக்க அதிபர் டிரம்ப் குடும்பத்தின் மூலம் அமைக்கப்படவுள்ள கோல்ஃப் கிளப் மைதானத்திற்காக 990 ஹெக்டேர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இதனால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு சொற்ப பணம் மற்றும் சில மாதங்களுக்கான அரிசி ரேஷனாக வழங்கப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். 

    இந்த கோல்ஃப் மைதான திட்டத்தை Kinhbac City என்ற வியட்நாம் நிறுவனம், டிரம்ப் நிறுவனத்திற்கு $5 மில்லியன் உரிம கட்டணம் செலுத்தி செயல்படுத்த உள்ளது.

    டிரம்பின் இந்த ஒப்பந்தம் வியட்நாம் மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது

    அதிகாரிகள், ஒரு சதுர மீட்டருக்கு $12 முதல் $30 வரை இழப்பீடு தருவதாக தெரிவித்துள்ளனர்.

    வியட்நாமில் நிலம் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இழப்பீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகளுக்கு உரிமை இல்லை.

    ஹங் யென் மாகாணத்தில் உள்ள ஒரு விவசாயிக்கு, 200 சதுர மீட்டர் நிலத்திற்கு $3,200 மற்றும் சில மாதங்களுக்கு அரிசி மட்டுமே இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. இது வியட்நாமில் ஒரு வருட சராசரி சம்பளத்தை விடக் குறைவு.

    990 ஹெக்டேர் நிலம் வாழைப்பழங்கள், லாங்கன்கள் மற்றும் பல பயிர்களால் நிறைந்துள்ளது. இங்குள்ள அனைத்து விவசாயிகளும் தலைமுறை தலைமுறையாக இங்கு வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஆடம்பர விளையாட்டுக்காக அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுவதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டங்கள் எழுந்துள்ளன. 

    • சமீபத்திய ஆறு வயது இந்திய சிறுமியை அந்நாட்டை விட்டு வெளியேறும்படி சிறுவர் கும்பல் ஒன்று தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
    • இந்திய சமூகத்தின் நேர்மறையான பங்களிப்பைக் கெடுக்கும் என்று மைக்கேல் எச்சரித்தார்.

    அயர்லாந்தில், இந்திய சமூகத்தினரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் கடந்த ஒரு மாதத்தில் அதிகரித்துள்ளன. ஜூலை மாதத்தில் மட்டும் 3 இந்தியர்கள் மீது இனவெறி தாக்குதல் நடந்துள்ளனது. 

    இந்தத் தாக்குதல்களை அயர்லாந்து அதிபர் மைக்கேல் டி ஹிக்கின்ஸ் கண்டித்துள்ளார்.

    செவ்வாயன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், மைக்கேல் டி ஹிக்கின்ஸ், இந்திய சமூகம் அயர்லாந்தின் மருத்துவம், செவிலியர், பராமரிப்பு, கலாச்சாரம், வணிகம் மற்றும் தொழில்முனைவு போன்ற பல துறைகளுக்கு விலைமதிப்பற்ற பங்களிப்பைச் செய்துள்ளது.

    இந்திய சமூகத்தினர் மீதான சமீபத்திய தாக்குதல்கள் அயர்லாந்தின் மதிப்புகளுக்கு முரணானவை என்றும், அவை கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

    சமீபத்திய ஆறு வயது இந்திய சிறுமியை அந்நாட்டை விட்டு வெளியேறும்படி சிறுவர் கும்பல் ஒன்று தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

    இதுபோன்ற செயல்கள் முழு சமூகத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என்றும், இந்திய சமூகத்தின் நேர்மறையான பங்களிப்பைக் கெடுக்கும் என்று மைக்கேல் எச்சரித்தார்.

    தாக்குதல்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, டூப்ளினில் உள்ள இந்திய தூதரகம் அதன் குடிமக்களுக்கு ஆலோசனைகளை வழங்கி, அவசர உதவி எண்களைப் பகிர்ந்துள்ளது.   

    • 'ஆபரேஷன் ரைசிங் லயன்' என்ற பெயரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
    • இஸ்ரேலுக்காக உளவுப் பார்த்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட 7 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    'ஆபரேஷன் ரைசிங் லயன்' என்ற பெயரில் கடந்த ஜூன் 13 அன்று ரானின் ராணுவத் தளவாடங்கள், அணுசக்தி கட்டமைப்புகள் ஆகியவற்றின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

    இதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையில் ஏற்பட்ட மோதல் 12-ம் நாளில் ஜூன் 24 அன்று போர்நிறுத்தம் மூலம் முடிவுக்கு வந்தது.

    இந்நிலையில் இஸ்ரேலுடன் நடைபெற்ற போரின்போது, சந்தேகத்தின் அடிப்படையில் 21,000 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.

    சுமார் 260-க்கும் மேற்பட்டோர் உளவாளிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும், 172 பேர் சட்டவிரோதமாக படம் பிடித்ததற்காகவும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரானில் கடந்த ஜூன் மாதம் மட்டும், இஸ்ரேல், ஈரான், உளவாளிஇஸ்ரேலுக்காக உளவுப் பார்த்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட 7 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    • லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் வெடித்தது.
    • 2019 க்குப் பிறகு சீனாவிற்கு மோடி மேற்கொள்ளும் முதல் பயணமாகும்.

    அடுத்த மாத தொடக்கத்தில் இந்தியாவும் சீனாவும் நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்கக்கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ போன்ற விமான நிறுவனங்கள் குறுகிய காலத்தில் சீனாவிற்கு விமானங்களை இயக்க தயாராக இருக்குமாறு இந்திய அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

    முன்னதாக கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி விமான இணைப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

    ஜூன் 2020 இல் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீன மற்றும் இந்திய  ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த மோதலுக்குப் பிறகு இந்தியா-சீனா உறவுகள் விரிசல் அடைந்தன.

    இந்நிலையில் இந்தியா மீதான டிரம்ப் உடைய 50 சதவீத வரிவிதிப்பு இந்தியாவையும் சீனாவையும் ஒரே கோட்டில் நிறுத்தியுள்ளன.

    இந்த மாத இறுதியில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டிற்காக பிரதமர் மோடி சீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். இது 2019 க்குப் பிறகு சீனாவிற்கு அவர் மேற்கொள்ளும் முதல் பயணமாகும்.

    • 103 குழந்தைகள் உட்பட பட்டினியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 227 ஆக உயர்ந்துள்ளது.
    • காசா மருத்துவமனை மீது நடந்த தாக்குதலில் 5 அல் ஜசீரா பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டது இஸ்ரேலுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

    காசாவில், கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய தாக்குதல்களில் உணவுக்காக காத்திருந்த 31 பேர் உட்பட 89 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 513 பேர் காயமடைந்துள்ளனர்.

    கடுமையான பசியால் வாடும் காசாவில் இரண்டு குழந்தைகள் உட்பட மேலும் ஐந்து பாலஸ்தீனியர்கள் இறந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

    இதன் மூலம்103 குழந்தைகள் உட்பட பட்டினியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 227 ஆக உயர்ந்துள்ளது.

    இதற்கிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை காசா மருத்துவமனை மீது நடந்த தாக்குதலில் 5 அல் ஜசீரா பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டது சர்வதேச அளவில் இஸ்ரேலுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • இந்த அகதிகள் முகாமில் சுமார் 450,000 அகதிகள் தங்கியுள்ளனர்.
    • அரசு படைகளுக்கு எதிராக இயங்கி வரும் துணை ராணுவ படை (RSF) இந்தத் தாக்குதலை நடத்தியது.

    சூடானில் அகதிகள் முகாம் மீது துணை ராணுவ படைகள் நடத்திய தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர். 19 பேர் காயமடைந்தனர்.

    சூடானில் வடக்கு டார்பூர் மாகாணத்தின் அல்-ஃபாஷிருக்கு அருகிலுள்ள அகதிகள் முகாமான அபு ஷோக் முகாம் மீது திங்கள்கிழமை இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

    அரசு படைகளுக்கு எதிராக இயங்கி வரும் துணை ராணுவ படை (RSF) இந்தத் தாக்குதலை நடத்தியது.

    இந்த அகதிகள் முகாமில் சுமார் 450,000 அகதிகள் தங்கியுள்ளனர். இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள இந்த முகாம் கடந்த காலங்களிலிலும் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது.

    அரசு படைகள் மற்றும் ஆர்எஸ்எப் இடையே நடந்து வரும் உள்நாட்டு போரில் லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து இதுபோன்ற முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • காவல் நிலையம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு படை முகாம்கள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர்.
    • சமீப காலங்களில் நடந்த மிக மோசமான தாக்குதல் இது.

    பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 9 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    நேற்று, வாஷுக் மாவட்டத்தில், உள்ளூர் காவல் நிலையம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு படை முகாம்கள் மீது கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர்.

    மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பாதுகாப்புப் படையினர் கடந்து சென்றபோது இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

    சமீப காலங்களில் நடந்த மிக மோசமான தாக்குதல் இது. இந்தத் தாக்குதலில் ஒன்பது வீரர்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்" என்று தெரிவித்தார். 

    பலுசிஸ்தானில் வன்முறைத் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

    சமீபத்தில், கராச்சியில் இருந்து குவெட்டாவுக்குச் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் மூன்று பயணிகள் கொல்லப்பட்டனர், மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

    கில்லா அப்துல்லா மாவட்டத்தில் உள்ள ஒரு சந்தையிலும் குண்டு வீசப்பட்டது. இதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர். 

    • அவர்களின் அலுவலகங்களிலும், வசிக்கும் வீடுகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • , எதிர்காலத்தில் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடும் என்ற பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் தெரிவித்தார்.

    பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக பிரதிநிதிகளுக்கு தண்ணீர் மற்றும் சமையல் எரிவாயு இணைப்புகளை பாகிஸ்தான் நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இஸ்லாமாபாத்தில் பணியாற்றும் இந்திய தூதர்கள் மீதான கட்டுப்பாடுகளை பாகிஸ்தான் தீவிரப்படுத்தியுள்ளது. அவர்களின் அலுவலகங்களிலும், அவர்கள் வசிக்கும் வீடுகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    தகவலின்படி, ஜூன் மாதம் முதல் இந்திய தூதர்களின் வீடுகளுக்கு செய்தித்தாள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், பாகிஸ்தான் தூதர்களுக்கு செய்தித்தாள்களை வழங்குவதையும் இந்தியா நிறுத்தியுள்ளது.

    இதற்கிடையில், எதிர்காலத்தில் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடும் என்ற பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் கூறியதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    ×