என் மலர்
உலகம்
- இன்று பாகிஸ்தானியர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர்.
- ராணுவத்தின் போர் திறனை மேலும் மேம்படுத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், இந்தியாவில் இருந்து பிரிந்து சென்ற பாகிஸ்தான் ஆகஸ்ட் 14ஆம் தேதி சுதந்திர தினமாக கொண்டாடுகிறது.
அவ்வ்கையில் இன்று பாகிஸ்தானியர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தின் போர் திறனை மேலும் மேம்படுத்த 'ராணுவ ஏவுகணை படை' என்ற தனி ராணுவப் பிரிவை உருவாக்குவதாக அந்நாட்டுப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இன்று அறிவித்துள்ளார். .
இந்தியா உடனான சமீபத்திய மோதலின் எதிரொலியால், ஏவுகணைத் திறனை அதிகரிக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- இன்று பாகிஸ்தானியர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர்.
- பாகிஸ்தானின் சுதந்திர தினத்துக்கு அமெரிக்கா வாழ்த்து தெரிவித்துள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், இந்தியாவில் இருந்து பிரிந்து சென்ற பாகிஸ்தான் ஆகஸ்ட் 14ஆம் தேதி சுதந்திர தினமாக கொண்டாடுகிறது.
அவ்வ்கையில் இன்று பாகிஸ்தானியர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர். பாகிஸ்தானின் சுதந்திர தினத்துக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் வர்த்தகத்திலும் பாகிஸ்தானின் ஈடுபாட்டை அமெரிக்கா மிகவும் பாராட்டுகிறது. கனிமங்கள், ஹைட்ரோகார்பன் போன்ற துறைகளில் இருநாடுகளின் புதிய ஒத்துழைப்பின் மூலம் வளமான எதிர்காலத்தை உருவாக்க அமெரிக்கா எதிர்நோக்கியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு 50% வரிவித்துள்ள அமெரிக்கா பாகிஸ்தானிடம் தொடர்ந்து நெருக்கம் காட்டி வருகிறது.
பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் சமீபத்தில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் சிந்து நதி குறுக்கே இந்தியா அணை கட்டினால் ஏவுகணைகளை வீசி அழிப்போம் என்று மிரட்டல் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அலாஸ்காவில் டிரம்ப்- புதின் சந்திப்பு நாளை நடைபெறுகிறது.
- உக்ரைன்- ரஷியா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பு.
உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இன்னும் இரு நாடுகளுக்கு இடையிலான போர் முடிவுக்கு வரவில்லை. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறார்.
இதன்தொடர்ச்சியாக நாளை இருவரும் சந்தித்து பேச இருக்கிறார்கள். அப்போது ரஷியா- உக்ரைன் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை சந்திப்புக்குப்பின் உக்ரைன் போரை புதின் தொடர்ந்து நடத்தினால், அங்கோ (ரஷியாவுக்கு) மிகக் கடுமையான விளைவுகள் இருக்கும் என டெனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாட்டு தலைவர்களுடன் டொனால்டு டிரம்ப் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது, அலாஸ்காவில் நடைபெறும் அமெரிக்கா- ரஷியா மாநாட்டின்போது, போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற அமெரிக்க விரும்புகிறது என்பதை தெளிவாக டிரம்ப் கூறியதாக பிரான் அதிபர் மெக்ரான் தெரிவித்துள்ளார்.
- பாகிஸ்தானில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.
- துப்பாக்கியால் சுட்டு சுதந்திர தினம் கொண்டாடப்பட்டதில் விபரீதம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், இந்தியாவில் இருந்து பிரிந்து சென்ற பாகிஸ்தான் ஆகஸ்ட் 14ஆம் தேதி சுதந்திர தினமாக கொண்டாடுகிறது.
ஆகஸ்ட் 14ஆம் தேதி (இன்று) பிறந்ததும் பாகிஸ்தானியர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர். சில இடங்களில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாடப்பட்டுள்ளது. இந்த பொறுப்பற்ற நடவடிக்கையால் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானின் கராச்சியில் பொறுப்பற்ற முறையில் துப்பாக்கியால் சுட்டு சுதந்திர தினத்தை கொண்டாடிய போது 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 8 வயது சிறுமி மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர் ஒருவர் உயிரிழந்தனர். அத்துடன் 60 பேர் காயம் அடைந்துள்ளனர்.
கராச்சி முழுவதும் இந்த விபரீதம் நடைபெற்றுள்ளது. சிறுமி அசிசாபாத்தில் குண்டு பாய்ந்து உயிரிழந்த நிலையில், கோரங்கி என்ற இடத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
மீட்புப்படை அதிகாரிகள், இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு பொறுப்பற்ற இது அபாயகரமானது எனத் தெரிவித்துள்ளனர். மேலும், பொதுமக்கள் பாதுகாப்பான வகையில் சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
- காவல் நிலையம் மீது அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் தாக்குதல்.
- போலீசார் பதிலடி தாக்குதல் நடத்தியதால் பயங்கர சண்டை நடைபெற்றது.
வடமேற்கு பாகிஸ்தானின் பெஷாவர் புறநகர்ப் பகுதியில் உள்ள காவல்நிலையம் மீது அடையாளம் தெரியாக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் கான்ஸ்டபிள் உயிரிழந்த நிலையில், அதிகாரி ஒருவர் காயம் அடைந்துள்ளார்.
பெஷாவரில் இருந்து தென்மேற்கே 30 கி.மீ. தூரத்தில் உள்ள ஹசன் கெல் காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தினர். உடனடியாக போலீசார் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு, பதிலடி கொடுத்தனர். இதனால் கடுமையாக துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
இதில் அபு பக்கர் என்ற கான்ஸ்டபிள் பலியானார். ஹரூன் என்ற அதிகாரி காயம் அடைந்தார். தாக்குதல் நடத்தப்பட்ட இடம் உஷார் படுத்தப்பட்டு, பயங்கரவாதிகளை வீழ்த்த போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- ரியோ டி லாஸ் சைனாஸ் பள்ளத்தாக்கில் விஞ்ஞானிகள் புதைபடிவத்தைக் கண்டுபிடித்தனர்.
- இந்த விலங்குகள் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போயிருக்கலாம்
74 மில்லியன் (7.4 கோடி) ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்களுடன் சேர்ந்து வாழ்ந்த மிகச்சிறிய பாலூட்டியின் புதைபடிவத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
தென் அமெரிக்காவின் சிலி நாட்டில் 40 கிராமுக்கும் குறைவான எடையுள்ள ஒரு சிறிய பாலூட்டி (mammal) உயிரினத்தின் உடல் பாகம் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு கடைவாய்ப்பல் உட்பட தாடை எலும்பின் ஒரு பகுதியாக இருக்கும் புதைப்படிவம் கிடைத்துள்ளது.
சிலியின் மாகெல்லன் பகுதியில் உள்ள ரியோ டி லாஸ் சைனாஸ் பள்ளத்தாக்கில் விஞ்ஞானிகள் புதைபடிவத்தைக் கண்டுபிடித்தனர்.
சிலி பல்கலைக்கழகம் மற்றும் சிலியில் உள்ள மில்லினியம் நியூக்ளியஸ் ஆராய்ச்சி மையம் நடத்திய இந்த ஆராய்ச்சி பிரிட்டிஷ் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
டைனோசர்களுடன் சேர்ந்து வாழ்ந்த இந்த விலங்குகள் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போயிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இது எலியை விட சிறிய பாலூட்டியாகும்.
இது பிளாட்டிபஸைப் போன்ற முட்டையிடும் உயிரினம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
அல்லது கங்காருவைப் போல அதன் குஞ்சுகளை அதன் உடலின் ஒரு பை போன்ற பகுதியில் வைத்திருக்கும் ஒரு விலங்காக இருந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
அதன் பற்களிலிருந்து, இது கடினமான காய்கறிகள் அல்லது நண்டுகளை உண்ணும் ஒரு விலங்கு என்பதை அறிய முடிகிறது.
- ஒரு படகில் நீர் கசியத் தொடங்கியதால், அனைவரும் மற்றொரு படகிற்கு மாறியுள்ளனர்.
- மத்தியதரைக் கடலைக் கடக்க முயன்றதில் இதுவரை 675 பேர் உயிரிழந்துள்ளனர்.
இத்தாலியின் தெற்குப் பகுதியில் உள்ள லம்பேடுசா தீவுக்கு அருகே அகதிகள் சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 26 பேர் உயிரிழந்தனர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
லிபியாவில் இருந்து இரண்டு படகுகளில் அகதிகள் பயணித்துள்ளனர். ஒரு படகில் நீர் கசியத் தொடங்கியதால், அனைவரும் மற்றொரு படகிற்கு மாறியுள்ளனர்.
ஆனால், அந்தப் படகு கடல் சீற்றம் காரணமாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தாலிய கடலோர காவல்படையினர் ஐந்து கப்பல்கள், இரண்டு விமானங்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஐ.நா. அகதிகள் முகமையின் (UNHCR) தகவல்படி, படகில் சுமார் 92 முதல் 97 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுவரை 60 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்த ஆண்டு மத்தியதரைக் கடலைக் கடக்க முயன்றதில் இதுவரை 675 பேர் உயிரிழந்துள்ளதாக UNHCR-ன் இத்தாலிய செய்தித் தொடர்பாளர் பிலிப்போ உங்காறோ தெரிவித்தார்.
- அந்தப் பகுதியில் ஆயிரக்கணக்கான சிறிய நில அதிர்வுகள் ஏற்பட்டதாக நில அதிர்வு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- நிலநடுக்கத்தின் தாக்கம் 1,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நில அதிர்வு நிலையங்களாலும் பதிவு செய்யப்பட்டது.
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் தென்கிழக்கு பகுதியில் ட்ரேசி ஆர்ம் என்ற பகுதி உள்ளது.
இங்கு மலைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் அதிகம் உள்ளன.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு நிலச்சரிவு ஏற்பட்டு மலையின் ஒரு பெரிய பகுதி கடலில் சரிந்து விழுந்தது. இதனால் சுமார் 100 அடி உயரத்துக்கு பிரம்மாண்டமான சுனாமி அலைகள் உருவாகி கடற்கரை பகுதிகளை மூழ்கடித்தன.
இது ஒரு அரிய மற்றும் பயங்கரமான புவியியல் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலச்சரிவு ஏற்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, அந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கானது முதல் ஆயிரக்கணக்கான சிறிய நில அதிர்வுகள் ஏற்பட்டதாக நில அதிர்வு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் 1,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நில அதிர்வு நிலையங்களாலும் பதிவு செய்யப்பட்டது.
- உணவுக்காகக் காத்திருந்தபோது 21 பேர் கொல்லப்பட்டனர்.
- பட்டினியால் உயிரிழந்தவர்களில் 106 குழந்தைகள் அடங்குவர்.
பாலஸ்தீன நாட்டின் முக்கிய நகரமான காசாவில் இஸ்ரேல் ராணுவம் நேற்று (புதன்கிழமை) ஒரே நாளில் 123 பேரை கொன்று குவித்துள்ளது.
ஜைடவுன் பகுதியில் நடந்த கடுமையான குண்டுவீச்சில் 12 பேர் கொல்லப்பட்டனர். சப்ரா மற்றும் ஷேக் ரத்வானிலும் தாக்குதல்கள் நடந்தன. அங்கு உணவுக்காகக் காத்திருந்தபோது 21 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே நேற்று காசாவில் மூன்று குழந்தைகள் உட்பட மேலும் எட்டு பேர் பட்டினியால் உயிரிழந்துள்ளனர்.
இதன் மூலம் காசாவில் பட்டினியால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 235 ஆக உயர்ந்துள்ளது. இதில் 106 குழந்தைகள் அடங்குவர்.
இரண்டு ஆண்டுகளாக நடந்து வரும் இந்த போரில், இதுவரை 61,722 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலால் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பது குறித்து எகிப்து, கத்தார், மற்றும் அமெரிக்கா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இதற்கிடையே, இஸ்ரேல் காசா நகரை முழுமையாகக் கைப்பற்ற திட்டமிட்டுள்ளது.
- நான் நகர முயன்றபோது, மேலும் இருவர் வந்து என்னை அடிக்கத் தொடங்கினர்.
- அங்கிருத்தவர்கள் யாரும் அவர்களை தடுக்கவில்ல.
அயர்லாந்தில், இந்திய சமூகத்தினரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் கடந்த ஒரு மாதத்தில் அதிகரித்துள்ளன. ஜூலை மாதத்தில் மட்டும் 3 இந்தியர்கள் மீது இனவெறி தாக்குதல் நடந்துள்ளனது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகர் டூப்லினில் மூன்று இளைஞர்களால் ஒரு இந்தியர் தாக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மாலை 5:30 மணியளவில் ஃபேர்வியூ பார்க்கில் நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தில் இந்தியர் படுகாயமடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் எட்டு தையல்கள் போடப்பட்டன.
தனக்கு நேர்ந்ததை விவரித்த பாதிக்கப்பட்டவர், "நான் பூங்காவிலிருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, மின்சார ஸ்கூட்டரில் வந்த ஒரு இளைஞன் என் அருகில் வந்து என் வயிற்றில் உதைத்தான்.
நான் நகர முயன்றபோது, மேலும் இருவர் வந்து என்னை அடிக்கத் தொடங்கினர்.
நான் தரையில் விழுந்த பிறகும் அவர்கள் என்னைத் தொடர்ந்து தாக்கினர். அவர்களில் ஒருவர் தனது ஸ்ட்டீல் தண்ணீர் பாட்டிலால் என் கண்ணில் அடித்தார்" என்று தெரிவித்தார்.
மேலும் அங்கிருத்தவர்கள் யாரும் அவர்களை தடுக்கவில்லை என்றும் 2 இளைஞர்கள் மட்டும் தனக்கு உதவி செய்து காவல்துறைக்கு தகவல் அளித்ததாகவும் பாதிக்கப்பட்டவர் கூறினார். சம்பவம் குறித்து தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தத் தாக்குதலை அயர்லாந்து அதிபர் மைக்கேல் டி. ஹிக்கின்ஸ் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், வரும் நாட்களில் இந்தியா திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக 6 வயது இந்திய சிறுமி, சிறுவர்கள் கும்பலால், " உனது நாட்டுக்கே திரும்பிப் போ' என கூறி தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- இது வெறும் ஒரு சாதாரண நாசவேலைச் செயல் மட்டுமல்ல, வேண்டுமென்றே குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்று கூறியது.
- அமெரிக்காவில் இந்து கோவில்கள் தாக்கப்படுவது இந்த ஆண்டு இதோடு நான்காவது முறை ஆகும்.
அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.
கலிபோர்னியாவின் நியூவார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சுவாமிநாராயண் கோவிலில் தாக்குதல் நடத்தப்பட்டது.
காலிஸ்தானி பிரிவினைவாதி ஜர்னைல் சிங் பிந்ரன்வாலே-வை புகழ்ந்து இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் மற்றும் கிராஃபிட்டிகள் கோயிலின் வெளிப்புறச் சுவர்களில் வரையப்பட்டுள்ளன.

இதை கவனித்த கோயில் நிர்வாகிகள் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்திற்கு பதிலளித்த நியூவார்க் காவல் துறை, இது வெறும் ஒரு சாதாரண நாசவேலைச் செயல் மட்டுமல்ல, வேண்டுமென்றே குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்று கூறியது.
இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்திய சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்தும் இத்தகைய செயல்களை பொறுத்துக்கொள்ள முடியாது என சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் தெரிவித்தது.
அமெரிக்காவில் இந்து கோவில்கள் தாக்கப்படுவது இந்த ஆண்டு இதோடு நான்காவது முறை ஆகும்.
- அண்மையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷியா சென்றிருந்தார்.
- பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ரஷிய அதிபர் புதின் இந்த வருட இறுதிக்குள் இந்தியாவுக்கு வர இருக்கிறார்.
ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவதால் அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்ததில் இருந்து சர்வதேச அரசியலில் இந்தியாவின் நகர்வுகள் மாறி வருகின்றன.
ரஷியா - இந்தியா இரு நாடுகளுக்கும் இடையிலான உயர் மட்ட சந்திப்புகள் மற்றும் வருகைகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
அண்மையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷியா சென்றிருந்தார்.
இந்த சூழலில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இடையே மற்றொரு முக்கிய சந்திப்பு நடைபெற உள்ளது.
இந்த மாதம் ஆகஸ்ட் 21 ஆம் தேதி மாஸ்கோவில் இருவரும் சந்திப்பார்கள். இதை ரஷிய வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது.
அறிக்கையில், இரு தலைவர்களும் இருதரப்பு பிரச்சினைகள் மற்றும் சர்வதேச மன்றங்களில் ஒத்துழைப்பு குறித்து விவாதிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த மாதம் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாடு மற்றும் ஜூலை 15 அன்று நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் போது இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு மார்ச் 7 ஆம் தேதி, இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரியும் மாஸ்கோவிற்கு விஜயம் செய்து ரஷிய துணை வெளியுறவு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ரஷிய அதிபர் புதின் இந்த வருட இறுதிக்குள் இந்தியாவுக்கு வர இருக்கிறார்.






