என் மலர்
உலகம்
- நேபாள உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
- இதையடுத்து, சமூக ஊடகங்களுக்கான தடை நள்ளிரவில் நீக்கப்பட்டது.
காத்மண்டு:
நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யத் தவறிய இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது.
நேபாளத்தில் விதிக்கப்பட்ட இந்த தடையை எதிர்த்து நேற்று போராட்டம் வெடித்தது. இதன் எதிரொலியாக, நேபாள உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, சமூக ஊடகங்களுக்கான தடை நள்ளிரவில் நீக்கப்பட்டது.
இதற்கிடையே, நேபாள பிரதமர் சர்மா ஒலி பதவி விலகக் கோரி இளைஞர்கள் 2 ஆம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நேபாள நாட்டின் அதிபர் மற்றும் பிரதமர் இல்லங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். பாராளுமன்ற கட்டிடத்துக்கு தீ வைத்தனர். இதயடுட்து, பாராளுமன்றம் முழுவதும் கரும் புகை சூழ்ந்தது.
இதேபோல், விமான நிலையம் அருகிலும் தீ வைத்ததால், விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.
- ஊழியர்கள் 500 கிராம் எடையை குறைத்தால் நிறுவனம் இந்திய மதிப்பில் ரூ.6,100 வழங்கியுள்ளது.
- இளம்பெண் ஒருவர் 90 நாட்களில் 20 கிலோ எடையை குறைத்து, ரூ.2.47 லட்சம் பெற்றுள்ளார்.
சீனாவில் Arashi Vision Inc என்ற நிறுவனத்தில் உடல் எடையை குறைக்கும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
ஊழியர்கள் 500 கிராம் எடையை குறைத்தால் நிறுவனம் இந்திய மதிப்பில் ரூ.6,100 வழங்கியுள்ளது.
இந்த சவாலில் பங்கேற்ற இளம்பெண் ஒருவர் 90 நாட்களில் 20 கிலோ எடையை குறைத்து, ரூ.2.47 லட்சம் பெற்றுள்ளார்.
ஊழியர்களிடையே ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்த, இந்த சவாலை கொண்டு வந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
2022 முதல், இந்த நிறுவனம் உடல் எடையை குறைக்கும் சவாலை நடத்தி, தோராயமாக ₹2.47 கோடி வெகுமதிகளை ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும், 99 ஊழியர்கள் மொத்தமாக 950 கிலோ எடையை குறைத்து ரூ.1.23 கோடியை பிரித்துக் கொண்டனர்.
- சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதற்கு பிறகும் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
- நேபாள தலைநகர் காத்மண்டுவில் பதற்றம் தொடர்வதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யத் தவறிய இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூடியூப், எக்ஸ் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது.
நேபாளத்தில் விதிக்கப்பட்ட இந்த தடையை எதிர்த்து நேற்று போராட்டம் வெடித்தது.
பெரும் அளவிலான இளைஞர்கள் காத்மாண்டுவில் நாடாளுமன்றம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்றபோது போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் உயிரழந்தோரின் எண்ணிக்கை 20 பேர் ஆக உயர்ந்துள்ளது. 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இதையடுத்து நேபாள உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் இதற்கு தார்மீக ரீதியாக பொறுப்பேற்று தனது ராஜினாமா கடிதத்தைச் பிரதமர் சர்மா ஒலியிடம் சமர்ப்பித்தார்.
இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக நேற்று அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பான அவசர கூட்டமும் நடத்தப்பட்டு சமூக ஊடகங்களுக்கான தடை நள்ளிரவில் நீக்கப்பட்டுள்ளது. நிறுத்தப்பட சேவைகளை விரைவில் தொடங்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நேபாள பிரதமர் சர்மா ஒலி பதவி விலகக் கோரி இளைஞர்கள் 2 ஆம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதற்கு பிறகும் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
நேபாள தலைநகர் காத்மண்டுவில் பதற்றம் தொடர்வதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பதற்றமான சூழல் தொடர்வதால் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் உள்ளது
பொதுமக்கள் அமைதி காக்க வேண்டுமென பிரதமர் சர்மா ஒலி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதே சமயம், போராட்டக்காரர்களை நேபாள அரசு கையாண்ட விதம் அதிருப்தி அளிப்பதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
- கிடைக்கும் நேரத்தில் திருப்பி தாக்கும் வேலையை செய்கின்றன என்பதும் தெரியவந்துள்ளது.
- யாரெல்லாம் முகமூடி அணிந்து சென்றார்களோ அவர்களை எல்லாம் கூட்டமாக சேர்ந்து தாக்கின.
காகத்தின் அறிவுத்திறன் 7 வயது சிறுவனின் மூளைக்கு சமமாக இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். 2012-ம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வின்படி, விஞ்ஞானிகள் இதை தெரிவித்தனர்.
காகங்கள் மனித முகங்களை நினைவில் வைத்துக்கொள்ளும் அசாத்தியமான நினைவாற்றல் படைத்தவை ஆகும். தனது இனத்திற்கு எதிரான தாக்குதல் நடத்திய மனிதர்களை தங்கள் வாரிசுகளுக்கும், மற்ற காக்கை கூட்டத்திற்கு அடையாளம் காட்டி, கிடைக்கும் நேரத்தில் திருப்பி தாக்கும் வேலையை செய்கின்றன என்பதும் தெரியவந்துள்ளது.
வாஷிங்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த 2 ஆராய்ச்சியாளர்கள், மனிதன் மீது காக்கைகள் நடத்தும் தாக்குதலை பற்றி தெரிந்து கொள்ள ஒரே மாதிரியான முகமூடி அணிந்த சிலரை வைத்து காகங்களை பிடித்து, வெவ்வேறு இடங்களில் அடைத்து விட்டனர்.

அடைபட்ட இந்த காக்கைகள் ஒரு சில தினங்கள் கழித்து திறந்து விடப்பட்டன. திறந்து விடப்பட்ட காகங்கள், அது பறந்து சென்ற இடங்களில் எல்லாம் யாரெல்லாம் முகமூடி அணிந்து சென்றார்களோ அவர்களை எல்லாம் கூட்டமாக சேர்ந்து தாக்கின.
இதன் மூலம், காக்கைகள் தங்களை துன்புறுத்தும் மனிதர்களை எத்தனை காலம் ஆனாலும் திருப்பி தாக்கும் அளவுக்கு நினைவுத்திறனை கொண்டுள்ளன என்றும் தெரியவந்து உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
- பிரிக்ஸ் அமைப்பின் 17ஆவது மாநாடு பிரேசிலில் நடைபெற்றது.
- பிரிக்ஸ் அமைப்பு, அமெரிக்க கொள்கைக்கு எதிரானது என டிரம்ப் விமர்சித்தார்.
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுகளை உள்ளடக்கியது BRICS அமைப்பு. இதில் புதிதாக எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தோனேசியா இணைந்துள்ளது.
அண்மையில் பிரிக்ஸ் அமைப்பின் 17ஆவது மாநாடு பிரேசிலில் நடைபெற்றது. இதனிடையே பிரிக்ஸ் அமைப்பை, அமெரிக்க கொள்கைக்கு எதிரானது என விமர்சித்த டொனால்டு டிரம்ப், பிரிக்ஸின் அமெரிக்க எதிர்ப்பு கொள்கைகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் எந்த நாடும், கூடுதல் 10 சதவீதம் வரி விதிப்பை எதிர்கொள்ளும் என மிரட்டல் விடுத்திருந்தார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வர்த்தக சவால்களை எதிர்கொள்ள, பிரிக்ஸ் நாடுகள் பரஸ்பர வெற்றியை இலக்காக கொண்டு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என சீன அதிபர் ஜி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளது.
அடுத்தாண்டு பிரிக்ஸ் மாநாடு இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில், பிரிக்ஸ் நாடுகள் இடையேயான வர்த்தக பற்றாகுறையை நிவர்த்தி செய்வதன் மூலம், நாம் ஒரு முன்மாதிரியாகத் திகழ முடியும் எனவும் நியாயமான, பாகுபாடற்ற, விதி சார்ந்த கொள்கைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார் .
- ஜெருசலேம் தாக்குதல் சம்பவத்துக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
- இஸ்ரேலுக்கு ஆதரவாக குரல் கொடுத்த மோடிக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் உள்ள ராமோத் சந்திப்பு பேருந்து நிறுத்தத்தில் நேற்று 2 மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 6 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயமடைந்தனர்.
சம்பவ இடத்தில் இருந்த பாதுகாப்பு படை வீரரால் தாக்குதல் நடத்திய இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், கத்திகள் மற்றும் வெடிமருந்துகளை கைப்பற்றியதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஜெருசலேமில் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதலை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம்.
பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் இந்தியா கண்டிக்கிறது. மேலும் பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையில் உறுதியாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "நம்மை அச்சுறுத்தும் பயங்கரவாதத்தை எதிர்த்து இஸ்ரேலுக்கு ஆதரவாக குரல் கொடுத்த மோடிக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.
- பிரான்ஸ் பிரதமர் பேரூ அரசின் கடன்களை எதிர்கொள்ள சிக்கனமான நிதிக்கொள்கையை முன்மொழிந்தார்.
- பிரதமரின் நிதிக் கொள்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் ஃபிரான்சுவா பேரூ தோல்வியடைந்த நிலையில், அவரது தலைமையிலான அரசு கவிழ்ந்தது.
அரசின் கடன்களை எதிர்கொள்ள அவர் முன்மொழிந்த சிக்கனமான நிதிக் கொள்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த சூழலில், தனக்கான ஆதரவை நிரூப்பிக்க பேரூ நம்பிக்கை வாக்கெடுப்பை மேற்கொண்டார். ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் தோல்வி அடைந்ததால் அரசு கவிழ்ந்தது.
இதனால் கடந்த 12 மாதங்களில் 4வது பிரதமரை தேர்ந்தெடுக்கும் சூழல் அங்கு உருவாகியுள்ளது.
முன்னதாக கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பிரான்ஸ் பிரதமர் பார்னியர் தோல்வி அடைந்ததால் அரசு கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
- எவ்வாறு பாம்பை வெளியே விரட்ட வேண்டும் என சொல்லிக் கொடுக்கிறார்.
- சிறுமியின் இந்த தைரியத்தை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் தனது வீட்டுக்குள் நுழைந்த பாம்பை சிறுமி லாவகமாக அங்கிருந்து விரட்டினாள். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு சிறுமி தனது வீட்டின் மூலையில் பாம்பு இருந்ததைக் கண்டாள்.
இதனை தனது தந்தையிடம் அவள் கூற, அவர் எவ்வாறு பாம்பை வெளியே விரட்ட வேண்டும் என சொல்லிக் கொடுக்கிறார். அவர் சொல்வது போல துடைப்பானைக் கொண்டு அந்த பாம்பை சிறுமி வெளியில் விரட்டுகிறாள். அப்போது துளியும் பயமில்லாமல் அந்த சிறுமி பாம்பை விரட்டிய காட்சிகள் காண்போரை வியக்க வைத்துள்ளது. சிறுமியின் இந்த தைரியத்தை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
- இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூடியூப், எக்ஸ் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது.
- நேபாள உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் தனது ராஜினாமா கடிதத்தைச் பிரதமர் சர்மா ஒலியிடம் சமர்ப்பித்துள்ளார்.
நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யத் தவறிய இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூடியூப், எக்ஸ் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது.
நேபாளத்தில் விதிக்கப்பட்ட இந்த தடையை எதிர்த்து நேற்று போராட்டம் வெடித்தது.
பெரும் அளவிலான இளைஞர்கள் காத்மாண்டுவில் நாடாளுமன்றம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்றபோது போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் உயிரழந்தோரின் எண்ணிக்கை 19 பேர் ஆக உயர்ந்துள்ளது. 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இதையடுத்து நேபாள உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் இதற்கு தார்மீக ரீதியாக பொறுப்பேற்று தனது ராஜினாமா கடிதத்தைச் பிரதமர் சர்மா ஒலியிடம் சமர்ப்பித்தார்.
இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக நேற்று அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பான அவசர கூட்டமும் நடத்தப்பட்டு சமூக ஊடகங்களுக்கான தடை நள்ளிரவில் நீக்கப்பட்டுள்ளது. நிறுத்தப்பட சேவைகளை விரைவில் தொடங்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பிரதமர் சர்மா ஒலி வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசாங்கத்தின் முயற்சிகளும், ஜென் Z தலைமுறையினரிடையே உள்ள தெளிவின்மையும் இந்த விரும்பத்தகாத சம்பவத்திற்கு வழிவகுத்தன.
சமூக ஊடகங்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல. அதன் பயன்பாட்டிற்கு உகந்த சூழலை உறுதி செய்யாவே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு மத்தியில் தலைநகர் காத்மாண்டுவில் நாடாளுமன்றம், பிரதமர் அலுவலகம் மற்றும் ஜனாதிபதி இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- இத்தனை சிரமங்களை கடந்து அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு கடையில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்தார்.
- துப்பாக்கியுடன் வந்து கபிலை சுட்டுக் கொலை செய்தார்.
அரியானாவின் ஜிந்த் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கபில் (26). ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த கபில் பெற்றோர் மற்றும் 2 சகோதரிகளை காப்பாற்ற வேண்டி வேலைக்காக 3 வருடங்களுக்கு முன் அமேரிக்காவுக்கு சென்றார்.
இதற்காக, அவரது குடும்பம் சுமார் ரூ. 45 லட்சம் செலவிட்டது. ஆபத்தான டாங்கி ரூட் வழியாக மெக்சிகன் எல்லையைக் கடந்து பனாமா காடுகள் வழியாக அமெரிக்காவிற்குள் நுழைந்தார்.
முதலில் கைது செய்யப்பட்ட நிலையில் பின்னர் விடுவிக்கப்பட்டு சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் வேலைபார்த்து வந்தார்.
இத்தனை சிரமங்களை கடந்து அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு கடையில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்த கபில் ஒரு அற்ப விஷயத்துக்காக கொலை செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் அவர் பணிபுரிந்த கடைக்கு வெளியே பொது வெளியில் சிறுநீர் கழித்த ஒருவரை கபில் கண்டித்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கோபமடைந்த அந்த நபர் சிறிது நேரம் கழித்து துப்பாக்கியுடன் திரும்பி வந்து கபிலை சுட்டுக் கொலை செய்தார்.
கபிலின் உடலை அரியானாவில் அவரது சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய மற்றும் மாநில அரசுகள் வழிவகை செய்ய வேண்டும் என்று குடும்பத்தினரும் கிராம மக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
- உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்
- பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையில் உறுதியாக உள்ளது.
இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் உள்ள ராமோத் சந்திப்பு பேருந்து நிறுத்தத்தில் நேற்று 2 மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 6 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயமடைந்தனர்.
சம்பவ இடத்தில் இருந்த பாதுகாப்பு படை வீரரால் தாக்குதல் நடத்திய இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், கத்திகள் மற்றும் வெடிமருந்துகளை கைப்பற்றியதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஜெருசலேமில் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதலை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம்.
பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் இந்தியா கண்டிக்கிறது. மேலும் பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையில் உறுதியாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
- பேருந்து நிறுத்தத்தில் இருந்த மக்கள் மீதும், வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
- துப்பாக்கிச் சூடு நடந்தவுடன் பீதியில் மக்கள் ஓடுவது கார் ஒன்றில் பொருத்தப்பட்ட டேஷ் கேமராவில் பதிவாகியது.
இஸ்ரேலின் ஜெருசலேமில் மரம் நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
இன்று (திங்கட்கிழமை) ஜெருசலேமில் உள்ள ராமோத் சந்திப்பில் காலை 10 மணியளவில் காரில் துப்பாக்கிகளுடன் வந்த இருவர் பேருந்து நிறுத்தத்தில் இருந்த மக்கள் மீதும், வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். சம்பவ இடத்தில் இருந்த ஒரு பாதுகாப்பு காவலர் திருப்பிச் சுட்டதில் தாக்குதல் நடத்திய இருவரும் உயிரிழந்தனர்.
இதற்கிடையே குண்டடிபட்டு போதும்மாக்கள் 6 பேர் உயிரிழந்தனர். மற்றும் 12 பேர் காயமடைந்தனர் . அவர்களில் ஆறு பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடந்தவுடன் பீதியில் மக்கள் ஓடுவது கார் ஒன்றில் பொருத்தப்பட்ட டேஷ் கேமராவில் பதிவாகியது. இந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
தாக்குதல் நடத்தியவர்கள் மேற்குக் கரையிலிருந்து வந்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், கத்திகள் மற்றும் வெடிமருந்துகளை மீட்டதாக போலீசார் தெரிவித்தனர். பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சம்பவ இடத்தைப் பார்வையிட்டார்.






