என் மலர்tooltip icon

    உலகம்

    இனி அப்படி செய்யாதீங்க... மனிதர்களை தேடிபிடித்து தாக்கும் காக்கைகள்... ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
    X

    இனி அப்படி செய்யாதீங்க... மனிதர்களை தேடிபிடித்து தாக்கும் காக்கைகள்... ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

    • கிடைக்கும் நேரத்தில் திருப்பி தாக்கும் வேலையை செய்கின்றன என்பதும் தெரியவந்துள்ளது.
    • யாரெல்லாம் முகமூடி அணிந்து சென்றார்களோ அவர்களை எல்லாம் கூட்டமாக சேர்ந்து தாக்கின.

    காகத்தின் அறிவுத்திறன் 7 வயது சிறுவனின் மூளைக்கு சமமாக இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். 2012-ம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வின்படி, விஞ்ஞானிகள் இதை தெரிவித்தனர்.

    காகங்கள் மனித முகங்களை நினைவில் வைத்துக்கொள்ளும் அசாத்தியமான நினைவாற்றல் படைத்தவை ஆகும். தனது இனத்திற்கு எதிரான தாக்குதல் நடத்திய மனிதர்களை தங்கள் வாரிசுகளுக்கும், மற்ற காக்கை கூட்டத்திற்கு அடையாளம் காட்டி, கிடைக்கும் நேரத்தில் திருப்பி தாக்கும் வேலையை செய்கின்றன என்பதும் தெரியவந்துள்ளது.

    வாஷிங்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த 2 ஆராய்ச்சியாளர்கள், மனிதன் மீது காக்கைகள் நடத்தும் தாக்குதலை பற்றி தெரிந்து கொள்ள ஒரே மாதிரியான முகமூடி அணிந்த சிலரை வைத்து காகங்களை பிடித்து, வெவ்வேறு இடங்களில் அடைத்து விட்டனர்.



    அடைபட்ட இந்த காக்கைகள் ஒரு சில தினங்கள் கழித்து திறந்து விடப்பட்டன. திறந்து விடப்பட்ட காகங்கள், அது பறந்து சென்ற இடங்களில் எல்லாம் யாரெல்லாம் முகமூடி அணிந்து சென்றார்களோ அவர்களை எல்லாம் கூட்டமாக சேர்ந்து தாக்கின.

    இதன் மூலம், காக்கைகள் தங்களை துன்புறுத்தும் மனிதர்களை எத்தனை காலம் ஆனாலும் திருப்பி தாக்கும் அளவுக்கு நினைவுத்திறனை கொண்டுள்ளன என்றும் தெரியவந்து உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×