என் மலர்
தலைப்புச்செய்திகள்
- தீ மளமளவென்று பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
- தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள மிகப்பெரிய மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால், பலத்த வெடிப்பு சத்தங்கள் கேட்டது. தீ மளமளவென்று பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. தீ விபத்தால் மக்கள் அலறியடித்து ஓடினார்கள். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க கடுமையாக போராடினார்கள்.
ஆனால் மார்க்கெட் கட்டிடத்தின் பெரும்பகுதி தீயில் எரிந்தது. இந்த தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
- 'வா வாத்தியார்' திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
- கடனை திருப்பி செலுத்தாமல் படத்தை வெளியிடக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.
'மெய்யழகன்' படத்தைத் தொடர்ந்து, நலன் குமாரசாமி இயக்கத்தில் 'வா வாத்தியார்' என்ற படத்தில் கார்த்தி நடித்து முடித்துள்ளார். கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். சத்யராஜ், ராஜ்கிரண் உள்பட பலரும் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டீசரும், பாடல்களும் ஏற்கனவே வெளியாகி கவனம் ஈர்த்தன. இப்படம் வரும் 12ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது.
இந்நிலையில், ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்' திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கடனாக பெற்ற ரூ.21 கோடியை ஞானவேல் ராஜா திருப்பிச் செல்லும் வரை வா வாத்தியார் திரைப்படத்தை வெளியிடக்கூடாது என் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல், வா வாத்தியார் திரைப்படத்தை அனைத்து ஓடிடி தளங்களிலும் வெளியிட அனுமதி இல்லை.
திவாலான தொழிலதிபர் அர்ஜூன்லால் சுந்தர் தாஸ் என்பவரிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் படத்தை வெளியிடக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், நாளை இப்படம் வெளியாக வா வாத்தியார் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
- உயர்த்தப்பட்ட வரி ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும்.
- 2024 ஆம் ஆண்டில், இரு நாடுகளும் 11.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள வர்த்தகத்தை மேற்கொண்டன.
அமெரிக்காவைத் தொடர்ந்து இந்தியா மீது 50 சதவீத வரி விதிக்கும் முடிவுக்கு மெக்சிகோவின் செனட் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவைத் தவிர, சீனா உட்பட பல ஆசிய நாடுகளும் இந்தப் பட்டியலில் உள்ளன. உயர்த்தப்பட்ட வரி ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும்.
வாகனங்கள், வாகன பாகங்கள், ஆடைகள், பிளாஸ்டிக், எஃகு போன்றவற்றின் மீதான இறக்குமதி வரிகள் 50 சதவீதம் அதிகரிக்க உள்ளது. இந்த வரிகள் சீனா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளை அதிகம் பாதிக்கும்.
உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவும் அடுத்த ஆண்டு கூடுதலாக 33,910 கோடி டாலர் வருவாயை ஈட்டும் நோக்கில் இந்த வரி உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
50 சதவீத வரி இந்தியா - மெக்சிகோ இடையிலான வர்த்தக உறவுகளைப் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. 2024 ஆம் ஆண்டில், இரு நாடுகளும் 11.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள வர்த்தகத்தை மேற்கொண்டன.
அதாவது 2024 ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து மெக்சிகோவிற்கு ஏற்றுமதி 8.9 பில்லியன் டாலர்களாக இருந்தது. அதே நேரத்தில் இந்தியாவிற்கான இறக்குமதி 2.8 பில்லியன் டாலர்களாக இருந்தது. இந்தியா மெக்சிகோவின் ஏற்றுமதியாளர்களில் ஒன்பதாவது பெரிய நாடாகும்.
- எதிரிகளுக்கு எதிரான வலிமையான பரப்புரையை முன்னெடுக்க வேண்டும்.
- குழுவுக்கான பல்வேறு கடமைகள் குறித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயே முடிவெடுக்க தீர்மானம்.
தவெக மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், தமிழக வெறறிக்கழகம் சார்பில் தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டணி குறித்த இறுதி முடிவுகளை எடுக்க தவெக தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இருண்டு கிடக்கும் தமிழகத்தை மீட்க, மக்களை காக்க தவெக சார்பில் தேர்தல் வாக்குறுதிகளை உருவாக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
குழுவுக்கான பல்வேறு கடமைகள் குறித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயே முடிவெடுக்க தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஊழல் மலிந்த திமுக ஆட்சியை அகற்றி புதியதோர் தமிழகத்தை சிறப்புற உருவாக்க வேண்டும் என தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிரிகளுக்கு எதிரான வலிமையான பரப்புரையை முன்னெடுக்க வேண்டும் எனவும், அவதூறு பரப்பும் எதிரிகளின் அறைக்கூவல் பொய்யுரைகளை தோலுரித்து எதிரிகளை தோற்கடிக்க வலிமையான பரப்புரை மேற்கொள்ள தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- திருப்பரங்குன்றம் மலையின் மீது சிக்கந்தர் பாதுஷா தர்காவும் அமைந்துள்ளது.
- இந்துத்துவ அமைப்பினர் பிரச்சனை செய்ய தொடங்கியுள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் முருகன் கோயிலும், மலையின் மீது காசி விஸ்வநாதர் கோயிலும், சிக்கந்தர் பாதுஷா தர்காவும் அமைந்துள்ளது. தர்காவும், கோயிலும் அருகருகே அமைந்துள்ளதை வைத்து இந்துத்துவ அமைப்பினர் பிரச்சனை செய்ய தொடங்கியுள்ளனர்.
அதிலும் சமீபத்தில் திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். ஜிவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு இன்னும் பல சர்ச்சைகளுக்கு வழிவகுத்துள்ளது. அவரை இம்பீச்மெண்ட் செய்ய இந்தியா கூட்டணி தலைவர்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் தீர்மான கடிதமும் வழங்கியுள்ளனர்.
இதனை தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள சிக்கந்தர் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அது புரளி என்று தெரியவந்தது.
இந்நிலையில், மீண்டும் சிக்கந்தர் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தர்காவில் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் போலி என்று தெரிய வந்தது
- குழந்தைகள் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
- கடினமான சூழ்நிலைகளில் மீண்டும் கட்டியெழுப்பப் போராடும் ஒரு பலவீனமான நாடு.
ஆப்கானிஸ்தான் மீது சமீபத்தில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியதற்கு ஐ.நா.பாது காப்பு கவுன்சிலில் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக இந்தியாவின் தூதர் ஹரிஷ் பேசியதாவது:-
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதலை நடத்தியதால் அப்பாவி பெண்கள், குழந்தைகள் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிக்கிறது.
இந்தத் தாக்குதல்கள் ஐ.நா. சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தை மீறும் செயலாகும். அப் பாவிப் பொதுமக்களைப் பாதுகாப்பதற்கு கவனம் செலுத்தும் ஐக்கிய நாடுகள் சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்திற்கு முழு மரியாதை அளிக்கப்பட வேண்டும்.
அத்தியாவசியப் பொருட்களுக்காக எல்லை தாண்டிய போக்குவரத்தை நம்பியிருக்கும் ஆப்கானிஸ் தானுக்கான முக்கிய வழிகளை பாகிஸ்தான் மூடியுள்ளது.
இது வர்த்தகம் மற்றும் போக்குவரத்து பயங்கரவாதம் ஆகும். இதுபோன்ற நடவடிக்கைகள் உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளை மீறுவதாகும்.
மேலும் கடினமான சூழ்நிலைகளில் மீண்டும் கட்டியெழுப்பப் போராடும் ஒரு பலவீனமான நாட்டிற்கு எதிரான வெளிப்படையான அச்சுறுத்தல்கள் மற்றும் போர்ப்செயல்களுக்கு சமமானவை ஆகும் என்று தெரிவித்தார்.
- கிரிக்கெட்டை விட நான் வேறு எதையும் அதிகமாக நேசிப்பதாக எனக்கு தோன்றவில்லை.
- ஒரு குழந்தையாக இருந்தபோதிலிருந்தே, பேட்டிங் மீதான அந்த வெறி எப்போதும் இருந்தது.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா. சமீபத்தில் இந்திய அணி மகளிர் உலகக் கோப்பையை வெல்வதில் மந்தனா முக்கிய பங்காற்றினார்.
இந்த சூழலில் 29 வயதான மந்தனாவும், பிரபல இசையமைப்பாளர் மத்தியபிரதேசத்தை சேர்ந்த பலாஷ் முச்சாலும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் மோதிரம் மாற்றி நிச்சயம் செய்து கொண்டனர்.
இதனையடுத்து இருவரின் திருமணம் கடந்த 23-ம் தேதி நடப்பதாக இருந்த நிலையில் மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாசுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டடு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதனால் திருமணம் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது.
இதற்கிடையே மந்தனாவின் வருங்கால கணவர் பலாஷ் முச்சல் வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாகப் பேசியதாகக் கூறப்படும் 'ஸ்கிரீன்ஷாட்கள்' இணையத்தில் வேகமாக பரவின. இதைதொடர்ந்து பலாஸ் உடன் இருக்கும் திருமண புகைப்படங்களை மந்தனா நீக்கினார்.
அதனை தொடர்ந்து, திருமணம் தள்ளிவைக்கப்பட்ட சில வாரங்களுக்கு பின் ஸ்மிருதி மந்தனா, தனது திருமணம் ரத்து செய்யப்பட்டது என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.
இந்நிலையில் கிரிக்கெட்டை விட நான் வேறு எதையும் அதிகமாக நேசிப்பதாக எனக்கு தோன்றவில்லை என ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
கிரிக்கெட்டை விட நான் வேறு எதையும் அதிகமாக நேசிப்பதாக எனக்கு தோன்றவில்லை. இந்திய ஜெர்சியை அணிவதுதான் எங்களை இயக்கும் உந்துசக்தி. எல்லாப் பிரச்சனைகளையும் ஒதுக்கி வைத்துவிடும். அந்த ஒரு எண்ணமே வாழ்க்கையில் கவனம் செலுத்த உதவுகிறது. ஒரு குழந்தையாக இருந்தபோதிலிருந்தே, பேட்டிங் மீதான அந்த வெறி எப்போதும் இருந்தது. அதை யாரும் புரிந்துகொள்ளவில்லை. ஆனால் என் மனதில், நான் எப்போதும் ஒரு உலக சாம்பியன் என்று அழைக்கப்பட வேண்டும் என்றே விரும்பினேன்.
என ஸ்மிருதி மந்தனா கூறினார்.
- இத்துடன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்படலாம்.
- ரெட்மி நோட் 15 5ஜி சீரிசுடன், சியோமி நிறுவனம் உலகளவில் சியோமி 17சீரிசையும் அறிமுகப்படுத்தலாம்.
ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிறுவனம் தற்போது புதிய ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை உறுதிப்படுத்தியுள்ளது. சியோமி சமீபத்தில் தனது ரெட்மி 15C ஸ்மார்ட்போனினை ரூ.11,999 விலையில் அறிமுகப்படுத்தியது.
இந்த நிலையில், தற்போது ரெட்மி நோட் 15 5ஜி சீரிசை இந்திய சந்தையில் கொண்டுவர இருக்கிறது. ரெட்மி நோட் 15 சீரிஸ் ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ரெட்மி நோட் 15 5ஜி சீரிஸ் இந்தியாவில் ஜனவரி 6ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 108MP பிரைமரி கேமரா வழங்கப்படலாம். இந்த சீரிசில் ஸ்டான்டர்டு ரெட்மி நோட் 15 மற்றும் ரெட்மி நோட் 15 ப்ரோ, நோட் 15 ப்ரோ பிளஸ் என மூன்று மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என தெரிகிறது.
இவற்றில் ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6s Gen 3 பிராசஸர் மூலம் இயக்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்படலாம். ரெட்மி நோட் 15 5ஜி சீரிசுடன், சியோமி நிறுவனம் உலகளவில் சியோமி 17சீரிசையும் அறிமுகப்படுத்தலாம்.
சியோமி 17 மற்றும் சியோமி 17 அல்ட்ரா ஆகிய மாடல்கள் 2026 ஆம் ஆண்டில் உலகளவில் சியோமி அறிமுகம் செய்ய இருக்கும் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் ஆகும். இந்த ஸ்மார்ட்போன்கள் தலைசிறந்த பிராசஸர், அதிநவீன கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.
- மாவட்ட நீதிபதி செம்மல், காஞ்சீபுரம் டி.எஸ்.பி. சங்கர் கணேஷை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்
- மாவட்ட நீதிபதிக்கும், துணை போலீஸ் சூப்பிரண்டுக்கும் ஏற்கனவே முன்பகை உள்ளது.
வன்கொடுமை தடுப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய தவறியதற்காக மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி செம்மல், காஞ்சீபுரம் சட்டம்-ஒழுங்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் கணேஷை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதில் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காஞ்சீபுரம் மாவட்ட முதன்மை கோர்ட்டு நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு அரசு தரப்பில் முறையிடப்பட்டது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், மாவட்ட நீதிபதிக்கும், துணை போலீஸ் சூப்பிரண்டுக்கும் ஏற்கனவே முன்பகை உள்ளது. அதில்தான் இப்படி ஒரு உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார் என்றார்.
இதையடுத்து காஞ்சிபுரம் டி.எஸ்.பி. சங்கர் கணேஷை உடனடியாக விடுதலை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அவர் மீதான வழக்கு விசாரணைக்கும் தடைவிதித்து உத்தரவிட்டது.
இதனையடுத்து, முன்பகை விவகாரத்தில் டி.எஸ்.பி.யை கைது செய்ய உத்தரவு பிறப்பித்த காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி செம்மல், அரியலூர் லோக் அதாலத் தலைவராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், காஞ்சிபுரம் டிஎஸ்பிக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பித்த மாவட்ட நீதிபதி செம்மல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உயர்நீதிமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு பிறகு நீதிபதி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற தலைமைப்பதிவாளர் அல்லி தெரிவித்துள்ளார்.
- பில்லியன் கணக்கான டாலர்கள் கருவூலத் துறையால் நிர்வகிக்கப்படும் ஒரு கணக்கில் வந்து சேரும்.
- குற்றவியல் சம்பவங்களில் ஈடுபட்டால் கோல்டு கார்டு விசா ரத்து செய்யப்படலாம்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றதில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். குறிப்பாக குடியேற்றத்துக்கு கடும் கட்டுபாடுகளை விதித்தார். அமெரிக்காவில் வெளிநாட்டினர் தங்கி பணிபுரிய வழங்கப்படும் எச்-1பி விசாவுக்கும் கட்டுபாடுகளை கொண்டு வந்தார்.
இதற்கிடையே அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற கோல்டு கார்டு(தங்க அட்டை) விசா திட்டம் கொண்டு வரப்படும் என்று சில மாதங்களுக்கு முன்பு டிரம்ப் அறிவித்தார். 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.44.98 கோடி) செலுத்தினால் கோல்டு கார்டு விசா வழங்கப்படும் என்றும் இதற்கான நடைமுறைகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். அதன்பின் கோல்டு கார்டு விசாவுக்கான கட்டணத்தை குறைத்தார்.
இந்தத் திட்டத்தின் கீழ் 1 மில்லியன் டாலர் செலுத்தும் தனிநபர்களுக்கும், வெளிநாட்டு ஊழியருக்கு 2 மில்லியன் டாலர் செலுத்தும் நிறுவனங்களுக்கும் கோல்டு கார்டு விசா வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் கோல்டு கார்டு விசா திட்டத்தை அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் கோல்டு கார்டு விற்பனையை டிரம்ப் அறிமுகப்படுத்தினார். இதன்மூலம் வெளிநாட்டினர் அமெரிக்க அரசிற்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை (ரூ.8.98 கோடி) நன்கொடையாக வழங்குவதன் மூலம் நிரந்தரமாக தங்கும் அந்தஸ்தைப் பெறுவார்கள்.
இதுதொடர்பாக டிரம்ப் கூறுகையில்," கோல்டு கார்டு விசா என்பது ஒரு கிரீன் கார்டு போன்றது. ஆனால் கிரீன் கார்டை விட பெரிய நன்மைகளை கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் பெறப்படும் அனைத்து நிதிகளும் "அமெரிக்க அரசாங்கத்திற்கே செல்லும்.
பில்லியன் கணக்கான டாலர்கள் கருவூலத் துறையால் நிர்வகிக்கப்படும் ஒரு கணக்கில் வந்து சேரும். இதன்மூலம் நாம் நாட்டிற்கு நன்மை பயக்கும் காரியங்களைச் செய்ய முடியும். இந்தத் திட்டம் பெருநிறுவனங்கள் சிறந்த கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்ற திறமையாளர்களைப் பணியமர்த்தித் தக்கவைத்துக் கொள்ள உதவும்" என்றார்.
அமெரிக்காவின் மற்ற விசாவை போலவே, தேசிய பாதுகாப்பு அல்லது குற்றவியல் சம்பவங்களில் ஈடுபட்டால் கோல்டு கார்டு விசா ரத்து செய்யப்படலாம். 21 வயதுக்குட்பட்ட வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் திருமணமாகாத குழந்தைகளை விண்ணப்பத்தில் சேர்க்கலாம்.
ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 15 ஆயிரம் டாலர் செயலாக்கக் கட்டணமும், விசாவை பெற 1 மில்லியன் டாலரும் நன்கொடையாக செலுத்த வேண்டும்.
- வெனிசுலாவை சுற்றி கடலில் அமெரிக்கா தனது படைகளை குவித்து உள்ளது.
- ஹெலிகாப்டர் மூலம் கடலோர காவல்படையினர் எண்ணெய் கப்பலுக்குள் சென்றனர்.
அமெரிக்கா-வெனிசுலா இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கிடையே வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதை பொருட்கள் கடத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார்.
இதையடுத்து போதை பொருள் கடத்துவதாக கரீபியன் கடல் மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் வெனிசுலா படகுகள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும் வெனிசுலாவை சுற்றி கடலில் அமெரிக்கா தனது படைகளை குவித்து உள்ளது.
இந்த நிலையில் வெனிசுலா கடற்கரையில் ஒரு எண்ணை கப்பலை அமெரிக்க ராணுவம் கைப்பற்றி உள்ளது. அமெரிக்காவின் யு.எஸ்.எஸ் ஜெரால்ட் ஆர் போர்ட் என்ற விமானம் தாங்கிக் கப்பலில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கடலோர காவல்படையினர் எண்ணெய் கப்பலுக்குள் சென்றனர்.
பின்னர் அந்த கப்பலை கைப்பற்றி தங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த எண்ணை கப்பல், வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளை ஆதரிக்கும் வகையில் சட்டவிரோத செயல்பட்டதால் தடை செய்யப்பட் டுள்ளது என்று அமெரிக்கா தெரிவித்தது.
இதுதொடர்பாக அதிபர் டிரம்ப் கூறும்போது, வெனிசுலா கடற்கரையில் ஒரு எண்ணை கப்பலை கைப்பற்றியுள்ளோம். இந்த கப்பல் இதுவரை கைப்பற்றப் பட்டவற்றில் மிகப்பெரியது. இது ஒரு மிக நல்ல காரணத்திற்காக கைப்பற்றப்பட்டது என்றார். கப்பல் கைப்பற்றப்பட்ட தற்கு வெனிசுலா அரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
- நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுவதில்லை.
- பொதுப் பிரிவினர் மட்டும் 76.45% பேர் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மக்களவையில் நீதிபதிகள் நியமனம் குறித்து திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார்.
அந்த பதிலில், "நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுவதில்லை. ஆதலால் 2018 முதல் 2025 ஆம் ஆண்டு வரை 841 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில், பொதுப் பிரிவினர் மட்டும் 76.45% பேர் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பட்டியலினத்தவர் 3.8% பேரும் பழங்குடியினர் 2.0% பேரும் ஓபிசி பிரிவில் 12.2% பேரும் சிறுபான்மையினர்கள் 5.5% பேரும் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.






