என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sims Hospital"

    • தினமும் ஒரே நேரத்தில் தூங்கி எழுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
    • இரவு தூங்குவதற்கு 2 மணி நேரம் முன்பே உணவு உட்கொள்ள வேண்டும்.

    தூக்கக் கோளாறுகளுக்குத் தீர்வு காணும் வகையில், இந்தியாவின் முதல் 'ஒருங்கிணைந்த தூக்கவியல் மையத்தை' சென்னையைச் சேர்ந்த சிம்ஸ் மருத்துவமனை தொடங்கியுள்ளது. தூக்கம் சார்ந்த பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெற நோயாளிகள் பல்வேறு இடங்களுக்கு அலைவதைத் தவிர்க்கும் வகையில், 10 மருத்துவத் துறைகளை ஒருங்கிணைத்து இம்மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவருக்கும் நரம்பியல், உளவியல் மற்றும் சுவாசம் சார்ந்த தூக்கக் கோளாறுகளுக்குச் சிறப்புச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த மையத்தை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு திறந்து வைத்தார். எஸ்.ஆர்.எம் குழுமத்தின் தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து இத்திறப்பு விழா நிகழ்வில் கௌரவ விருந்தினராகக் பங்கேற்றார்.

    உறங்கும் நேரத்தில் மாரடைப்பு, இதயச் செயலிழப்பு பாதிப்புகள் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றை விளைவிக்கக்கூடிய தூக்கத்துடன் தொடர்புடைய கோளாறுகளுக்கு இந்த தூக்கவியல் சிகிச்சை மையம் சிறப்பு சிகிச்சையை வழங்குகிறது. காது-மூக்கு-தொண்டை (ENT) நிபுணர்கள், நுரையீரல் நிபுணர்கள், நரம்பியல் நிபுணர்கள் மற்றும் பல் மருத்துவர்கள் அடங்கிய ஒரு கூட்டு மருத்துவக் குழு உலகளவில் சிறந்த தரநிலைகளுடன் CPAP, BiPAP போன்ற நவீன சுவாசக் கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கிறது. மிகத் துல்லியமான, வலியற்ற மற்றும் இரத்தம் வராத எண்டோஸ்கோபி, பிளாஸ்மா அடிப்படையிலான மற்றும் கதிர்வீச்சு அதிர்வெண் சிகிச்சை (RF) வழிமுறைகளும் இதில் உள்ளடங்கும்.



     


    இங்குள்ள பிரத்யேக 'தூக்க ஆய்வகத்தில்', தூக்கத்தின் போது மூளைச் செயல்பாடு மற்றும் இதயத் துடிப்பு கண்காணிக்கப்பட்டு நிகழ்நேர தரவுகள் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. குறட்டை உட்பட உறக்க பிரச்சனைகள், உடலியக்கவியல், மூளையின் செயல்பாடு மற்றும் இதய இரத்தநாள ஆரோக்கியம் ஆகியவற்றை எப்படி பாதிக்கிறது என இதன் மூலம் மதிப்பீடு செய்யப்படுகிறது. மேலும், DISE எனும் நவீன தொழில்நுட்பம் மூலம், மயக்கவியல் மருத்துவரின் ஆதரவோடு நோயாளிக்கு உறக்க நிலையைத் தூண்டி சுவாசப் பாதையில் எங்கு அடைப்பு உள்ளது என்பதைத் துல்லியமாகக் கண்டறிய முடியும்.

    விளையாட்டு வீரர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது ஏற்படும் தூக்க நேர மாற்றத்தைச் சரி செய்வற்கான சிறப்பு செயல்திட்டத்தையும், உறக்கத்தின் போது திடீரென மூச்சு நின்றுவிடும் பிரச்சனைக்கு சிகிச்சையையும் மற்றும் உளவியல் ரீதியான ஆலோசனையையும் (CBT) இந்த மையம் வழங்குகிறது.

    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இந்நிகழ்வில் பேசுகையில், "குறட்டை விடுவது இயல்பானதாக தெரிந்தாலும், நோய் பாதிப்புக்கான இடர்வாய்ப்பை வெளிப்படுத்தும் அறிகுறியாகவும் அது இருக்கலாம். இது நிம்மதியான தூக்கத்தைக் கெடுப்பதுடன், தம்பதியினர் தனித்தனியாக வெவ்வேறு இடங்களில் தூங்குவது போன்ற பிரிவிற்கும் வழிவகுக்கிறது. சிம்ஸ் மருத்துவமனையில் தொடங்கப்பட்டிருக்கும் உறக்கவியல் சிகிச்சைக்கான இந்த புதிய மையம், உடல்நலத்தை மட்டுமல்லாமல், குடும்ப உறவுகளையும் காக்க உதவும் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்," என்று கூறினார்.



    இந்த மையத்தின் குறிக்கோள் குறித்து டாக்டர் ரவி பச்சமுத்து கூறியதாவது: "இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த தூக்கவியல் மையம் தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியாவில் தூக்கக் கோளாறுகளை கண்டறிவதிலும், சரியான சிகிச்சை அளிக்கும் முறையையும் இந்த மையம் மாற்றியமைத்துள்ளது. நோயாளிகள் வெவ்வேறு மருத்துவ துறைகளுக்கு சிகிச்சைக்காக செல்ல வேண்டிய அவசியம் இல்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒரே இடத்தில் தூக்கம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் முழுமையான தீர்வுகள் சிகிச்சையின் மூலம் கிடைக்கும் வகையில் அனைத்து வசதிகளையும், நவீன தொழில்நுட்பத்தையும் மற்றும் அனுபவமிக்க மருத்துவர்களையும் இம்மையம் கொண்டிருக்கிறது". என தெரிவித்தார். 

    மையத்தின் இயக்குநர் டாக்டர் கார்த்திக் மாதேஷ் ரத்னவேலு கூறியதாவது: "இரவு நேரத்தில் வரும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம், பெரும்பாலும் தூக்கக் கோளாறு உள்ளவர்களுக்கே ஏற்படுகிறது. புகைப்பிடிப்பது எப்படிப் புற்றுநோயை உண்டாக்குமோ, அதேபோல் சிகிச்சையளிக்கப்படாத தூக்கக் கோளாறுகள் இதய நோய்க்கும் வழிவகுக்கும். இங்கு ஒவ்வொரு நோயாளிக்கும் ஒரு 'வழிகாட்டி' நியமிக்கப்பட்டு, பரிசோதனை முதல் சிகிச்சை முடியும் வரை நோயாளிகளுக்குத் துணையாக இருப்பார்கள்." என தெரிவித்தார். 

    திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையின் பொது மேலாளர் லஞ்சம் வாங்கியது குறித்து அவருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கப்பட்டது.
    திருப்பதி:

    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அலிபிரி பகுதியில் சிம்ஸ் ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. இங்கு ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆஸ்பத்திரியின் பொது மேலாளராக மோகன் முரளி என்பவர் இருந்து வந்தார்.

    கடந்த 2014-ம் ஆண்டு திருப்பதியை சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் சிம்ஸ் ஆஸ்பத்திரி வளாகத்தில் மருந்துகடை வைப்பதற்கு அனுமதி கேட்டு மோகன் முரளியிடம் மனு கொடுத்தார்.

    அப்போது மருந்து கடை வைக்க அனுமதி தரவேண்டும் என்றால் ரூ.30 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டுமென கூறினார். லஞ்சம் தர விருப்பம் இல்லாத புருஷோத்தமன் திருப்பதியில் உள்ள லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. சங்கர் ரெட்டியிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூ.30 ஆயிரத்தை புருஷோத்தமனிடம் கொடுத்து அனுப்பினர்.

    அவர் மோகன் முரளியிடம் பணத்தை கொடுத்த போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக அவரை பிடித்தனர்.

    இந்த வழக்கு நெல்லூர் லஞ்ச ஒழிப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிந்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.

    அதில் லஞ்சம் பெற்ற சிம்ஸ் ஆஸ்பத்திரி பொது மேலாளர் மோகன் முரளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என கூறினார். #tamilnews
    ×