என் மலர்
தலைப்புச்செய்திகள்
- இந்தியா- பாகிஸ்தான் போட்டியின்போது விமானம் வீழ்வது போல் சைகை காட்டினார்.
- பிசிசிஐ புகார் அளிக்க ஹரிஸ் ராஃப்-க்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின்போது, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ராஃப், இந்தியாவின் 6 விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதை குறிக்கும் வகையில், 6 கைவிரல்களை காட்டினார். மேலும், விமானம் விழுவது போன்று சைகை காட்டினார்.
இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் ஹரிஸ் ராப்-க்கு எதிராக ஐசிசி-யில் புகார் அளித்தது. புகார் விசாரணையில் ஹரிஸ் ராஃப்-க்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் ஹரிஸ் ராஃப்க்கான அபராத தொகையை மொஹ்சின் நக்வி செலுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹரிஸ் ராஃப்-க்கு போட்டிக் கட்டணத்தில் 30 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்துவது போன்ற சைகை காண்பித்த சஹிப்சதா பர்ஹானை எச்சரித்த ஐசிசி, அபராதம் ஏதும் விதிக்கவில்லை.
போட்டி பரிசளிப்பு விழாவில் பஹல்காம் தாக்குதல் குறித்து பேசிய சூர்யகுமார் யாதவுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
- நாமக்கல்லில் இன்று பிற்பகலில் தேர்தல் பரப்புரை நடத்தினார்.
- அதிமுக மற்றும் பாஜக கூட்டணி குறித்து விமர்சித்து பேசினார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.
நாமக்கல்லில் இன்று பிற்பகலில் தேர்தல் பரப்புரை நடத்தினார்.
அப்போது, அதிமுக மற்றும் பாஜக கூட்டணி குறித்து விமர்சித்து பேசினார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, "அரசியலில் விஜய் ஒரு கத்துக்குட்டி" என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
ஜெயலலிதா கூறியதற்கு மாறாக அதிமுக பொருந்தா கூட்டணி வைத்துள்ளதாக பேசிய நிலையில் கடம்பூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
அதிமுக- பாஜக கூட்டணி பற்றி பேச விஜய்க்கு தகுதி இல்லை.
எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக செல்கிறார். ஆவாங், விஜய் மாவட்ட வாரியாக பயணிக்கிறார்.
மாவட்டத்திற்கு ஒரு கூட்டம் நடத்தும் விஜய் முதலில் களத்திற்கு வரட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 2007ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சூப்பர் ஓவர் போட்டியில் வெற்றி பெற்றது.
- 2024ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெற்றது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்று கடைசி போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் நேற்று மோதின. முதலில் விளையாடிய இந்தியா 202 ரன்கள் குவித்தது. பின்னர் 203 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை, பதுன் நிஷாங்காவின் அதிரடி ஆட்டத்தால் வெற்றி நோக்கி சென்றது.
அவர் 58 பந்தில் 107 ரன்கள் குவித்தார். குசால் பெரேரா 32 பந்தில் 58 ரன்கள் அடித்தார். ஷனகா 11 பந்தில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க, இலங்கை 20 ஓவரில் 202 ரன்கள் எடுத்தது. இதனால் போட்டி "டை"யில் முடிவடைந்தது.
இதன் காரணமாக சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை 2 ரன்கள் மட்டுமே அடித்தது. பின்னர் இந்தியா எளிதாக வெற்றி பெற்றது.
இந்திய அணிக்கு இது 5ஆவது சூப்பர் ஓவர் போட்டியாகும். இந்த ஐந்து போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது கிடையாது.
2007ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது.
2020-ல் நியூசிலாந்துக்கு எதிராக இரண்டு முறை சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றுள்ளது.
2024ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெற்றுள்ளது.
தற்போது இலங்கைக்கு எதிராக சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றுள்ளது.
- வாழ்நாள் அர்ப்பணிப்புக்காக ஆசியாவின் நோபல் பரிசு என்று கருதப்படும் ராமன் மக்சேசே விருது அவருக்கு வழங்கப்பட்டது.
- தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க செயற்கை பனிக்கட்டிகள் (Ice Stupas) உருவாக்கும் முறையைக் கண்டுபிடித்தார்.
கடந்த 2019 இல் மத்திய அரசு ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து அதை யூனியன் பிரதேசமாக அறிவித்தது. அதனுடன் இருந்த லடாக் தனி யூனியன் பிரதேசமானது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் துணை நிலை ஆளுநர் மேற்பார்வையில் லடாக் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.
லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பின் 6-வது அட்டவணையில் சேர்க்கக் கோரி சுற்றுச்சூழல், காலநிலை செயல்பாட்டாளர் சோனம் வாங்சுக் (59 வயது) தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
6-வது அட்டவணையில் சேர்ப்பதால் பழங்குடி மக்களின் நிலம், கலாச்சாரம், மற்றும் வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்க சுயாட்சி நிர்வாகம் அமையும்.
இந்தச் சலுகை லடாக்கின் பழங்குடிக் கலாச்சார அடையாளம், எளிதில் பாதிக்கப்படக்கூடிய சுற்றுச்சூழல் மற்றும் நிர்வாக அமைப்புகளைப் பாதுகாக்கும் என்று அவர் வாதிடுகிறார்.
இது லடாக்கின் 90% க்கும் அதிகமான பழங்குடி மக்களுக்கு பிழைப்புக்கான வழி என்றும் அவர் வாதிடுகிறார்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் அவரது தலைமையில் காலவரையற்ற உண்ணாவிர போராட்டம் தொடங்கியது. அவரது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடந்த புதன்கிழமை லே-வில் நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டம் வன்முறையாக மாறியது.
இதற்கிடையே அவர்களுக்கு ஆதரவாக தலைநகர் லே-வில் முழு அடைப்பு போராட்டதற்கு 'லே அபெக்ஸ் பாடி' என்ற அமைப்பின் இளைஞர் அணி அழைப்பு விடுத்தது. கடந்த புதன்கிழமை நடந்த இந்த போராட்டம் வன்முறையாக மாறியது.
போராட்டத்தில் அதிகளவில் பங்கேற்ற இளைஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
போராட்டக்காரர்கள் காவல்துறை வாகனங்களுக்குத் தீ வைத்ததுடன், லே-வில் உள்ள பாஜக அலுவலகத்தையும் தாக்கினர்.
செப்டம்பர் 10 முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த சோனம் வாங்க்சுக், வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து இளைஞர்கள் அமைதிக்காக வேண்டும் என்று கூறி தனது போராட்டத்தை நிறுத்திக்கொண்டார்.
ஆனால் வன்முறைக்குக் காரணம் வாங்க்சுக்கின் தூண்டுதல் பேச்சுகளே என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை மூலம் குற்றம் சாட்டியது.
அரபு வசந்தம் மற்றும் நேபாள 'ஜென் இசட்' போராட்டங்களைப் பற்றி அவர் பேசியது வன்முறையைத் தூண்டியதாக அமைச்சகம் தெரிவித்தது.
இந்தக் குற்றச்சாட்டுகளை வாங்க்சுக் கடுமையாக மறுத்தார். இப்பிரச்சனையின் மூல காரணிகளைத் தீர்க்காமல் பலிகடா தேடும் தந்திரமாகவே மத்திய அரசு தன்னைக் குறிவைப்பதாக அவர் விமர்சித்தார்.
அவரது கல்வி நிறுவனமான SECMOL (Students' Educational and Cultural Movement of Ladakh)-ன் வெளிநாட்டுப் நிதி பெறும் உரிமத்தை (FCRA) உள்துறை அமைச்சகம் இரத்து செய்தது.
இதன் தொடர்ச்சியாக நேற்று மதியம் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்க உள்ளதாக கூறியிருந்த நிலையில் வன்முறையைத் தூண்டியதாக காலையிலேயே அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீஸ் கைது செய்தது. லே பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது ஜோத்பூர் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். அவரின் கைது எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் காலநிலை செயல்பாட்டாளர் சோனம் வான்சுக் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் மீண்டும் கவனம் பெற்றுள்ளன.

யார் இந்த சோனம் வாங்சுக்?
1966 ஆம் ஆண்டு லடாக்கின் தொலைதூர கிராமமான உலேடோக்போவில் பிறந்தார்.
சிறுவயதில் பள்ளிகள் வெகு தொலைவில் இருந்ததால், அவருடைய தாயார் வீட்டிலேயே அடிப்படைகளைக் கற்றுக் கொடுத்தார்.
ஒன்பது வயதில் ஸ்ரீநகரில் உள்ள பள்ளிக்கு அனுப்பப்பட்டார். ஆனால் அங்கு புதிய மொழியால் படிப்பில் சிரமப்பட்ட அவரை மந்தமானவர் என்று முத்திரை குத்தினர்.
அந்த சூழ்நிலையை சோனம் வாங்சுக்கால் தாங்க முடியவில்லை. அப்பொழுது ஒருநாள் சோனம் யாருக்கும் சொல்லாமல் தன் வீட்டிலிருந்து டில்லிக்கு ஓடி வந்துவிடுகிறார்.
அங்கு ஒரு கட்டத்தில் விஷேஷ் கேந்திர வித்தியாலயா பள்ளியில் தலைமை ஆசிரியரைச் சந்திக்கிறார். வாங்சுக் -இன் மொழி தெரிந்த நிலையில் அவருடன் பேசி பிரச்னையை புரிந்து கொன்றார்.
வாங்சுக்கை மீண்டும் ஸ்ரீநகருக்குச் அனுப்பி வைத்து அங்கு அவர் படிப்பதற்காக உதவுகிறார். அவரின் உதவிக்குப் பின்பு சோனம் நன்றாகப் படிக்கத் தொடங்கினார்.
பின் 1987 ஆம் ஆண்டில், ஸ்ரீநகரில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் ( NIT) மெக்கானிக்கல் இன்ஜியரிங்கில் பி.டெக். பட்டம் பெற்றார்.
பெயர் பெற்ற கல்வி நிறுவனத்தில் படிப்பை முடித்தும் வேலைக்கு செல்லமால் 1988 ஆம் ஆண்டில் லடாக்கின் சீரற்ற கல்வி முறையைச் சீர்திருத்த சொந்த ஊருக்குத் திரும்பினார்.
சகோதரர்களுடன் சேர்ந்து லடாக் மாணவர்கள் கல்வி மற்றும் பண்பாட்டு இயக்கம் (SECMOL) என்ற அமைப்பை நிறுவினார்.
அவரது கல்வி நிறுவனத்தில் லடாக்கிற்கு ஏற்ற ஒரு கல்வி முறையை அவர் உருவாக்கினார்.
அந்தக் கல்வி முறை லடாக்கின் கலாசார, சுற்றுச்சூழல் தன்மைக்கு ஏற்றதாக இருக்கும் என்று அவர் குரல் கொடுத்து வந்தார்.
சாஸ்போல் என்ற பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியை உருவாக்கி அதில் அவர் திட்டத்தின் படி தொடங்கி பாரம்பரிய கல்வி முறையால் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவினார்.
அந்த பள்ளியில் மற்ற பள்ளியில் படித்த மாணவர்கள் சேர வேண்டும் என்றால் கட்டாயம் அவர்கள் அந்த பள்ளியில் பெயில் ஆகியிருக்க வேண்டும்.
அந்த பள்ளிக்கு மின்சாரம் வெளியிலிருந்து வராது அந்த பள்ளிக்குத் தேவையான மின்சாரத்தை அங்குப் படித்த மாணவர்கள் தயாரித்த சூரிய மின் சக்தியிலிருந்தே பயன்படுத்தப்படுகிறது.
அந்த பள்ளிக் கட்டிடமே செங்கல்களால் கட்டப்படவில்லை முற்றிலும் களிமண்ணை வைத்துக் கட்டப்படுகிறது.
ஏட்டுக் கல்வியோடு நிறுத்தாமல் மாணவர்களுக்கு செயல்முறை கல்வி வழங்க வேண்டும் என்பதே அவரது இலக்கு.
இதற்கிடையில் 2001ம் ஆண்டு அரசு கல்வித்துறையின் ஆலோசகராகச் சேர்ந்தார்.
2002ம் ஆண்டு சில தன்னார்வ அமைப்புகளுடன் சேர்ந்து லடாக் வாலென்டரி நெட்வோர் என்ற அமைப்பையும் உருவாக்கினர்.
அடுத்த 20 ஆண்டுகளில் லடாக்கில் கல்வி எப்படி இருக்க வேண்டும் என்ற ஒரு பெரும் திட்டத்தை வகுத்து அதை அரசிடம் சமர்ப்பித்தார்.
இது அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கின் பார்வைக்குச் சென்றது. அசந்து போன பிரதமர் அவரை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் தொடக்க நிலை கல்வி கவுன்சில் உறுப்பினராக நியமித்தார்.
2007-2010 வரை ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்த வாங்சுக் பின் நேபாள அரசின் கல்வித்துறை அமைச்சராகவும் இருந்தார்.
லடாக் பகுதியின் நீர் பஞ்சத்தை தீர்க்க குளிர்காலத்தில் செயற்கை பனிக்கட்டிகள் (Ice Stupas) உருவாக்கும் முறையைக் கண்டுபிடித்தது மற்றும் லடாக் மக்களுக்காக மைனஸ் 15 டிகிரி குளிரையும் தாக்குப்பிடிக்கும் வகையிலான களிமண் வீடுகளை உருவாக்கியது அவரது சாதனைகளில் ஆகும்.
இந்த உயரமான Ice Stupas கட்டமைப்புகள் குளிர்காலத்தில் உருகும் நீரைக் கொண்டு கட்டப்படுகின்றன. இது வசந்த காலத்தில் விவசாயிகளுக்கு மிகவும் தேவைப்படும்போது நீரை மெதுவாக வெளியிடுகிறது.
இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றது. 2018 ஆம் ஆண்டில், அவரது வாழ்நாள் அர்ப்பணிப்புக்காக ஆசியாவின் நோபல் பரிசு என்று கருதப்படும் ராமன் மக்சேசே விருது அவருக்கு வழங்கப்பட்டது.
சோனம் வாங்சுக்கின் கதை பாலிவுட் திரைப்பட இயக்குனர் ராஜ்குமார் ஹிரானியின் கவனத்தை ஈர்த்தது. அவரை மையமாக 3 இடியஸ்ட்ஸ் என்ற ஹிட் படத்தை இயக்கினார். அதில் அமீர் கான் கதாபத்திரம் சோனம் வாங்சுக் உடைய நேரடி இன்ஸபிரேஷன் ஆகும்.
தமிழில் ஷங்கர் இயக்கத்தில் ரீமேக்காக உருவான நண்பன் படத்தில் விஜய், கொசக்சி பசபுகழ் என்ற பெயரில் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
2024 மார்ச் மாதம் லடாக் மாநில அந்தஸ்து கோரிக்கையை முன்வைத்து 21 நாட்கள் சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் இருந்தார்.
தொடர்ந்து 2024 செப்டம்பரில் வாங்சுக், லே முதல் டெல்லி வரை 'டெல்லி சலோ' பாதயாத்திரை என்ற பெயரில் மாநில அந்தஸ்துக்கான பாதயாத்திரையை மேற்கொண்டிருக்கிறார்.
தற்போது அவரின் கைது அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே லடாக் டிஜிபி, சோனம் வான்சுக் பாகிஸ்தான் முகவரியுடன் தொடர்பில் இருந்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.
- காசாவில் நடக்கும் இனப்படுகொலைக்கு ட்ரம்ப்பும் உடந்தையாக இருப்பதாக குற்றம் சாட்டினார்.
- அமெரிக்க அரசாங்கம் சர்வதேச சட்டத்திற்கு இணங்கவில்லை என்பதைக் காட்டுகிறது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. சபை ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு நாட்டு தலைவர்களும் கலந்து கொண்டு பேசினார்கள். மேலும், பல்வேறு நாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ஐ.நா. சபை பொதுக்கூட்டத்தில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இனப்படுகொலையில் ஈடுபடுவதாக இஸ்ரேல் அரசுக்கு எதிராக பலவேறு நாட்டு தலைவர்கள் பேசினர். குறிப்பாக பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக பல நாடுகள் அறிவித்தன.
இந்நிலையில், ஐ.நா. சபை பொதுக்கூட்டத்தில் பேசிய கொலம்பியா அதிபர் குஸ்டாவோ, "காசாவில் நடக்கும் இனப்படுகொலைக்கு டொனால்ட் ட்ரம்ப்பும் உடந்தையாக இருப்பதாக குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், கொலம்பியா அதிபர் குஸ்டாவோவின் விசாவை ரத்து செய்வதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.
தனது விசா ரத்து செய்யப்பட்டது குறித்து கொலம்பியா அதிபர் குஸ்டாவோ வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இனப்படுகொலையை ஆதரிக்க வேண்டாம் என்று கேட்டு கொண்டதற்காக எனது விசா ரத்து செய்யப்பட்டள்ளது. இது அமெரிக்க அரசாங்கம் சர்வதேச சட்டத்திற்கு இணங்கவில்லை என்பதைக் காட்டுகிறது. இனிமேலும் ஐநா சபையின் தலைமையகம் நியூயார்க்கில் இருக்க முடியாது" என்று தெரிவித்தார்.
மற்றொரு பதிவில் டொனால்டு டிரம்பை 'டொனால்டு டக்' என்று கூறி கொலம்பியா அதிபர் குஸ்டாவோ கிண்டல் அடித்தார்.
- ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்கவில்லை.
- பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட போட்டியில் அர்ஷ்தீப் சிங் இடம் பெற்றார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. நாளை இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது. இந்திய அணியில் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா உடன் மிதவேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஷிவம் துபே இருப்பதால், அர்ஷ்தீப்புக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட போட்டிகளில் மட்டும் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தது. நேற்று இலங்கைக்கு எதிராக 4 ஓவரில் 46 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினாலும், சூப்பர் ஓவரை அட்டகாசமாக வீசினார். இவருக்கு பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இடம் கிடைக்குமா? என்று தெரியவில்லை.
இந்த நிலையில் டி20-யில் அர்ஷ்தீப் சிங்தான பிரீமியர் பவுலர் என அஸ்வின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அஸ்வின் கூறியதாவது:-
ஆசிய கோப்பை தொடங்குவதற்கு முன்பே, அர்ஷ்தீப் சிங் பிளேயிங் லெவன் அணியில் கட்டாயம் இடம் பெற வேண்டும் என்று நான் சொல்லிக் கொண்டிருந்தேன். ஏன் இந்தியாவின் பிரீமியர் பவுலர்களில் ஒருவர் என்பதை அவர் காட்டினார்.
இந்திய அணியில் பும்ரா இருக்கும்போது, மக்கள் அர்ஷ்தீப் சிங்கை பற்றி அதிகம் பேசமாட்டார்கள். ஆனால் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் பிரீமியர் பவுலர் என்று கூறுவேன்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, ஈரோடு, சேலம், நாமக்கல், வேலூர் மாவட்டங்களில் மழை பெய்ய வாயப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்ய உள்ளது.
- இந்தியா 202 ரன்கள் குவித்தது.
- நிஷாங்கா 107 ரன்கள் விளாசியதால் போட்டி "டை"யில் முடிந்தது.
ஆசிய கோப்பை 2025 சூப்பர் 4 சுற்றின் கடைசி லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா- இலங்கை இடையிலான போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்தியா 202 ரன்கள் குவித்தது. பின்னர் பதுன் நிஷாங்காவின் சதத்தால் (107) இலங்கை இமாலய இலக்கை நெருங்கியது. சரியாக 202 ரன்கள் அடித்ததால், போட்டி "டை" யில் முடிந்தது. இதனால் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது.
சூப்பர் ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். ஷனகா பேட்டிங் பிடித்தார். துல்லியமாக ஆஃப்சைடு யார்க்கராக வீசப்பட்ட ஷனாகா அடிக்க முயன்றார். பந்து பேட்டில் படாமல் விக்கெட் கீப்பரிடம் சென்றது. பந்து பேட்டிங் பட்டது போன்று சத்தம் கேட்டதால் நடுவர் அவுட் கொடுத்துவிடுவார்.
அதேவேளையில் ஷனகா ரன் எடுக்க ஓட முயன்றார். அப்போது விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன், சரியாக ஸ்டம்பை நோக்கி பந்தை வீசுவார். இதனால் ரன்அவுட்டுக்கு அப்பீல் கேட்பார். ஆனால், நடுவர் அவுட் கொடுக்கமாட்டார்.
ஐசிசி விதிப்படி அம்பயர் அவுட் என கையை உயர்த்திவிட்டால், வீசப்பட்ட பந்து அத்துடன் Dead ஆகிவிடும். அதன்பின் எந்தவிதமான செயல்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. அதுபோன்றுதான் நடுவர் அவுட் கொடுத்த பிறகு, ரன்அவுட் செய்ததால் அவுட் கொடுக்கப்படவில்லை.
ஷனாகா உடனடியாக நடுவர் முடிவை எதிர்த்து அப்பீல் செய்வார். ரீபிளேயில் பந்து பேட்டில் படாமல் செல்லும். இதனால் நடுவர் முடிவு திரும்பப் பெறப்பட்டு, ஷனாகா பேட்டிங் செய்தார்.
இலங்கை சூப்பர் ஓவரில் 2 ரன்கள் எடுத்தது. இந்தியா அதை எளிதாக எடுத்து வெற்றி பெற்றது.
- 'அஜித்குமார் ரேஸிங்' என்ற பந்தய நிறுவனத்தை அஜித் உருவாக்கியுள்ளார்
- நடிகர் அஜித்குமார் ஸ்பெயினில் நடைபெற உள்ள கார் பந்தயங்களில் கலந்துகொள்ள உள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார் .
கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், 'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.
நடிகர் அஜித்குமார் ஸ்பெயினில் நடைபெற உள்ள கார் பந்தயங்களில் கலந்துகொள்ள உள்ளார். அவ்வகையில் இன்றும் நாளையும் க்ரெவென்டிக் 24H பந்தயத்தில் அஜித்குமார் கலந்து கொள்கிறார்.
இந்நிலையில், ரேஸுக்கு முன்னதாக தனது மனைவி மற்றும் மகளுடன் அஜித்குமார் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
- தொண்டர்கள் கூடியிருந்த நிலையில் பரப்புரை வாகனத்தின் மேல் விஜய் ஏறினார்.
- தொண்டர்களை பார்த்து தவெக தலைவர் விஜய் கையசைத்தார்.
தொண்டர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் நாமக்கல்லில் தனது பிரச்சார உரையை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தொடங்கினார்.
அப்போது, தொண்டர்களிடம் அனைவரும் சாப்பீட்டீர்களா என கேட்ட விஜய் தாமதமாக வந்ததற்கு மன்னிப்பும் கேட்டார்.
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் என்னுடைய வணக்கம் என்று தவெக தலைவர் விஜய் தனது உரையை தொடங்கினார்.
திமுக, அதிமுக, பாஜகவை தாக்கி பேசினார். தவெகவுக்கும்- திமுகவுக்கும் தான் போட்டியே என்றார். பின்னர், நமாக்கல் பரப்புரையை முடித்துக் கொண்டு விஜய் கரூர் மாவட்டத்திற்கு புறப்பட்டார்.
இந்நிலையில், கரூர் செல்லும் வழியில் பரமத்திவேலூர் பகுதியில் தொண்டர்கள் கூடியிருந்த நிலையில் பரப்புரை வாகனத்தின் மேல் விஜய் ஏறினார்.
பரப்புரை வாகனத்தின் மேல் ஏறி தொண்டர்களை பார்த்து தவெக தலைவர் விஜய் கையசைத்தார். அப்போது, தொண்டர்கள் அளித்த வேல் மற்றும் வெற்றிலையை மாலையை த.வெ.க. தலைவர் விஜய் பெற்றுக் கொண்டார்.
- தேவரா படம் முதல் நாளிலேயே ரூ.172 கோடி வசூலை பெற்றது.
- உலகம் முழுவதும் தேவரா படம் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது.
ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் திரைக்கு வந்த தேவரா படம் மாபெரும் வெற்றியை பெற்றது.
இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ஜான்விகபூர் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் தான் தென்னிந்திய திரை உலகில் ஜான்வி கபூர் முதல் முறையாக அறிமுகமானார்.
தேவரா படம் முதல் நாளிலேயே ரூ.172 கோடி வசூலை பெற்றது. மூன்று நாட்களில் 307 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது. உலகம் முழுவதும் இப்படம் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது.
இந்நிலையில், தேவரா படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்த நிலையில், தேவரா 2 படத்தின் அறிவிப்பை போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
- பிக்பாஸ் பட்டத்தை வெல்பவர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசுத் தொகையை கிடைக்கும்.
- பிக்பாஸ் 9 ஆவது சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கவுள்ளார்.
தமிழ் தொலைக்காட்சியின் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸின் ஒன்பதாவது சீசன் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்குகிறது.
100 நாட்கள் வெளி உலக தொடர்பின்றி ஒரே வீட்டில் சக போட்டியாளர்களுடன் தங்கி, கொடுக்கப்படும் பணிகளைச் சிறப்பாக நிறைவேற்றும் ஒருவரே, மக்கள் வாக்குகளின் ஆதரவுடன், பிக்பாஸ் பட்டத்தையும் ரூ.50 லட்சம் பரிசுத் தொகையையும் வெல்லுகிறார்.
இதுவரை ஆரவ், ரித்விகா, முகென் ராவ், ஆரி அர்ஜுனன், ராஜூ ஜெயமோகன், முகமது அசீம், அர்ச்சனா ரவிச்சந்திரன், முத்துக்குமரன் உள்ளிட்டோர் வெற்றியாளர்களாகத் திகழ்ந்துள்ளனர். ஓவியாவின் பிரபல்யம், கவின்–லாஸ்லியா காதல், பிரதீப்பின் ரெட் கார்டு, சித்தப்பா சரவணனின் வெளியேற்றம், தாடி பாலாஜி சம்பவம் போன்ற பல முக்கிய நிகழ்வுகள் பிக்பாஸ் வீட்டில் இடம்பெற்றுள்ளன.
முதல் சீசனிலிருந்து ஏழாவது சீசன் வரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், கடந்த எட்டாவது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். தற்போது 9 ஆவது சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கவுள்ளார்.
பிக்பாஸ் 9 ஆவது சீசனில் கலந்து கொள்ளும் நபர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், நடிகர் சித்து, பாரதி கண்ணம்மா ஃபரினா ஆசாத், சீரியல் நடிகை ஜனனி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, பட்டி மன்ற பேச்சாளர் மஞ்சுநாதன் உட்பட பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டு வருகிறது.
குறிப்பாக ஹார்ட் பீட் வெப் தொடரில் முக்கிய ரோலில் நடித்து வந்த பாடினி (அனிதா) மற்றும் கார்த்திக்குமாரின் (விஜய்) சிறு வயது காதாபாத்திரத்தில் நடித்த ரோஷனும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.






