என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தொண்டர்கள் அளித்த வேல் மற்றும் வெற்றிலை மாலையை பெற்றுக் கொண்ட விஜய்
    X

    தொண்டர்கள் அளித்த வேல் மற்றும் வெற்றிலை மாலையை பெற்றுக் கொண்ட விஜய்

    • தொண்டர்கள் கூடியிருந்த நிலையில் பரப்புரை வாகனத்தின் மேல் விஜய் ஏறினார்.
    • தொண்டர்களை பார்த்து தவெக தலைவர் விஜய் கையசைத்தார்.

    தொண்டர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் நாமக்கல்லில் தனது பிரச்சார உரையை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தொடங்கினார்.

    அப்போது, தொண்டர்களிடம் அனைவரும் சாப்பீட்டீர்களா என கேட்ட விஜய் தாமதமாக வந்ததற்கு மன்னிப்பும் கேட்டார்.

    என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் என்னுடைய வணக்கம் என்று தவெக தலைவர் விஜய் தனது உரையை தொடங்கினார்.

    திமுக, அதிமுக, பாஜகவை தாக்கி பேசினார். தவெகவுக்கும்- திமுகவுக்கும் தான் போட்டியே என்றார். பின்னர், நமாக்கல் பரப்புரையை முடித்துக் கொண்டு விஜய் கரூர் மாவட்டத்திற்கு புறப்பட்டார்.

    இந்நிலையில், கரூர் செல்லும் வழியில் பரமத்திவேலூர் பகுதியில் தொண்டர்கள் கூடியிருந்த நிலையில் பரப்புரை வாகனத்தின் மேல் விஜய் ஏறினார்.

    பரப்புரை வாகனத்தின் மேல் ஏறி தொண்டர்களை பார்த்து தவெக தலைவர் விஜய் கையசைத்தார். அப்போது, தொண்டர்கள் அளித்த வேல் மற்றும் வெற்றிலையை மாலையை த.வெ.க. தலைவர் விஜய் பெற்றுக் கொண்டார்.

    Next Story
    ×