என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டி20 சூப்பர் ஓவரில் 5-0 என தொடரும் இந்திய அணியின் வெற்றி சாதனை..!
    X

    டி20 சூப்பர் ஓவரில் 5-0 என தொடரும் இந்திய அணியின் வெற்றி சாதனை..!

    • 2007ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சூப்பர் ஓவர் போட்டியில் வெற்றி பெற்றது.
    • 2024ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெற்றது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்று கடைசி போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் நேற்று மோதின. முதலில் விளையாடிய இந்தியா 202 ரன்கள் குவித்தது. பின்னர் 203 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை, பதுன் நிஷாங்காவின் அதிரடி ஆட்டத்தால் வெற்றி நோக்கி சென்றது.

    அவர் 58 பந்தில் 107 ரன்கள் குவித்தார். குசால் பெரேரா 32 பந்தில் 58 ரன்கள் அடித்தார். ஷனகா 11 பந்தில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க, இலங்கை 20 ஓவரில் 202 ரன்கள் எடுத்தது. இதனால் போட்டி "டை"யில் முடிவடைந்தது.

    இதன் காரணமாக சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை 2 ரன்கள் மட்டுமே அடித்தது. பின்னர் இந்தியா எளிதாக வெற்றி பெற்றது.

    இந்திய அணிக்கு இது 5ஆவது சூப்பர் ஓவர் போட்டியாகும். இந்த ஐந்து போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது கிடையாது.

    2007ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது.

    2020-ல் நியூசிலாந்துக்கு எதிராக இரண்டு முறை சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றுள்ளது.

    2024ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெற்றுள்ளது.

    தற்போது இலங்கைக்கு எதிராக சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றுள்ளது.

    Next Story
    ×