என் மலர்
தலைப்புச்செய்திகள்
- மல்லிகா, கோபிகா, சினேகா, கனிகா உள்ளிட்டோர் நடித்த இந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது.
- பரத்வாஜ் இசையில் பா.விஜய் எழுதி கே.எஸ்.சித்ரா பாடிய ஒவ்வொரு பூக்களுமே பாடல் 3 தேசிய விருதுகளை வென்றது.
பிரபல இயக்குனர் சேரனின் இயக்கத்தில் 2004ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆட்டோகிராப். பள்ளி பருவம், கல்லூரி பருவம், இளமை பருவங்களில் ஹீரோ சந்தித்த காதல் அனுபவங்களை அழகாக சொல்லியிருப்பார்.
மல்லிகா, கோபிகா, சினேகா, கனிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது.
இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ஹிட். பரத்வாஜ் இசையில் பா.விஜய் எழுதி கே.எஸ்.சித்ரா பாடிய ஒவ்வொரு பூக்களுமே பாடல் 3 தேசிய விருதுகளை வென்றது.
இந்நிலையில், 21 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்டோகிராப் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ரசிகர்களின் மனதில் நீங்க இடம்பெற்ற இந்த படத்தை மீண்டும் பெரிய திரையில் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.
ஆட்டோகிராப் திரைப்படம் ரீ ரிலீஸ் ஆக இருப்பதை முன்னிட்டு, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஏஐ வீடியோ ஒன்றை வெளியட்டுள்ளார்.
அதில், ஆட்டோகிராப் படத்தில் நடித்துள்ள சேரன், கோபிகா, சினேகா உள்ளிட்ட கதாப்பாத்திரங்கள் ஏஐ வடிவில் இடம்பெற்றுள்ளனர்.
- பள்ளி ஆசிரியரே பாலியல் தொந்தரவு கொடுத்ததைக் கண்டித்து போராட்டம்.
- பாலியல் குற்றங்களைத் தடுக்காத திமுக அரசு, ஜனநாயக ரீதியில் போராடிய பாஜக சகோதர சகோதரிகளை வலுக்கட்டாயமாகக் கைது.
புதுக்கோட்டையில் திமுக அரசை கண்டித்து போராட்டம் நடத்திய பாஜகவினர் கைது செய்யப்பட்டதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:-
புதுக்கோட்டை அரசுப் பள்ளி மாணவிகள் ஏழு பேருக்கு, பள்ளி ஆசிரியரே பாலியல் தொந்தரவு கொடுத்ததைக் கண்டித்தும், தமிழகத்தில் பெருகி வரும் பாலியல் குற்றங்களைத் தடுக்காத திமுக அரசைக் கண்டித்தும், தமிழக பாஜக புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத் தலைவர் ஜகதீசன் மற்றும் புதுக்கோட்டை மேற்கு மாவட்டத் தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில், ஆயிரக்கணக்கான பாஜக சகோதர சகோதரிகள் இன்று போராட்டம் நடத்தினர்.
பாலியல் குற்றங்களைத் தடுக்காத திமுக அரசு, ஜனநாயக ரீதியில் போராடிய பாஜக சகோதர சகோதரிகளை வலுக்கட்டாயமாகக் கைது செய்து சிறையில் அடைத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பாகிஸ்தான் 20 நிமிடத்திற்குள் முதல் விக்கெட்டை இழந்ததால் ரிஸ்வான் களம் இறங்கினார்.
- 10 ஓவரின் கடைசி பந்தில் ரிஸ்வான் அடித்த பந்தை பிலிப்ஸ் அபாரமாக கேட்ச் பிடித்தார்.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் கராச்சியில் இன்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து வில் யங் (107), டாம் லாதம் (118) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 320 ரன்கள் குவித்தது.
பின்னர் பாகிஸ்தான் 321 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. ஃபஹர் ஜமான் காயம் காரணமாக பீல்டிங் செய்யும்போது முதல் ஓவரிலேயே வெளியேறியதால், 20 நிமிடம் கழித்துதான் களம் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால் பாபர் அசாம் உடன் சாத் ஷகீல் தொடக்க வீரரான களம் இறங்கினார். நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஹென்றி, ஓ'ரூர்கே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அபாரமாக பந்து வீசினர். இதனால் பாகிஸ்தான் ரன்கள் குவிக்க திணறியது.
முதல் 3 ஓவரில் 5 ரன்கள் மட்டுமே எடுத்தது. 4-வது ஓவரை ஓ'ரூர்கே வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் ஷகீல் 19 பந்தில் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இவர் ஆட்டமிழக்கும்போது 17 நிமிடங்கள்தான் முடிவடைந்திருந்தது. இதனால் ஃபஹர் ஜமான் களம் இறங்க முடியவில்லை. ஆகையால் ரிஸ்வான் களம் இறங்கினார்.
பாபர் அசாம், ரிஸ்வான் ஜோடியாலும் விரைவாக ரன்கள் அடிக்க முடியவில்லை. 10-வது ஓவரை ஓ'ரூர்கே வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தை ரிஸ்வான் ஆஃப் சைடு கல்லி திசையில அப்பர் கட் செய்தார். இந்த பந்தை கல்லி பகுதியில் நின்றிருந்த கிளென் பிலிப்ஸ் இடது பக்கம் டைவ் அடைத்து இடது கையால் அபாரமாக கேட்ச் பிடித்தார்.
இதை அவரால் கூட நம்பவில்லை. நியூசிலாந்து வீரர்கள் அவரை பாராட்ட, பாகிஸ்தான் ரசிகர்கள் எப்படி இந்த கேட்சை பிடித்தார் என வாயடைத்தனர். ரிஸ்வான் 14 பந்தில் 3 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அடைந்தார். பாகிஸ்தான் முதல் 10 ஓவரில் 22 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.
- 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
- டெல்லியின் அடுத்த முதல்வரை தேர்வு செய்வது தொடர்பாக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி பத்து நாட்களை கடந்துவிட்டது. நடந்து முடிந்த டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. மாபெரும் வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
எனினும், டெல்லியின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லாத சூழல் தான் நிலவுகிறது. இந்த நிலையில், டெல்லியின் அடுத்த முதல்வரை தேர்வு செய்வது தொடர்பாக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்நிலையில், டெல்லியில் முதலமைச்சராக ரேகா குப்தா என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து ரேகா குப்தா டெல்லி ஆளுநர் வி.கே.சக்சேனாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
நாளை (பிப்ரவரி 20) நடைபெறும் இந்த நிகழ்வில் முதல்வராக ரேகா குப்தா பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க. தலைவர்கள், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- விடாமுயற்சி படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
- லைகா நிறுவனம் விடாமுயற்சி படத்தை தயாரித்துள்ளது.
நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "விடாமுயற்சி." இந்தப் படத்தில் அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் இம்மாதம் 6 ஆம் தேதி திரைக்கு வந்து மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் BTS வீடியோவை நடிகை ரெஜினா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கிட்டத்தட்ட 20 நிமிட காட்சிகள் வெறும் இசையில் மட்டுமே நகரும். அற்புதமாக இசையமைத்துள்ளார்.
- கதை எழுதியவுடன் இதை லிஜோ மோலிடம் சொல் என்றார் யுகபாரதி.
கோமலா ஹரி பிக்சர்ஸ் மற்றும் ஒன் டிராப் ஓசியன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் இயக்கத்தில், லிஜோமோல் ஜோஸ், லாஸ்லியா, ஹரி கிருஷ்ணன் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கும் திரைப்படம் ஜென்டில்மேன்.
இந்த திரைப்படம் சமூகத்தில் குடும்ப அமைப்பை பெண்களின் பங்களிப்பை கேள்வி கேட்கும், சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ளது.
வரும் மார்ச் 7 ஆம் தேதி உலகமெங்கும் இப்படம் திரைக்கு வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் பேசியதாவது:-
சினிமா மீது நான் வைத்த காதல்தான் இந்தத் திரைப்படம். 19 நாளில் படத்தை முடிக்க முடியும் எனத் திட்டமிட்டது நான் அல்ல, அது என் திட்டம் அல்ல, அது நடக்கக் காரணம் என்னுடைய படக் குழுவினர் தான், எனக்காக என்னை நம்பி உழைத்தார்கள். அதனால் தான் இது நடந்தது. சென்சாரின் போது, ராஜுமுருகன் அண்ணன் தான் அறிவுரை சொன்னார், அவர் அறிவுரையால் தான் சென்சார் முடித்தேன்.
இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவைப் பற்றிச் சொல்ல வேண்டும், அவரது இசை இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும், கிட்டத்தட்ட 20 நிமிட காட்சிகள் வெறும் இசையில் மட்டுமே நகரும். அற்புதமாக இசையமைத்துள்ளார். ஆர்ட் டைரக்டர் அமரன் 20 நாட்களும் என்னுடன் இருந்தார். எடிட்டர் இளையராஜா சேகர், அவரை நான் நிறைய டார்ச்சர் செய்துள்ளேன், ஆனால் அதைத்தாண்டி என்னுடன் நின்றார்.
இந்தக்கதை எழுதியவுடன் இதை லிஜோ மோலிடம் சொல் என்றார் யுகபாரதி அண்ணன். அவரிடம் இந்த கதையைச் சொன்ன போது, அவர் ஒரு கேள்வி கேட்டார் அந்த கேள்விதான் படம் பார்க்கும்போது ரசிகர்கள் கேட்பார்கள், அதன் பதில் சொன்னவுடன் அவர் ஒத்துக்கொண்டார். லாஸ்லியா எனக்குப் பழக்கம். நான் இந்தக்கேரக்டர் சொல்லி அனுமதி எல்லாம் கேட்காமல், நடிக்கக் கூப்பிட்டேன், அவர் என்னை நம்பி வந்தார்.
ஹரியைப் படப்பிடிப்பிற்கு மூன்று நாட்கள் முன் தான் கூப்பிட்டேன், எனக்காக வந்தார். தயாரிப்பாளர்கள் பற்றி சொல்ல வேண்டும், என்னிடம் இந்தப்படத்தில் காமெடி கமர்ஷியல் இருக்கிறதா? என எதுவும் கேட்கவில்லை நான் கேட்ட அனைத்தும் தந்தார்கள். நேதாஜி அண்ணன் மூலம் தான் தயாரிப்பாளர்கள் அறிமுகம், அவருக்கு நன்றி. இந்தப்படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் சுழற்பந்து வீச்சாளர்கள்.
- ஜடேஜா, அக்சார் படேல், வாஷிங்டன் சுந்தர் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா வங்கதேசத்தை நாளை எதிர்கொள்கிறது. இந்த போட்டி தொடர்பாக இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்திய அணியில் ஜடேஜா, அக்சார் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி என ஐந்து சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனரே என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு ரோகித் சர்மா பதில் அளித்தார். அப்போது கூறியதாவது:-
நாங்கள் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் (வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ்) மற்றும் மூன்று ஆல்-ரவுண்டர் சுழற்பந்து வீச்சாளர்களை (அக்சார் படேல், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர்) ஆகியோரை கொண்டுள்ளோம். அக்சார் படேல், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் மிகப்பெரிய அளவில் பங்களிப்பை கொடுப்பார்கள்.
மற்ற பல அணிகள் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்களை கொண்டுள்ளபோது, 6 வேகப்பந்து வீச்சாளர்களுடன் செல்கிறார்கள். அப்போது அதிக வேகப்பந்து வீச்சாளர்களுடன் செல்கிறார்கள் என யாரும் சொல்வதில்லை. அது அவர்களுடைய பலம். நாங்கள் எங்களுடைய பலத்தின் மீது கவனம் செலுத்துவோம்.
ஒவ்வொரு ஐசிசி தொடரும் முக்கியமானது. டிராபியை வெல்ல நாம் பல்வேறு விசயங்களை செய்ய வேண்டும். சுப்மன் கில் கிளாஸ் பிளேயர். அவருடைய சாதனை மூர்க்கத்தனமானது. அதனால் அவர் அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு ரோகித் சர்மா தெரிவித்தார்.
- பாலியல் புகார் வந்ததும் விரைந்து நடவடிக்கை எடுக்கிறது காவல்துறை.
- நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளதாக பாராட்டிய உயர்நீதிமன்றம்.
பாலியல் புகார்களை வைத்து அரசின் மீது அவதூறு பரப்புவதே பழனிசாமிக்கு தொடர் கதையாகிவிட்டது என்று அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
பாலியல் புகார்களை வைத்து அரசின் மீது அவதூறு பரப்புவதே பழனிசாமிக்கு தொடர் கதையாகிவிட்டது. புகார் வந்ததும் விரைவாக விசாரித்து கைது நடவடிக்கை எடுக்கிறது காவல் துறை. ஆனால், பாதுகாப்பில்லை என சொல்லி பெண் குழந்தைகளை அச்சுறுத்துவதே பழனிசாமிக்கு வழக்கமாகிவிட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்ததும் உதவி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நடவடிக்கை எடுக்காமல் இருந்தால், திமுக அரசை கண்டிக்கலாம். ஆனால், நடவடிக்கை எடுத்த பிறகும் பழனிசாமி அரசை விமர்சிப்பது தன்னை முன்நிறுத்தி கொள்ளும் அரசியலுக்குதானே?
பாதிக்கப்பட்ட மாணவிகள் அளித்த புகாரைத் தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமத்தினர், சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பள்ளிக்கு சென்று தனித்தனியாக விசாரணை நடத்தி புகாரை உறுதி செய்தனர். அதன் பிறகு உதவி தலைமை ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து காவல் துறை கைது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற நம்பிக்கை மாணவிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் வந்துள்ளது. அதனால்தான் மாணவிகள் துணிந்து புகார் அளிக்கிறார்கள்.
மும்மொழிக்கொள்கையை பாஜக புகுத்த முயற்சிக்கிறது; தமிழ்நாட்டிற்கு உரிய வரிப்பகிர்வு தருவதில்லை; ஒன்றிய பட்ஜெட்டிலும் தமிழக திட்டங்கள் இல்லை; கல்விக்கு நிதி இல்லை; இப்போது பேரிடர் நிவாரணமும் இல்லை என தொடர்ந்து மோடி அரசு தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது.
இதையெல்லாம் மடைமாற்றி தன்னுடைய பாஜகவின் ராஜ விஸ்வாசத்தை காட்டுகிறார் பழனிசாமி. ஒன்றிய அரசுக்கு அவப்பெயர் வராமால் இருக்க பாலியல் வன்கொடுமை என்று சொல்லி மடைமாற்றும் அரசியல் யுக்தியை செய்கிறார் பழனிசாமி.
ஒருசில குற்றச் சம்பவம் நடப்பதை வைத்து ஒட்டுமொத்தமாக பள்ளிக்கூடங்கள் பாதுகாப்பில்லை என மாணவிகளையும் பெற்றோரையும் பழனிசாமி அச்சுறுத்துவது கேவலமான மனநிலையை காட்டுகிறது.
அண்ணா பல்கலைக் கழக பாலியல் வழக்கு மற்றும் காவல் அதிகாரி மீதான பாலியல் வழக்கில் தமிழக அரசின் செயல்பாட்டை சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதிகள் கடந்த 17ம் தேதி பாராட்டினர்.
அத்துடன், மேலதிகாரிகள் மீது பாலியல் புகார் கொடுத்தால் நியாயம் கிடைக்கிறது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள். நீதிமன்றத்திற்கு தெரிந்து உண்மை கூட எதிர்க் கட்சித் தலைவருக்கு தெரியவில்லை.
பாலியல் வன்கொடுமை என்பது ஒரு சமூகப் பிரச்சினை. மிருகங்கள் மனிதர் போர்வையில் உலவுவதால் அவை கண்களுக்கு எளிதாக தெரியாது. அந்த மிருகம் குற்றம் செய்ததாக புகார் வந்ததும் உடனடியாக அரசும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்கிறது.
பாலியல் குற்றவாளிகளை கைது செய்து தண்டனை பெற்றுத் தருகிறது திமுக அரசு என்பதை மறைத்து, அவதூறு அரசியல் செய்யும் அதிமுகவுக்கு தமிழ்நாட்டு மக்கள் படுதோல்வியையே தருவார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஜப்பானைச் சேர்ந்த முராட்டா நிறுவனம் சென்னையில் கெபாசிட்டர் ஆலை அமைக்கிறது.
- ஆலையில் பல அடுக்கு செராமிக் கெபாசிட்டர்கள் தயாரிக்கப்படவுள்ளன.
ஜப்பானைச் சேர்ந்த முரட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சென்னை ஓஎம்ஆர் சாலையில் தொழிற்சாலை அமைக்க உள்ளது.
மல்டிலேயர் செராமிக் கேபாசிட்டர் என்ற உதிரிபாகத்தை இந்த ஆலையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
முராட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஏற்கனவே ஆப்பிள், சாம்சங் ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு உதிரி பாகங்கள் தயாரித்து வருகிறது.
இதுகுறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறுகையில், "ஓராண்டாக நடந்த பேச்சுவார்த்தைக்குப் பயன் கிடைத்துள்ளது. இந்நிறுவனம் 2026ம் ஆண்டில் முழு அளவிலான உற்பத்தியை மேற்கொள்ளும்" என்றார்.
- பெங்களூருவில் தனது மாமியாரை கொலை செய்ய மருத்துவரிடம் பெண் ஒருவர் மாத்திரை கேட்டுள்ளார்.
- மருத்துவர் போலீசில் புகார் அளிக்க, சம்மந்தப்பட்ட பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் தனது மாமியாரை கொலை செய்ய மருத்துவரிடம் பெண் ஒருவர் மாத்திரை கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக மருத்துவர் போலீசில் புகார் அளிக்க, சம்மந்தப்பட்ட பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த புகார் தொடர்பாக பேட்டி அளித்த மருத்துவர் சுனில் குமார், "பிப்ரவரி 17 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு தனக்கு வாட்சப்பில் சஹானா என்ற பெண் மெசேஜ் அனுப்பினார். பெங்களூரில் இருந்து பேசுவதாக கூறிய அவர், தன் மாமியாரைக் கொல்ல 2 மாத்திரைகளை பரிந்துரைக்கச் சொன்னாள்.
உயிர்களை காப்பாற்றுவது தான் மருத்துவர்களின் கடமை, உயிரை எடுப்பது அல்ல என்று அவளிடம் நான் கூறினேன்.ஆனால் அவளோ, மாத்திரைகளின் பெயர்களை மெசேஜ் அனுப்புமாறு என்னிடம் கெஞ்சினார். நான் அதிர்ச்சியடைந்து அவளுடைய கோரிக்கையை நிராகரித்தேன். தொடர்ந்து சஹானா தொடர்ந்து பலமுறை மெசேஜ் அனுப்பி வந்தார்.
பின்னர் சஹானா என்னிடம் மன்னிப்பு கேட்டாள். தன்னைப் பற்றி புகார் செய்ய வேண்டாம் என்று என்னிடம் கெஞ்சினாள். ஏன் இப்படி ஒரு செயலைச் செய்ய நினைக்கிறாய் என்று நான் கேட்டபோது, அவளுடைய மாமியார் தன்னைத் துன்புறுத்தி வருவதாகவும், இனிமேலும் இந்த சித்திரவதையைத் தாங்க முடியாது என்று கூறினார். ஆகவே இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளேன். காவல்துறையினர் விரைவான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்" என்று தெரிவித்தார்.
- வில் யங் 113 பந்தில் 107 ரன்கள் விளாசினார்.
- டாம் லாதம் ஆட்டமிழக்காமல் 104 பந்தில் 118 ரன்கள் குவித்தார்.
8 அணிகள் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கட் தொடர் பாகிஸ்தானில் இன்று தொடங்கியது. கராச்சியில் நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பாகிஸ்தான் அணி கேப்டன் ரிஸ்வான் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
நியூசிலாந்து அணி:-
1. வில் யங், 2. கான்வே, 3. கேன் வில்லியம்சன், 4. டேரில் மிட்செல், 5. டாம் லாதம், 6. பிலிப்ஸ், 7. பிரேஸ்வெல், 8. சான்ட்னெர், 9. மேட் ஹென்றி, 10. நாதன் ஸ்மித், 11. வில் ஓ, ரூர்கே.
பாகிஸ்தான் அணி:-
1. ஃபஹர் சமான், 2. பாபர் அசாம், 3. சாத் ஷாகீல், 4. முகமது ரிஸ்வான், 5. சல்மான் ஆகா, 6. தையப் தாஹிர், 7. குஷ்தில் ஷா, 8. ஷாஹீன் ஷா அப்ரிடி, 9. நசீம் ஷா, 10. ஹாரிஷ் ராஃப், 11. அப்ரார் அகமது.
அதன்படி நியூசிலாந்து அணியின் வில் யங், டேவன் கான்வே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கான்வே 17 பந்தில் 10 ரன் எடுத்த நிலையில் அப்ரார் அகமது பந்தில் க்ளீன் போல்டானார்.
அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 2 பந்துகளை சந்தித்த நிலையில் 1 ரன் எடுத்து நசீம் ஷா பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் நியூசிலாந்து 40 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய டேரில் மிட்செலும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. இவரும் 10 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.
ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் வில் யங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதற்கிடையே நியூசிலாந்து 10 ஓவரில 48 ரன்கள் சேர்த்தது. 11 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது, வில் யங் 56 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் விளாசினார். 22.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.
4-வது விக்கெடடுக்கு வில் யங் உடன் டாம் லாதம் ஜோடி சேர்ந்தார். டாம் லாதம் 59 பந்தில் அரைசதம் அடிக்க வில் யங் சிறப்பான விளையாடி அரைசதத்தை சதமாக மாற்றினார்.
56 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்த வில் யங், 107 பந்தில் 11 பவுண்டரி, ஒரு சிக்சருடன் சதம் விளாசினார். சதம் விளாசிய வில் யங் 113 பந்தில் 12 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 107 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
வில் யங் ஆட்டமிழக்கும்போது நியூசிலாந்து 37.2 ஓவரில் 191 ரன்கள் எடுத்திருந்தது. வில் யங்- டாம் லாதம் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்தது.

அடுத்து 5-வது விக்கெட்டுக்கு டாம் லாதம் உடன் கிளென் பிலிப்ஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தனர்.
இதனால் நியூசிலாந்து ரன் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. டாம் லாதம் 47-வது ஓவரின் 3-வது பந்தில் ஒரு ரன் எடுது்து 95 பந்தில் சதம் அடித்தார். மறுமுனையில் விளையாடி பிலிப்ஸ் 49-வது ஓவரின் முதல் பந்தில் ஒரு ரன் எடுத்து அரைசதம் அடித்தார்.
நியூசிலாந்து அணி 45-வது ஓவரில் 16 ரன்களும், 46-வது ஓவரில் 9 ரன்களும், 47-வது ஓவரில் 18 ரன்களும், 48-வது ஓவரில் 11 ரன்களும், 49-வது ஓவரில் 12 ரன்களும் விளாசின. இதனால் 44.5 ஓவரில் 250 ரன்னைக் கடந்த நிலையில் 48.3 ஓவரில் 300 ரன்னைத்தொட்டது. கடைசி ஓவரின் 4-வது பந்தில் பிலிப்ஸ் ஆட்டமிழந்தார். அவர் 39 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்கருடன் 61 ரன்கள் குவித்தார். அடுத்து பிரேஸ்வெல் களம் இறங்கினார்.
கடைசி ஓவரில் 14 ரன்கள் அடிக்க நியூசிலாந்து 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 320 ரன்கள் குவித்துள்ளது. டாம் லாதம் 104 பந்தில் 10 பவுண்டரி, 3 சிக்சருடன் 118 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசிலாந்து கடைசி 10 ஓவரில்
பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாஹீன் அப்ரிடி 10 ஓவரில் 68 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஹாரிஸ் ராஃப் 10 ஓவரில் 83 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். அப்ரார் அகமது 10 ஓவரில் 47 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். நசீம் ஷா 10 ஓவரில் 63 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 321 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் பேட்டிங் செய்து வருகிறது.
- ஈரம்' படத்திற்கு பிறகு ஆதி- அறிவழகன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
- ஏற்கனவே வெளியான சப்தம் படத்தின் டீசர் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
2009 ஆம் ஆண்டு அறிவழகன் இயக்கத்தில் வெளிவந்த 'ஈரம்' படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை ஆதி வெளிப்படுத்தி மக்கள் மனதை வென்றார். இயக்குனர் அறிவழகனுக்கு 'ஈரம்' திரைப்படம் நல்ல வரவேற்பைக் கொடுத்தது. அதற்கடுத்து நகுல் நடிப்பில் வெளிவந்த 'வல்லினம்' மற்றும் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த 'பார்டர்', 'குற்றம் 23' திரைப்படத்தை அறிவழகன் இயக்கினார்.
'ஈரம்' படத்திற்கு பிறகு ஆதி- அறிவழகன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. அறிவழகன் இயக்கும் 'சப்தம்' படத்தில் ஆதி நடித்துள்ளார். ஹாரர் கதைக்களப் பின்னணியில் இத்திரைப்படம் அமைந்துள்ளது. இந்த படத்தில் லக்ஷ்மி மேனன் , சிம்ரன், லைலா மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டீசர் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






