என் மலர்
தலைப்புச்செய்திகள்
- கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
- வேறொரு வழக்கில், பிணையில் வெளிவந்த நிலையில், தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலை முயற்சி வழக்கில் பிரபல ரவுடி படப்பை குணா அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்ச்தத்திரம் பகுதியில் வைத்து படப்பை குணாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
முன்னதாக, மதுரமங்கலம் கிராமத்தில் தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராளில், மோகன் என்பவரை மிரட்டியதாக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே ரவுடி படப்பை குணா மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ரவுடி படப்பை குணா 3 மாதங்களுக்கு முன்பு தான் வேறொரு வழக்கில், பிணையில் வெளிவந்த நிலையில், தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான படப்பை குணா, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக, நடிகர் வருண் தவானின் இன்ஸ்டா பதிவில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. 2 ஆவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குறிப்பாக அதிரடியாக விளையாடிய ஹெட் விக்கெட்டை வருண் வீழ்த்தினார்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக, பாலிவுட் நடிகர் வருண் தவானின் இன்ஸ்டா பதிவில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த ட்ரெண்டில் இணைந்து வருண் சக்கரவர்த்தியும் அந்த இன்ஸ்டா பதிவில் தவானை பாராட்டி கமெண்ட் செய்துள்ளார்.
இதற்கு முன், விராட் கோலி அடித்த பந்தை கேட்ச் பிடித்து அவுட்டாக்கிய நியூசிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸின் இன்ஸ்டா கணக்கிற்கு பதில் பிலிப்ஸ் நிறுவனத்தை ரசிகர்கள் திட்டி தீர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இரண்டு நாட்களில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1350 புள்ளிகள் உயர்வு.
- இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 462 புள்ளிகள் உயர்வு.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், நேற்றும் இன்றும் மிகப்பெரிய அளவில் உயர்வை சந்தித்தன.
நேற்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 740.30 புள்ளிகள் உயர்ந்து 73,730.23 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று 610 புள்ளிகள் உயர்ந்து 74,340.09 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் செக்ஸ் நேற்றைய வர்த்தகத்தில் 73730.23 புள்ளிகளில் நிறைவடைந்த நிலையில் இன்று சுமார் 600 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது. இன்று அதிகபட்சமாக 74,390.80 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக 73,415.68 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 609.87 புள்ளிகள் உயர்ந்து 74340.09 புள்ளிகளில் நிறைவடைந்தது.
அதேபோல் இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி நேற்று 254.65 புள்ளிகள் உயர்ந்து 22,337.30 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று சுமார் 140 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது, இன்று அதிகபட்சமாக 22,556.45 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக 22,245.85 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 207.40 புள்ளிகள் உயர்ந்து 22,544.70 புள்ளிகளில் நிறைவடைந்தது

30 பங்குகளை அடிப்படையாக கொண்ட மும்பை பங்குச் சந்தையில் ஏசியன் பெயின்ட்ஸ், என்டிபிசி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், பஜாஜ் பின்செர்வ், இந்துஸ்தான் யுனிலிவர், அதானியின் Ports & SEZ, ஆக்சிஸ் வங்கி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டைடன், பஜாஜ் பைனான்ஸ் போன்ற நிறுவன பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் உயர்வை சந்தித்தன.
டெக் மகிந்திரா, கோடக் மகிந்திரா வங்கி, சொமேட்டோ, டாடா மோட்டார்ஸ், இந்துஸ்இந்த் வங்கி போன்ற நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.
- இங்கிலாந்து வீர்ர கார்ஸை ஏலத்தில் எடுத்திருந்தது.
- சாம்பியன்ஸ் டிராபி தொடரின்போது காயம் ஏற்பட்டதால் விலகியுள்ளார்.
ஐ.பி.எல். 2025 சீசன் வருகிற 22-ந்தேதி தொடங்க இருக்கிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகளும் பயிற்சிகளை தொடங்கியுள்ளன. கடந்த சீசனில் 2-வது இடம் பிடித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத், ஐ.பி.எல். ஏலத்தில் இங்கிலாந்தை சேர்ந்த ஆல்-ரவுண்டர் பிரைடன் கார்ஸை ஏலம் எடுத்திருந்தது.
இவர் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம் பிடித்திருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும்போது அவரது கால் பாதத்தில் காயம் ஏற்பட்டது.
இதனால் அவருக்கு பதிலாக தென்ஆப்பிரிக்காவின் வியான் முல்டரை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 75 லட்சம் ரூபாய்க்கு மாற்று வீரராக எடுத்துள்ளது.
முல்டர் தென்ஆப்பிரிக்கா அணிக்காக 18 டெஸ்ட், 25 ஒருநாள், 11 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
மார்ச் 23-ந்தேதி சன்ரைசர்ஸ் ஐதராபாத் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
- பிரதமர் மோடி, உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள கங்கை தேவியின் கோவிலில் வழிபாடு நடத்தினார்.
- உத்தரகாண்ட் மாநிலத்தின் பொருளாதாரம் பெருமளவில் சுற்றுலாவை சார்ந்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்திற்கு வருகை புரிதிந்த்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள கங்கை தேவியின் கோவிலில் வழிபாடு நடத்தினார்.
பின்னர் உத்தரகாண்ட் மாநிலம் ஹர்சிலில் ஜீப் டிரெக்கிங் மற்றும் பைக் பேரணியை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் முதல்வர் புஷ்கர் சிங் தாமியும் கலந்து கொண்டார்.
உத்தரகண்ட் மாநிலத்தின் சுற்றுலாவை ஊக்குவிக்கும் விதமாக இந்த பேரணி நடத்தப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலத்தின் பொருளாதாரம் பெருமளவில் சுற்றுலாவை சார்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- சிறந்த இதழியலாளருக்கான கலைஞர் எழுதுகோல் விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
- 2023-ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் சிறந்த இதழியலாளருக்கான விருது.
முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி நினைவாக ஆண்டு தோறும் கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, தமிழ் இதழியல் துறை மூலம் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றிய சிறந்த இதழியலாளர்க்கு கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 2023-ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் சிறந்த இதழியலாளருக்கான கலைஞர் எழுதுகோல் விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
அதன்படி, கலைஞர் நூற்றாண்டு விழாவினையொட்டி, பெண்மையைப் போற்றும் வகையில், 2023-ஆம் ஆண்டின் சிறந்த பெண் இதழியலாளருக்காக பிரபல நியூஸ் சேனலின் செய்தி ஆசிரியர் சுகிதா சாரங்கராஜ்-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'கலைஞர் எழுதுகோல்' விருதினை வழங்கி கவுரவித்தார்.
தொடர்ந்து 'நக்கீரன்' கோபாலுக்கும் முதலமைச்சர் 'கலைஞர் எழுதுகோல்'விருது வழங்கி கவுரவித்தார்.
- அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
- 'வீர தீர சூரன்' படம் மார்ச் 27 ஆம் தேதி வெளியாக உள்ளது.
சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விவேக் வரிகளில் ஹரிசரண் மற்றும் ஷ்வேதா மோகன் இணைந்து பாடிய படத்தின் முதல் பாடலான கல்லூரும் பாடலின் லிரிக் வீடியோ சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், 'வீர தீர சூரன்' படம் மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் இரண்டாம் பாடலான "ஆத்தி அடி ஆத்தி" பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை விவேக் வரிகளில் ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் சாதிகா இணைந்து பாடியுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- உக்ரைனுக்கு வழங்கி வந்த ராணுவ உதவியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.
- இதனால் ஏற்படும் பற்றாக்குறையை ஈடுசெய்யும் அளவில் உதவிகளை விரைவுப்படுத்த மேக்ரான் உத்தரவு.
உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது. மூன்று வருடங்கள் நிறைவடைந்த நிலையிலும் போர் முடிவுக்கு வரவில்லை. ரஷியா, தனது எல்லைப் பகுதியில் உள்ள உக்ரைன் நகரங்களை போரின் தொடக்கத்தில் கைப்பற்றியது. பின்னர் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உதவியுடன் உக்ரைன் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்து இழந்த பெரும்பாலான பகுதிகளை மீட்டது.
தற்போது உக்ரைன் மீது ரஷியா அடிக்கடி டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உதவியுடன் ரஷியாவின் டிரோன் தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது.
உக்ரைனுக்கு அமெரிக்கா மிகப்பெரிய அளவில் ராணுவ உதவி செய்து வருகிறது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றதும் உக்ரைன்- ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
இதற்கிடையே உக்ரைனில் உள்ள அரிய வகை கனிமங்களை எடுப்பதற்கு அமெரிக்கா உக்ரைனுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்பியது. இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த வாரம் அமெரிக்கா சென்றிருந்தார்.
அப்போது டொனால்டு டிரம்ப் மற்றும் ஜெலன்ஸ்கி பத்திரிகையாளர்களை சந்தித்தனர். பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்படடது. போர் நிறுத்தம் ஏற்பட்டால் ரஷியா அதை மீறாமல் இருப்பதற்கு என்ன உத்தரவாதம்? என ஜெலன்ஸ்கி கேள்வி எழுப்பினார். அதேவேளையில் அமெரிக்கா உக்ரைனுக்கு எவ்வளவு உதவி செய்துள்ளது. இதற்கான அமெரிக்காகவுக்கு நன்றி கூட தெரிவிக்கவில்லை. உக்ரைன் வீரர்கள் அமெரிக்க ஆயுதங்களை பயன்படுத்துவதாக ஜெலன்ஸ்சியை டிரம்ப் சாடினார்.
இதனால் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. இதற்கிடையே உக்ரைனுக்கு வழங்கி வந்த ராணுவ உதவியை அமெரிக்கா தடாலடியாக நிறுத்தியது.
குறிப்பாக ராணுவ புலனாய்வு உதவியை நிறுத்தியது. இது ரஷியா ராணுவத்தின் நகர்வு மற்றும் அதன் மீதான இலக்கு ஆகிவற்றிற்கு உதவி செய்து வந்தது.

இந்த நிலையில் நாங்கள் உக்ரைனுக்கு உதவி செய்வோம் என பிரான்ஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் செபஸடியன் லெகோர்னு கூறுகையில் "எங்களுடைய புலனாய்வு இறையாண்மை கொண்டது. நாங்கள் புலானாய்வை கொண்டுள்ளோம். அதை உக்ரைன் பயனடைய நாங்கள் அனுமதிக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா உதவியை நிறுத்தியதால், அதை ஈடுசெய்யும் அளவிற்கு பல்வேறு உதவி தொகுப்புகளை விரைவுப்படுத்துங்கள் என அதிபர் இமானுவேல் மேக்ரான் கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார். அத்துடன், அமெரிக்காவின் முடிவால் போலந்தில் இருந்து உக்ரைனுக்கு கப்பலில் செல்லக்கூடிய உதவிப் பொருட்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
துரதிருஷ்டவசமாக மூன்று வருடங்களுக்கு மேலாக இந்த போரில் எவ்வாறு போரிட வேண்டும் என்று உக்ரைன் மக்கள் கற்றுக்கொண்டுள்ளனர். மேலும், பொருட்களை எப்படி சேமித்து வைக்க வேண்டும் எனவும் தெரிந்து கொண்டனர் என்றார்.
- மும்பையில் வாழ மராத்தி தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று RSS தலைவரின் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
- RSS தலைவரின் கருத்துக்கு சிவசேனா (உத்தவ் தாக்கரே), காங்கிரஸ் காட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் வாழ்வதற்கு மராத்தி தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பையாஜி ஜோஷி, "மும்பையில் ஒரு மொழி பேசுபவர்கள் மட்டும் கிடையாது. இங்கு ஒவ்வொரு பகுதிகளிலும் வெவ்வேறு மொழிகளை பேசுபவர்கள் இருக்கிறார்கள். காட்கோபர் பகுதி மக்கள் குஜராத்தி பேசுகிறார்கள். ஆதலால் நீங்கள் மும்பையில் வசித்தால் மராத்தி மொழி கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை" என்று தெரிவித்தார்.
இதே நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா அமைச்சர் மங்கள் பிரபாத் லோபா கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது
மராத்தி குறித்து சுரேஷ் பையாஜி ஜோஷி தெரிவித்த கருத்துக்கு சிவசேனா (உத்தவ் தாக்கரே), காங்கிரஸ் காட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி கருத்து தொடர்பாக பாஜக அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் சிவசேனா (உத்தவ் தாக்கரே) சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் ஜாதவ் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு சட்டமன்றத்தில் பதில் அளித்த முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், "ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேசியதை நான் கேட்கவில்லை. மகாராஷ்டிரா மற்றும் மும்பையின் மொழி மராத்தி தான். இங்கு உள்ள ஒவ்வொருவரும் மராத்தி மொழியை கற்றுக்கொள்ள வேண்டும். எங்கள் அரசாங்கம் அனைத்து மொழிகளையும் மதிக்கிறது.
நீங்கள் உங்கள் சொந்த மொழியை நேசித்து மதிக்கிறீர்கள் என்றால், மற்ற மொழிகளையும் அவ்வாறே நேசிப்பீர்கள். இந்த கருத்தில் சுரேஷ் பையாஜி என்னுடன் உடன்படுவார் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.
- நடிகர் ஷாம் மற்றும் இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "அஸ்திரம்."
- படத்தின் புதிய ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
நடிகர் ஷாம் மற்றும் இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "அஸ்திரம்." இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படம் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி வெளியாக இருந்த நிலையில், இந்தப் படம் நாளை மார்ச் 7-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது ஆனால் சில சூழ்நிலை காரணங்களால் நாளை திரைப்படம் வெளியாகாது என படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் புதிய ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
அஸ்திரம் படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. கிரைம் திரில்லர் கதையம்சம் கொண்டிருக்கும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தில் நிழல்கள் ரவி, அருல் தி சங்கர், ஜீவா ரவி மற்றும் ரஞ்சித் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை தன ஷண்முகமணி தயாரித்துள்ளார். இந்தப் படத்திற்கு சுந்தரமூர்த்தி இசைமயைத்துள்ளார். இவர் இதற்கு முன் ஐடா, 8 தோட்டாக்கள் மற்றும் பொம்மை நாயகி படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விசாரணைக்கு சென்ற காவலர்களை தாக்கியது மற்றும் துப்பாக்கியை காட்டி மிரட்டியது ஆகிய வழக்கில் இருவரும் கைது.
- ஒரு வழக்கில் இரண்டு காவலாளிகளுக்கும் ஜாமின் வழங்கி சோழிங்கநல்லூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை விஜயலட்சுமி விவகாரம் தொடர்பாக, விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டின் வெளிப்பக்க கதவில் போலீசார் சம்மன் நோட்டீஸ் ஒட்டினர். இந்த சம்மன் நோட்டீசை வளசரவாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் கோபி பகலில் ஒட்டி சென்றார்.
அந்த நோட்டீசில், 'நீங்கள் ஏற்கனவே அனுப்பிய சம்மன் பேரில் விசாரணைக்கு ஆஜராகவில்லை. எனவே இந்த சம்மனை ஏற்று 28-ந்தேதி (பிப்ரவரி) காலை 11 மணிக்கு நீங்கள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும். தவறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
போலீசார் சம்மன் நோட்டீசை ஒட்டிவிட்டு சென்ற சிறிது நேரத்தில் அந்த சம்மனை சீமான் வீட்டு பணியாளர் ஒருவர் கிழித்தெறிந்தார். இந்த காட்சி தொலைக்காட்சிகளில் செய்தியாக ஒளிபரப்பானது. இதுகுறித்து நீலாங்கரை போலீசாருக்கு வளசரவாக்கம் போலீசார் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்மனை கிழித்த சீமான் வீட்டு பாதுகாவலர் உள்பட இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை தொடர்ந்து, வரும் 13ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் போலீசார் ஒட்டிய சம்மனை கிழித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு காவலாளிகளுக்கும் ஜாமின் வழங்கி சோழிங்கநல்லூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவலாளிகள் மீது சம்மனை கிழித்து பணி செய்யவிடாமல் தடுத்ததாக ஒரு வழக்கு, காவலர்களை தாக்கியதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதில், ஒரு வழக்கில் மட்டும் இரு காவலாளிகளுக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், மற்றொரு வழக்கில் சீமான் வீட்டு பாதுகாவலர்கள் அமல்ராஜ், சுபாகர் ஆகியோரின் ஜாமின் மனுக்களை செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
- தேஜஸ்வி சூர்யாவின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகினறன
- பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தின் கன்னட மொழி பதிப்பில் சிவஸ்ரீ ஒரு பாடல் பாடினார்.
பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா, சென்னையை சேர்ந்த பாடகியும் பரதநாட்டிய கலைஞருமான சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
பெங்களூரில் நடைபெற்ற தேஜஸ்வி சூர்யாவின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகினறன.
பாஜக தலைவர்கள் அண்ணாமலை, பிரதாப் சிம்ஹா, அமித் மாளவியா, பி.ஒய்.விஜயேந்திரா, மத்திய அமைச்சர் வி.சோமன்னா ஆகியோர் தேஜஸ்வி சூர்யாவின் திருமணத்தில் கலந்து கொண்டனர்.
சென்னை பல்கலைக்கழகத்தில் பரதநாட்டியத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றுள்ள சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத் சென்னை சமஸ்கிருத கல்லுாரியில் சமஸ்கிருதத்தில் எம்.ஏ. பட்டமும் சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் பயோ இன்ஜினியரிங் படிப்பில் பி.டெக். பட்டமும் முடித்துள்ளார்.
மேலும், சிவஸ்ரீ சொந்தமாக ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இவரது சேனலை, 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தின் கன்னட மொழி பதிப்பில் இவர் ஒரு பாடலும் பாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






