என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கொலை முயற்சி வழக்கு- பிரபல ரவுடி படப்பை குணா கைது
    X

    கொலை முயற்சி வழக்கு- பிரபல ரவுடி படப்பை குணா கைது

    • கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
    • வேறொரு வழக்கில், பிணையில் வெளிவந்த நிலையில், தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கொலை முயற்சி வழக்கில் பிரபல ரவுடி படப்பை குணா அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

    காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்ச்தத்திரம் பகுதியில் வைத்து படப்பை குணாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

    முன்னதாக, மதுரமங்கலம் கிராமத்தில் தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராளில், மோகன் என்பவரை மிரட்டியதாக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஏற்கனவே ரவுடி படப்பை குணா மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    ரவுடி படப்பை குணா 3 மாதங்களுக்கு முன்பு தான் வேறொரு வழக்கில், பிணையில் வெளிவந்த நிலையில், தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கைதான படப்பை குணா, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    Next Story
    ×