என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

இங்கிலாந்து வீரர் கார்ஸ் காயம்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் தென்ஆப்பிரிக்க வீரர் முல்டர்
- இங்கிலாந்து வீர்ர கார்ஸை ஏலத்தில் எடுத்திருந்தது.
- சாம்பியன்ஸ் டிராபி தொடரின்போது காயம் ஏற்பட்டதால் விலகியுள்ளார்.
ஐ.பி.எல். 2025 சீசன் வருகிற 22-ந்தேதி தொடங்க இருக்கிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகளும் பயிற்சிகளை தொடங்கியுள்ளன. கடந்த சீசனில் 2-வது இடம் பிடித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத், ஐ.பி.எல். ஏலத்தில் இங்கிலாந்தை சேர்ந்த ஆல்-ரவுண்டர் பிரைடன் கார்ஸை ஏலம் எடுத்திருந்தது.
இவர் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம் பிடித்திருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும்போது அவரது கால் பாதத்தில் காயம் ஏற்பட்டது.
இதனால் அவருக்கு பதிலாக தென்ஆப்பிரிக்காவின் வியான் முல்டரை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 75 லட்சம் ரூபாய்க்கு மாற்று வீரராக எடுத்துள்ளது.
முல்டர் தென்ஆப்பிரிக்கா அணிக்காக 18 டெஸ்ட், 25 ஒருநாள், 11 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
மார்ச் 23-ந்தேதி சன்ரைசர்ஸ் ஐதராபாத் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
Next Story






