என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • நோன்புக் கஞ்சி, பேரீட்சை, சமோசா சாப்பிட்டு தவெக தலைவர் விஜய் நோன்பை திறந்தார்.
    • நோன்பு திறந்ததை தொடர்ந்து, விஜய், இமாம்களுடன் தொழுகையில் ஈடுபட்டார்.

    சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சுமார் 5 மணியளவில் தவெக தலைவர் விஜய் ஒய்எம்சிஏ மைதானத்திற்கு வருகை தந்தார்.

    வெள்ளை லுங்கி, சட்டை, இஸ்லிமியர் அணியும் தொப்பியை அணிந்து இஃப்தார் நிகழ்ச்சிக்கு விஜய் வந்தார்.

    அங்கு, இஸ்லாமிய தலைவர்கள் விஜய்யை வரவேற்றனர். பிறகு, நோன்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் விஜய் மற்றும் இஸ்லாமிய தலைவர்கள் அமர்ந்தனர்.

    பிறகு, பிரார்த்தனை செய்துவிட்டு நோன்புக் கஞ்சி, பேரீட்சை, சமோசா சாப்பிட்டு தவெக தலைவர் விஜய் நோன்பை திறந்தார்.

    நோன்பு திறந்ததை தொடர்ந்து, விஜய், இமாம்களுடன் தொழுகையில் ஈடுபட்டார்.

    இதைதொடர்ந்து, விஜய் இஸ்லாமிய மக்கள் முன்பு பேசினார்.

    அப்போது அவர் பேசுகையில், " மாமனிதர் நபிகள்நாயகம் அவர்களின் வழியை, மனிதநேயம், சகோதரத்துவத்தை பின்பற்றுவோம்.

    எங்களது அழைப்பை ஏற்று இஃப்தார் நோன்பு நிகழ்ச்சிக்கு வந்த இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் நன்றி" என்றார்.

    இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு தவெக தலைவர் விஜய் திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.

    ராயப்பேட்டையில் திரண்டுள்ள தவெக தொண்டர்கள், ரசிகர்களை நோக்கி கை அசைத்து சந்தித்தபடி விஜய் புறப்பட்டுச் சென்றார்.

    • போராட்டக்காரர்களில் ஒருவர் பாதுகாப்பு வளையத்தை மீறி ஜெய்சங்கரின் காரை நிறுத்த முயன்றார்
    • பிரிட்டனின் அலட்சியத்தைப் பிரதிபலிக்கிறது.

    பிரிட்டனில் வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கரின் பாதுகாப்பு குறைபாடு குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் பேட்டியளித்துள்ளார்.

    லண்டனில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் கார் முன் காலிஸ்தான் ஆதரவாளர்கள் கடந்த புதன்கிழமை போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களில் ஒருவர் பாதுகாப்பு வளையத்தை மீறி ஜெய்சங்கரின் காரை நிறுத்த முயன்றார். அதைத் தொடர்ந்து அவரது பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுந்தன.

    இந்நிலையில் இதுகுறித்து பேசிய ஜெய்ஸ்வால், இது காலிஸ்தானியர்களின் அச்சுறுத்தல்கள், மிரட்டல் சம்பவங்கள். இது நமது சட்டப்பூர்வமான இராஜதந்திர நடவடிக்கைகளைத் தடுக்கும் நோக்கில் நடப்பவை மீதான பிரிட்டனின் அலட்சியத்தைப் பிரதிபலிக்கிறது.

    இந்த குழுக்கள் பிரிட்டனில் அச்சுறுத்தல் விடுக்கவும் பிற செயல்களைச் செய்யவும் உரிமம் பெற்றிருப்பது போல் தெரிகிறது. அவர்கள் எங்கள் இராஜதந்திரப் பணிகளைத் தடுக்க முயல்கிறார்கள்.

    இந்த சம்பவங்களில் குற்றவாளிகள் மீது இங்கிலாந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலகம் வெளியிட்ட அறிக்கையை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம் என்று தெரிவித்தார்.

    முன்னதாக இங்கிலாந்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இங்கிலாந்து வருகையின் போது சாத்தம் மாளிகைக்கு வெளியே நடந்த சம்பவத்தை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம்.

    அமைதியான போராட்டத்திற்கான உரிமையை இங்கிலாந்து ஆதரிக்கிறது. ஆனால் பொது நிகழ்வுகளை மிரட்டும், அச்சுறுத்தும் அல்லது சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சியும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று  கூறப்பட்டிருந்தது.

    இதற்கிடையே மொரிஷியஸின் தேசிய தின கொண்டாட்டங்களில் பங்கேற்க பிரதமர் மோடி,  மார்ச் 11-12 தேதிகளில் மொரிஷியஸுக்கு பயணம் மேற்கொள்வார் என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

    • பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மை சமூகத்தினரிடையே எளிய திருமணங்களை ஊக்குவிக்க ரூ. 50 ஆயிரம்.
    • பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அதிக மாணவ-மாணவிகள் கொண்ட உருது வழி பள்ளிகள் மேம்படுத்தப்படும்.

    கர்நாடக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதித்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்-மந்திரி சித்தராமையா தாக்கல் செய்தார்.

    இந்த பட்ஜெட்டில் சிறுபான்மை பெண்களுக்காக 2024-25 ஆம் ஆண்டில் காலியாக உள்ள வக்ஃப் நிலத்தில் 15 மகளிர் கல்லூரிகளையும், 2025-26 ஆம் ஆண்டில் மேலும் 16 கல்லூரிகளையும் கட்ட அரசு திட்டமிட்டுள்ளது.

    பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மை சமூகத்தினரிடையே எளிய திருமணங்களை ஊக்குவிக்க, மிகப்பெரிய அளவில் திருமண விழாவிற்கு ஏற்பாடு செய்யும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு ஒரு ஜோடிக்கு 50 ஆயிரம் ரூபாய் அளவில் வழங்கப்படும்.

    எல்.கே.ஜி, யு.கே.ஜி முதல் பியு (PU) வரை 250 மௌலானா ஆசாத மாதரி ஆங்கில வழி பள்ளிக்கூடங்கள் படிப்படியாக 500 கோடி ரூபாய் செலவில் அறிமுகப்படுத்தப்படும். இந்த நிதியாண்டில் இதற்காக 100 கோடி ரூபாய் வழங்கப்படும். பள்ளிக் கல்வித்துறையுடன் இணைந்து இந்த திட்டம் நிறைவேற்றப்படும்.

    பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அதிக மாணவ-மாணவிகள் கொண்ட உருது வழி பள்ளிகள் மேம்படுத்தப்படும். முக்கியமான வசதிகள் வழங்குவதற்கான 400 கோடி ரூபாய் ஒதுக்க முடிவு செய்துள்ளது. இந்த வருடம் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    முதலமைச்சரின் சிறுபான்மையினர் காலனி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1,000 கோடி மதிப்பிலான செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் 2025-26 நிதியாண்டில் செயல்படுத்தப்படும்.

    கர்நாடக சிறுபான்மை மேம்பாட்டுக் கழகம் மூலம் சிறுபான்மை இளைஞர்கள் ஸ்டார்ட்-அப்ஸ் தொடங்க ஊக்குவிக்கப்படுவார்கள்.

    வக்ஃப் சொத்துக்களை பழுதுபார்த்தல் மற்றும் புதுப்பித்தல், முஸ்லிம்கள் அடக்கம் செய்யும் இடங்கள் மேம்பாடு மற்றும் பாதுகாப்பிற்காக ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சிறுபான்மையினர் இயக்குநரகத்தால் நடத்தப்படும் 169 உண்டு உறைவிட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் 25,000 மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றது.

    சிறுபான்மையினரை மனதில் வைத்து பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பாஜக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக பாஜக வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதவில் "கர்நாடகாவில் ஊழல் முதல்வர் சித்தராமையா ஒரு ஹலால் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதன் உச்சத்தில் திருப்திப்படுத்தல்!" எனக் குறிப்பிட்டுள்ளது.

    • 5 இஸ்லாமிய நிர்வாகிகள் உட்பட மொத்தம் 1,500 பேர் பங்கேற்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • சுமார் 2000 பேருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, வெஜ் சமோசா, நோன்பு கஞ்சி தயாரிப்பு.

    சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சுமார் 5 மணியளவில் தவெக தலைவர் விஜய் ஒய்எம்சிஏ மைதானத்திற்கு வருகை தந்தார்.

    வெள்ளை வேட்டி, சட்டை, இஸ்லிமியர் அணியும் தொப்பியை அணிந்து இஃப்தார் நிகழ்ச்சிக்கு விஜய் வருகை தந்தார்.

    இஸ்லாமிய தலைவர்கள் விஜய்யை வரவேற்றனர். பிறகு, நோன்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் விஜய் மற்றும் இமாம்கள் அமர்ந்தனர்.

    பிறகு, தொழுகை செய்துவிட்டு நோன்புக் கஞ்சி, பேரீட்சை, சமோசா சாப்பிட்டு தவெக தலைவர் விஜய் நோன்பு திறந்தார்.

    நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் மாவட்டத்திற்கு 5 இஸ்லாமிய நிர்வாகிகள் உட்பட மொத்தம் 1,500 பேர் பங்கேற்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மாலை நோன்பு திறந்த பிறகு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 2000 பேருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, வெஜ் சமோசா, நோன்பு கஞ்சி விருந்து அளிக்கப்பட்டது.

    • பாஜக இல்லாமல் தமிழக அரசியல் இல்லை என்ற சூழலை உருவாக்கியிருக்கிறோம்.
    • எந்த கட்சியையோ, தலைவரையோ சிறுமைப்படுத்த நான் விரும்பவில்லை.

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பாஜகவால்தான் தோற்றோம் எனக் கூறியவர்கள் தற்போது பாஜக கூட்டணிக்காக தவம் இருக்கிறார்கள்.

    பாஜக இல்லாமல் தமிழக அரசியல் இல்லை என்ற சூழலை உருவாக்கியிருக்கிறோம்.

    எந்த கட்சியையோ, தலைவரையோ சிறுமைப்படுத்த நான் விரும்பவில்லை.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் குறித்து பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் என்கிற திரைப்படத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ளார்.
    • இத்திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் என்கிற திரைப்படத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ளார். இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    இந்த படம் கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இதற்காக துருவ் விக்ரம் தீவிர கபடி பயிற்சி எடுத்து உள்ளார். இந்த படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

    'பைசன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இத்திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், 'பைசன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தற்பொழுது வெளியாகியுள்ளது. மாரி செல்வராஜ் அவரது வெளியிட்ட பதிவில் "நான் எங்கிருந்து வருகிறேன் என்று உனக்கு தெரியும் ஏன் வருகிறேன் என்றும் உனக்கு தெரியும்

    வந்து சேர்ந்தால் என்ன செய்வேனென்றும் உனக்கு தெரியும்

    ஆதலால் ….

    நீ கதவுகளை அடைக்கிறாய்

    நான் முட்டிமோதி மூர்க்கமாய் உடைக்கிறேன்.

    பைசன் (காளமாடன்)

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அம்பாலா விமானப்படை தளத்திலிருந்து பயிற்சிக்காக புறப்பட்டது.
    • தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாக நம்பப்படுகிறது.

    அரியானாவில் இந்திய விமானப்படை விமானம் விபத்துக்குளாகி உள்ளது.

    அரியானா மாநிலம் அம்பாலா விமானப்படை தளத்திலிருந்து பயிற்சிக்காக புறப்பட்ட இந்திய விமானப்படையின் ஜாகுவார் ஏர்கிராஃப்ட் போர் விமானம், பஞ்சகுலாவில் உள்ள மோர்னியின் பால்ட்வாலா கிராமத்திற்கு அருகே இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் விபத்துக்குள்ளானது.

    விமானி ஒரு பாராசூட் துணைகொண்டு தரையிறங்கி தனது உயிரைக் காப்பாற்றிக் கொண்டார். விமானம் கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்தது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாக நம்பப்படுகிறது.

    இருப்பினும் இந்த விபத்து குறித்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராவார்.
    • கடந்த ஆண்டு இவர் இயக்கிய வாழை திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

    மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராவார். 2018 ஆம் ஆண்டு பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கி தமிழ் திரையுலகில் இயக்குனராக களம் இறங்கினார். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் நடிப்பில், கர்ணன், மாமன்னன் திரைப்படங்களை இயக்கினார்.

    கடந்த ஆண்டு இவர் இயக்கிய வாழை திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. அவரது வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இப்படம் இயக்கப்பட்டது. இதை தொடர்ந்து தற்பொழுது துருவ் விக்ரம் நடிப்பில் பைசன் திரைப்படத்தை இயக்குகிறார்.

    இன்று பிறந்தநாள் கொண்டாடும் மாரி செல்வராஜுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் அவர்களது வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாரி செல்வராஜுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் "திரைமொழியில் மனிதம் பேசும் மகத்தான இயக்குநர். ஒடுக்கப்பட்ட - விளிம்பு நிலை மக்களின் வலியையும் - அவர்களுக்கான அரசியலையும் தனது படைப்புகளின் மூலம் இடைவிடாது பேசி வரும் ஆகச்சிறந்த படைப்பாளி

    mari_selvaraj சாருக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அவரது பணிகள் மென்மேலும் சிறக்கட்டும் - கனவுகள் கைகூடட்டும். என் அன்பும், வாழ்த்தும்!" என கூறியுள்ளார்.

    உதயநிதி ஸ்டாலின் நடித்த கடைசி திரைப்படமான மாமன்னன் படத்தை மாரி செல்வராஜ் இயக்கியது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 5 இஸ்லாமிய நிர்வாகிகள் உட்பட மொத்தம் 1,500 பேர் பங்கேற்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • சுமார் 2000 பேருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, வெஜ் சமோசா, நோன்பு கஞ்சி தயாரிப்பு.

    சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற உள்ளது.

    இன்று மாலை 6.20 மணிக்கு நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில் தவெக தலைவர் விஜய் ஒய்எம்சிஏ மைதானத்திற்கு வருகை தந்தார்.

    வெள்ளை வேட்டி, சட்டை, இஸ்லிமியர் அணியும் தொப்பியை அணிந்து இஃப்தார் நிகழ்ச்சிக்கு விஜய் வருகை தந்தார்.

    நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் மாவட்டத்திற்கு 5 இஸ்லாமிய நிர்வாகிகள் உட்பட மொத்தம் 1,500 பேர் பங்கேற்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மாலை நோன்பு திறந்த பிறகு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 2000 பேருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, வெஜ் சமோசா, நோன்பு கஞ்சி தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனன் ஆகியோர் பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


    • நான் உன்னை அப்போது நேசித்தேன், இப்போதும் உன்னை நேசிக்கிறேன்.
    • தற்கொலை செய்து கொண்ட நாளில், 'தொந்தரவு செய்யாதீர்கள்' என்ற பலகையை அறைக்கு வெளியே அவர் வைத்திருக்கிறார்.

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 41 வயதான அனிமேட்டர்(ANIMATOR) ஒருவரின் தற்கொலையும், உருக்கமான கடிதமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள வைல் பார்லேவில் உள்ள சஹாரா ஹோட்டலில் நிஷாந்த் திரிபாதி (41 வயது) கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) குளியலறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தனது தற்கொலைக்கு மனைவி அபூர்வாவும், அத்தை பிரார்த்தனாவும் தான் காரணம் என குறிப்பு எழுதி அதை தான் பணியாற்றிய நிறுவனத்தின் இணையதளத்தில் அவர் பதிவேற்றம் செய்திருக்கிறார்.

    அவரது தற்கொலை கடிதத்தில், 'இது அபூர்வாவுக்கானது- அன்பே.. நீ இதைப் படிக்கும் நேரத்தில், நான் போய்விட்டிருப்பேன். என்ன நடந்ததோ அதற்காக என் கடைசி தருணங்களில் நான் உன்னை வெறுத்திருக்கலாம். ஆனால் இந்த தருணத்திற்காக நான் அன்பைத் தேர்ந்தெடுத்தேன்.

    நான் உன்னை அப்போது நேசித்தேன், இப்போதும் உன்னை நேசிக்கிறேன். நான் உறுதியளித்தபடி இந்த அன்பு ஒருபோதும் குறையாது. நீயும் பிரார்த்தனா அத்தையும்தான், நான் சந்தித்த அத்தனை போராட்டங்களுக்கும், என் மரணத்திற்குக் காரணம் என்பது என் அம்மாவுக்குத் தெரியும். அதனால்தான் நான் உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன், என் அம்மாவிடம் போகாதே. அவள் மனம் உடைந்துவிட்டாள்'.

    தனது தாய், சகோதரர் மற்றும் சகோதரிக்கு கடைசி செய்திகளை அனுப்பிய பிறகு, அவர் தனது மனைவி அபூர்வாவுக்கு இந்த கடைசி கடிதத்தை எழுதினார். காவல்துறை தகவலின்படி, அனிமேஷன் துறையில் பணியாற்றி வரும் நிஷாந்த், பால்கர் மாவட்டத்தில் உள்ள விரார் பகுதியைச் சேர்த்தவர்.

    தற்கொலை செய்து கொள்வதற்கு 3 நாட்களுக்கு முன்பு ஹோட்டலில் ஒரு அறையை முன்பதிவு செய்திருக்கிறார். மேலும் தற்கொலை செய்து கொண்ட நாளில், 'தொந்தரவு செய்யாதீர்கள்' என்ற பலகையை அறைக்கு வெளியே அவர் வைத்திருக்கிறார்.

    நீண்ட நேரமாகியும் அவர் ஹோட்டல் ஊழியர்களுக்கு பதிலளிக்காததால், மாஸ்டர் சாவியைப் பயன்படுத்தி அவரது அறைக்குள் நுழைந்தபோது, அவர் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டனர்.

    தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நிஷாந்தின் தயார் அளித்த புகாரின்பேரில் மனைவி அபூர்வா மற்றும் அத்தை பிரார்த்தனா  மீது பாரதீய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவு 108 (தற்கொலைக்கு தூண்டுதல்) இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

    • வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று புறநகர் ரெயில் சேவை ரத்து.
    • தாம்பரம் - கோடம்பாக்கம் இடையே 30 நிமிட இடைவெளியில் சிறப்பு ரெயில் இயக்கப்படும்.

    சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே புறநகர் மின்சார ரயில் சேவை வரும் 9ம் தேதி ஞாயிறன்று காலை 5.10 முதல் மாலை 4.10 வரை ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    அதன்படி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர் ரெயில்கள் தாம்பரம் வரை இயக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

    மேலும், பயணிகள் வசதிக்காக, தாம்பரம் - கோடம்பாக்கம் இடையே 30 நிமிட இடைவெளியில் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    • தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கிளாசன் அடித்த பந்தை டைவ் அடித்து கேட்ச் பிடித்தபோது தோள்பட்டையில் காயம்.
    • காயம் தொடர்பாக ஸ்கேன் மற்றும் சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நாளைமறுதினம் (மார்ச் 9-ந்தேதி) ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெறும் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து- இந்தியா பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.

    அரையிறுதி போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிராக நியூசிலாந்து விளையாடும்போது, தென்ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன் கிளாசன் அடித்த பந்தை நியூசிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி டைவ் அடித்து கேட்ச் பிடிக்கும் அவரது வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

    இந்த போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இறுதிப் போட்டிக்கு ஐந்து நாட்கள் இருப்பதால் காயம் சரியாகிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் காயத்தால் மேட் ஹென்றி இந்தியாவுக்கு எதிராக இறுதிப் போட்டியில் விளையாடுவது சந்தேகம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில் அவரை விளையாட வைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக நியூசிலாந்து அணியின் தலைமை பயற்சியாளர் கேரி ஸ்டீட் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக கேரி ஸ்டீட் கூறியதாவது:-

    மேட் ஹென்றிக்கு ஸ்கேன் மற்றும் சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் வழங்க நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

    தற்போதைய நிலையில் அவர் இடம் பெறுவது சிறிது தெரியாத நிலையில்தான் உள்ளது. அவர் கீழே விழுந்ததில் இருந்து தோள்பட்டையில் அவருக்கு வலி இருந்தது தெளிவாக தெரிந்தது. அவர் போட்டிக்கு தயாராகிவிடுவார் என்ற நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு கேரி ஸ்டீட் தெரிவித்துள்ளார்.

    லீக் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து தோல்வியடைந்தாலும், மேட் ஹென்றி 42 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் சாய்த்தார். இந்தியாவுக்கு எதிராக இறுதிப் போட்டியில் ஹென்றி விளையாடவில்லை என்றால் அது நியூசிலாந்துக்கு பின்னடைவாக அமையும்.

    ×