என் மலர்
தலைப்புச்செய்திகள்
- சென்னை உள்பட தமிழகத்தின் 19 மாவட்டத்துக்கு அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு.
- கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு.
சென்னை:
சென்னை உள்பட தமிழகத்தின் 19 மாவட்டத்துக்கு அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை உள்ளிட்ட 15 மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- கடந்த மக்களவை தேர்தலின் போது இந்தியா Vs பாரத் என்ற சர்ச்சை வெடித்தது
- நம்முடைய நாட்டின் பெயர் பாரத். நாம் அப்படி தான் அழைக்கவேண்டும் என்று ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.
நம்முடைய நாட்டின் பெயரை இந்தியா என்று கூறக்கூடாது 'பாரத்' என்றுதான் அழைக்கவேண்டும் என ஆர்.எஸ்.எஸ். பொது செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற விழாவில் பேசிய தத்தாத்ரேய ஹோசபாலே, "நம்முடைய நாட்டின் பெயர் பாரத். நாம் அப்படி தான் அழைக்கவேண்டும். இந்தியா என்பது ஆங்கில பெயர். நம்முடைய நாட்டின் பெயர் பாரத் என்றால், இந்திய அரசியலமைப்பு, இந்திய ரிசர்வ் வங்கி போன்ற நிறுவனங்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் போது வழங்கப்பட்ட காலனித்துவப் பெயரான 'இந்தியா'வை இன்னும் ஏன் பயன்படுத்துகின்றன. இதை நாம் பாரத் என்று மாற்றம் செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். தலைவரின் இந்தியா Vs பாரத் கருது தொடர்பாக பேசிய ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, "நமது நாட்டை பாரத், இந்தியா மற்றும் இந்துஸ்தான் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாட்டை யார் வேண்டுமானாலும் எந்த பெயரில் வேண்டுமானாலும் அழைக்கலாம்.
இந்திய விமானப்படை, இந்திய ராணுவம் என்று தான் நாம் அழைக்கிறோம், மேலும் 'சாரே ஜஹான் சே அச்சா இந்துஸ்தான் ஹுமாரா' பாடலையும் பாடுகிறோம்" என்று தெரிவித்தார்.
2024 மக்களவை தேர்தலின்போது எதிர்கட்சிகள் தங்களது கூட்டணி பெயரை இந்தியா என்று வைத்தனர். இதனையடுத்து இந்தியா Vs பாரத் என்ற சர்ச்சை வெடித்தது குறிப்பிடத்தக்கது.
- கடந்த மூன்று ஆண்டுகளில் 238 ஆசிரியர்கள் பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
- போக்சோ வழக்கில் 53 பேர் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.
தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள தகவலில், கடந்த மூன்று ஆண்டுகளில் 238 ஆசிரியர்கள் பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. 36 வழக்குகள் பள்ளியின் வெளியில் நடைபெற்றுள்ளன. சிறையில் 11 பேர் உள்ளனர்.
இந்த நிலையில் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி குற்றவாளிகள் என தண்டிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத 23 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.
போக்சோ வழக்கில் 53 பேர் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், முதல் கட்டமாக 23 பேர் நிரந்தரமாக பணியில் இருந்த நீக்கப்பட்டுள்ளனர்.
- தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா- பெங்களூரு அணிகள் மோதுகிறது.
- கோடையில் தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளபட உள்ளது.
உலக அளவில் பேசப்படும் டி20 தொடராக ஐபிஎல் பார்க்கப்படுகிறது. இந்த தொடரின் 18-வது சீசன் இந்த மாதம் 22-ந் தேதி தொடங்குகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஏலத்தில் நிறைய வீரர்கள் மற்ற அணிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனால் இந்த சீசனுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா- பெங்களூரு அணிகள் மோதுகிறது.
இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஹோம் மைதானமான பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெரிய மாற்றம் செய்யப்பட உள்ளது.
அந்த வகையில் இந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தின் பராமரிப்புக்கு சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர்தான் பயன்படுத்தப்படும் என பெங்களூரு குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் அறிவித்துள்ளது. மேலும் கோடையில் தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளபட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தம்பதிக்கு ஸ்ரீதா ரெட்டி (15 ), விஸ்வன் ரெட்டி (10) என ஒரு மகள், மகன் இருந்தனர்.
- சந்திரசேகர் ரெட்டி ஹப்சிகுடாவில் உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக வேலை செய்தார்.
தெலுங்கானா மாநிலம் கல்குவத்தியை சேர்ந்தவர் சந்திரசேகர் ரெட்டி (வயது 44). இவரது மனைவி கவிதா (வயது 35).
தம்பதிக்கு ஸ்ரீதா ரெட்டி (15 ), விஸ்வன் ரெட்டி (10) என ஒரு மகள், மகன் இருந்தனர். சந்திரசேகர் ரெட்டி ஹப்சிகுடாவில் உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக வேலை செய்து வந்தார்.
கடந்த 6 மாதங்களாக வேலைக்கு செல்லவில்லை. இதனால் வருவாய் இல்லாமல் குடும்பம் வறுமையில் வாடியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சந்திரசேகர் ரெட்டி தனது மகளை தூக்கில் தொங்கவிட்டும், மகனுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தார்.
பின்னர் கணவன், மனைவி இருவரும் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். போலீசார் 4 பேரின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். சந்திரசேகர் ரெட்டி எழுதி வைத்த கடிதம் மூலம் அவர் கடன் தொல்லையால் மகன் மகளைக் கொன்று விட்டு மனைவியுடன் தற்கொலை செய்தது தெரியவந்தது.
- உலகின் மிகவும் மாசுபட்ட முதல் 5 நாடுகளில் பாகிஸ்தானும் இடம் பிடித்துள்ளது.
- உலகின் மாசுபட்ட தலைநகரங்களின் பட்டியலில் புதுடெல்லி முதல் இடம் பிடித்துள்ளது.
இஸ்லாமாபாத்:
சுவிஸ் காற்று தர தொழில்நுட்ப நிறுவனமான ஐ.கியூ.ஏர்-ன் உலக காற்று தர அறிக்கை 2024 வெளியாகி இருக்கிறது.
அதன்படி, உலகின் மிகவும் மாசுபட்ட முதல் 5 நாடுகளாக சாட், வங்கதேசம், பாகிஸ்தான், காங்கோ, இந்தியா ஆகியவை உள்ளன.
உலகின் மிகவும் மாசுபட்ட 20 நகரங்களில் 13 நகரங்கள் இந்தியாவில் உள்ளன. அசாமில் உள்ள பைர்னிஹாட், டெல்லி, பஞ்சாபில் உள்ள முல்லன்பூர், பரிதாபாத், லோனி, புதுடெல்லி, குருகிராம், கங்காநகர், கிரேட்டர் நொய்டா, பிவாடி, முசாபர்நகர், ஹனுமன்கர், நொய்டா ஆகிய 13 நகரங்கள் அதிக மாசுபட்ட நகரங்களாக கண்டறியப்பட்டுள்ளன. உலகில் மாசுபட்ட தலைநகரங்களில் புதுடெல்லி முதலிடத்தில் உள்ளது.
அதேநேரத்தில், உலகின் மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் 2023-ல் 3வது இடத்தில் இருந்த இந்தியா, 2024ல் 5-வது இடத்திற்கு சென்றுள்ளது. இதன்படி உலகின் மிகவும் மாசுபட்ட முதல் 5 நாடுகளாக சாட், வங்கதேசம், பாகிஸ்தான், காங்கோ, இந்தியா ஆகியவை உள்ளன.
கடந்த ஆண்டு பாகிஸ்தானில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு புகை மூட்டம் நிலவியது. குறிப்பாக பஞ்சாபில் நிலைமை பேரிடர் என அறிவிக்கப்பட்டு, சுமார் 2 மில்லியன் மக்கள் உடல்நலப் பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெற வேண்டியிருந்தது.
மாசுபாட்டை எதிர்த்துப் போராட அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அவற்றில் ஊரடங்கு உத்தரவுகளை விதித்தல் மற்றும் பள்ளிகளை மூடுதல் ஆகியவை அடங்கும்.
சர்வதேச நுண்ணறிவு நிறுவனமான இப்சோஸின் அறிக்கையின்படி, பாகிஸ்தானில் 10 பேரில் ஏழு பேர் புகைமூட்டம் காரணமாக உடல்நலப் பிரச்சனைகளை எதிர்கொண்டனர் என தெரிவித்துள்ளது.
- சத்ரபதி சம்பாஜிநகர் (அவுரங்காபாத்) மாவட்டத்தில் உள்ள குல்தாபாத் பகுதியில் கல்லறை உள்ளது.
- ஒளரங்கசீப்பின் கல்லறை அகற்றப்பட வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம்
400 வருடத்திற்கு முன் வாழ்ந்த முகலாய மன்னர் அவுரங்கசீப்பை முன்வைத்து மகாராஷ்டிரா அரசியல் அல்லோலகல்லோலப்பட்டு வருகிறது. சத்திரபதி சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கையை தழுவி சாவா என்ற பெயரில் விக்கி கௌஷல் நடிப்பில் இந்தி படம் ஒன்று வெளியானது.
அதில் வில்லனாக வரும் அவுரங்கசீப் இந்து மன்னர் சாம்பாஜிக்கு பல்வேறு சித்திரவதைகளை செய்யும் நெஞ்சைப் பிழியும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதை சமாஜ்வாதி எம்எல்ஏ அபு அஸ்மி மறைமுகமாக பேட்டி ஒன்றில் விமர்சித்தார்.

அவர் கூறியதாவது, ஔரங்கசீப்பை நான் ஒரு கொடூரமான, சகிப்புத்தன்மையற்ற ஆட்சியாளராகக் கருதவில்லை. இப்போதெல்லாம் திரைப்படங்கள் மூலம் அவுரங்கசீப் பிம்பம் சிதைக்கப்படுகிறது.
அவுரங்கசீப் பல கோயில்களைக் கட்டினார் என்றும், அவரது படையில் பல இந்துக்கள் தளபதிகளாக இருந்தனர் என்று தெரிவித்தார்.

இந்த புகழ்ச்சி மகாராஷ்டிர ஆளும் பாஜக கூட்டணி இடையேயும், இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற சிவசேனா இடையேயேயும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அபு அஸ்மி சட்டமன்ற கூட்டத்தொடரில் இருந்தே இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்தும் சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. சத்ரபதி சம்பாஜிநகர் (அவுரங்காபாத்) மாவட்டத்தில் உள்ள குல்தாபாத் பகுதியில் தொல்லியல் துறையால் பராமரிக்கப்பட்டுவரும் அவுரங்கசீப்பின் கல்லறையை இடித்து அகற்ற வேண்டும் என்று பாஜக கூட்டணி தலைவர்கள், ஆர்எஸ்எஸ்காரர்கள், இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அவுரங்கசீப் கல்லறையை அகற்ற தானும் விரும்புவதாக மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தனது ஆசையை வெளிப்படுத்தி உள்ளார்.
நேற்று அவர் பேசுகையில், ஒளரங்கசீப்பின் கல்லறை அகற்றப்பட வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம். ஆனால் இதில் ஒரு சட்டத் சிக்கல் உள்ளது. அதாவது, காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது ஔரங்கசீப்பின் கல்லறையை இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையிடம் (ASI) ஒப்படைத்திருந்தது.
இப்போது, சட்டத்தின்படி, ASI பாதுகாப்பின் கீழ் உள்ள எந்த இடத்தையும் அகற்றுவது குறித்து நாங்கள் முடிவெடுக்க முடியாது. எனவே கல்லறையை அகற்றுவதானால் அதை சட்டத்தின் கட்டமைப்பிற்குள் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
- கே.எல்.ராகுலை ரூ.14 கோடிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் வாங்கியது.
- ரூ. 18 கோடிக்கு டெல்லி அணியால் தக்கவைக்கப்பட்ட அக்சர் படேல் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இந்தியாவில் நடைபெறும் டி20 தொடரான ஐ.பி.எல். 18-வது சீசன் வருகிற 22-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது. இதன் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்திக்கிறது.
இந்த தொடருக்காக கடந்த வருடம் நடைபெற்ற மெகா ஏலத்தில் லக்னோ அணியின் கேப்டனாக இருந்த கே.எல்.ராகுலை ரூ.14 கோடிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் வாங்கியது. இதனால் அவர் டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் கேப்டன் பதவியை நிராகரித்துள்ளதாகவும் ஒரு வீரராக அணிக்கு பணியாற்ற விரும்புவதாகவும் கேஎல் ராகுல் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் டெல்லி அணியின் கேப்டனாக அக்சர் படேல் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. அக்சர் படேலை ரூ. 18 கோடிக்கு டெல்லி அணி தக்கவைத்தது குறிப்பிடதக்கது.
- அடுத்ததாக ஜோதிகா `டப்பா கார்டல்' என்ற நெட்பிளிக்ஸ் வெப் தொடரில் நடித்துள்ளார்.
- நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கடந்த ஆண்டு ஜோதிகா நடிப்பில் ஷைத்தான் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய இரண்டு இந்தி திரைப்படங்கள் வெளியானது. இந்த இரண்டு திரைப்படமுமே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் அடுத்ததாக ஜோதிகா `டப்பா கார்டல்' என்ற நெட்பிளிக்ஸ் வெப் தொடரில் நடித்துள்ளார். இவருடன் மலையாள நடிகை நிமிஷா சஜயன், ஷபானா ஆஸ்மி, ஷாலினி பாண்டெ, அஞ்சலி ஆனந்த் மற்றூம் கஜராஜ் ராவ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்தொடரை ஹிதேஷ் பாட்டியா இயக்கியுள்ளார். இந்த வெப் தொடர் அண்மையில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் ஜோதிகா சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் அவரின் கணவனான சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படத்திற்கு பல எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தது இதுக்குறித்து அவர் பேசியுள்ளார்.
அதில் அவர் " நான் பல மோசமான திரைப்படங்களை பார்த்துள்ளேன் ஆனால் அந்த திரைப்படங்கள் பாக் ஆபிஸில் நல்ல கலெக்ஷன் பெற்று ஹிட்டடித்துள்ளது.
ஆனால் அந்த திரைப்படங்களுக்கு விமர்சனங்கள் அவ்வளவு மோசமாக எழவில்லை. ஆனால் என் கணவன் திரைப்படம் நடித்து வெளிவரும் போது விமர்சகர்கள் மிகவும் மோசமான கருத்துகளை முன் வைக்கின்றனர். இது நியாயமற்றது. கங்குவா திரைப்படத்தில் சில பகுதிகள் சரியாக இல்லைத்தான் ஆனால் அவர்கள் அப்படத்திற்கான கடுமையான் உழைப்பை செலுத்திருக்கிறார்கள். அப்படத்திற்கு பல ஆயிரம் பேர் வேலை செய்துள்ளனர்.
சில மோசமான திரைப்படத்திற்கு கிடைக்காத எதிர்மறை விமர்சனங்கள் கங்குவா திரைப்படத்திற்கு கிடைத்தது என்னை அது பாதித்தது. மீடியா துறை இப்படி பாரபட்சமாக நடந்துக் கொள்வது வருத்தமளிக்கிறது." என கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 2024 மக்களவை தேர்தலின்போது எதிர்கட்சிகள் தங்களது கூட்டணி பெயரை இந்தியா என்று வைத்தனர்.
- கடந்த மக்களவை தேர்தலின் போது இந்தியா Vs பாரத் என்ற சர்ச்சை வெடித்தது
நம்முடைய நாட்டின் பெயரை இந்தியா என்று கூறக்கூடாது 'பாரத்' என்றுதான் அழைக்கவேண்டும் என ஆர்.எஸ்.எஸ் பொது செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற விழாவில் பேசிய தத்தாத்ரேய ஹோசபாலே, "நம்முடைய நாட்டின் பெயர் பாரத். நாம் அப்படி தான் அழைக்கவேண்டும். இந்தியா என்பது ஆங்கில பெயர்.
நம்முடைய நாட்டின் பெயர் பாரத் என்றால், இந்திய அரசியலமைப்பு, இந்திய ரிசர்வ் வங்கி போன்ற நிறுவனங்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் போது வழங்கப்பட்ட காலனித்துவப் பெயரான 'இந்தியா'வை இன்னும் ஏன் பயன்படுத்துகின்றன. இதை நாம் பாரத் என்று மாற்றம் செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.
2024 மக்களவை தேர்தலின்போது எதிர்கட்சிகள் தங்களது கூட்டணி பெயரை இந்தியா என்று வைத்தனர். இதனையடுத்து இந்தியா Vs பாரத் என்ற சர்ச்சை வெடித்தது குறிப்பிடத்தக்கது.
- 7 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.
- அழைப்பை ஏற்று கூட்டத்தில் பங்கேற்பதாக நவீன் பட்நாயக் உறுதி அளித்துள்ளதாக மத்திய சென்னை தொகுதி எம்.பி. தயாநிதி மாறன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக அடுத்தக்கட்டமாக நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு 7 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.
இதனை தொடர்ந்து, தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டத்தில் பங்கேற்குமாறு நவீன் பட்நாயகை சந்தித்து தி.மு.க. குழு அழைப்பு விடுத்துள்ளது.
ஒடிசா முன்னாள் முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தயாநிதிமாறன் ஆகியோர் நேரில் சென்று சந்தித்து அழைப்பு விடுத்துள்ளனர். அழைப்பை ஏற்று கூட்டத்தில் பங்கேற்பதாக நவீன் பட்நாயக் உறுதி அளித்துள்ளதாக மத்திய சென்னை தொகுதி எம்.பி. தயாநிதி மாறன் கூறியுள்ளார்.
- தமிழர்கள் வெடிகுண்டு வைக்கும் தீவிரவாதிகள் என்றார் ஒன்றிய அமைச்சர் ஷோபா.
- தமிழர்கள் நாகரிகம் இல்லாதவர்கள் என்றார் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
சென்னை:
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
2024-ல் பா.ஜ.க. ஒன்றிய அமைச்சர் ஷோபா, "தமிழர்கள் வெடிகுண்டு வைக்கும் தீவிரவாதிகள்! என கூறினார்.
2025-ல் பா.ஜ.க. ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், "தமிழர்கள் நாகரிகம் இல்லாதவர்கள்!" என தெரிவித்தார்.
இப்படியெல்லாம் பேசிவிட்டுப் பின்பு வருத்தம் தெரிவித்தாலும், பேசியபோது தமிழர்கள் மீது பா.ஜ.க.வினருக்கு இருக்கும் வன்மம் வெளிப்பட்டு விட்டது.
இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழ்நாடு, இவர்கள் கொண்டு வரும் தேசிய கல்விக் கொள்கையை எக்காரணம் கொண்டும் ஏற்காது.
நம் உரிமைக்கான போர்க்குரலைத் தமிழ்நாடு தொடர்ந்து எழுப்பும் என செங்கல்பட்டு அரசு விழாவில் ஆணித்தரமாகத் தெரிவித்தேன் என பதிவிட்டுள்ளார்.






