என் மலர்
தலைப்புச்செய்திகள்
- முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 5வது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம்.
- முதல்வர் முன்னிலையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து.
முதலீடுகளை ஈர்க்கும் விதமாக இன்று முதல் ஒரு வாரத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு முலமைச்சர் பயணம் மேற்கொள்கிறார்.
ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளில் முதல்வர் முன்னிலையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 5வது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். வாகன வழியில் திடீர் செலவுகள் உண்டு. எடுத்த காரியங்களை நிறைவேற்ற பெரும் பிரயாசை எடுக்கும் சூழ்நிலை அமையும்.
ரிஷபம்
லாபகரமான நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். கடல் பயண வாய்ப்புகள் கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மிதுனம்
ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சிக்கு பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
கடகம்
பதவியில் உள்ளவர்களால் உதவி கிடைத்து மகிழும் நாள். உதாசீனப்படுத்தியவர்கள் உங்கள் உதவி கேட்டு வருவர். பழைய பிரச்சனைகள் தீரும். உத்தியோக முயற்சி கைகூடும்.
சிம்மம்
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்புகள் கிட்டும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை.
கன்னி
குடும்பச் சுமை கூடும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் திருப்தி தரும். தேக ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு உண்டு.
துலாம்
நல்ல வாய்ப்புகள் நாடி வரும் நாள். உயர்ந்த மனிதர்களின் சந்திப்புக் கிட்டும். வாங்கல், கொடுக்கல்கள் திருப்தி தரும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் காண்பீர்கள்.
விருச்சிகம்
வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். நாடாளும் நபர்களின் நட்பு கிட்டும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்துசேர்ப்பர்.
தனுசு
நினைத்தது நிறைவேறும் நாள். பழுதடைந்த பழைய வாகனத்தை மாற்றம் செய்யும் எண்ணம் உருவாகும். சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.
மகரம்
உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். அடிப்படை வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். உத்தியோக முயற்சி கைகூடும்.
கும்பம்
எதிர்பார்த்த லாபம் தொழிலில் கிடைக்கும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். விவாக பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.
மீனம்
காலை நேரத்தில் கலக்கம் ஏற்படும் நாள். உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவதன் மூலம் உறவுகள் பகையாகும். உத்தியோகத்தில் தலைமையின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
- சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு 2 நாட்கள் நடக்கிறது.
- பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின் உள்பட உலக தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
மாஸ்கோ:
சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நாளை மற்றும் 1-ம் தேதி என 2 நாட்கள் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உள்பட உலக தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த மாநாட்டை தொடர்ந்து ரஷிய அதிபரை பிரதமர் மோடி சந்தித்துப் பேசுகிறார். இந்த தகவலை கிரெம்ளின் மாளிகையின் வெளிநாட்டு கொள்கை ஆலோசகர் யுரி உஷா கோவ் உறுதிப்படுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, 'ஒன்றாம் தேதி ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு சந்திப்புக்குப் பின் உடனடியாக எங்கள் அதிபர் (புதின்) மற்றும் இந்திய பிரதமர் மோடி இடையேயான சந்திப்பு நடக்கிறது' என்று கூறினார்.
மேலும் அவர் கூறும்போது, இதில் முக்கியமானது என்னவென்றால், வரும் டிசம்பரில் நமது அதிபரின் இந்திய பயணத்துக்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிவித்தார். இதன்மூலம் ரஷிய அதிபர் புதின் இந்த ஆண்டு இறுதியில் இந்தியா வருவதும் உறுதியாகி உள்ளது.
- முன்னாள் அதிபர் மனைவி மீது பரிசு பொருள் மற்றும் லஞ்சமாக பணம் பெற்றதாக புகார் எழுந்தது.
- இதுதொடர்பான வழக்கில் அவரும் கைது செய்யப்பட்டார்.
சியோல்:
தென்கொரிய அதிபராக இருந்த யூன் சுக் இயோல் கடந்த ஆண்டின் இறுதியில் நாட்டின் அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இதனால் அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு பதவிநீக்கம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
யூன் சுக் இயோலின் மனைவி கிம் கியோன் ஹீ தனது கணவரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி பரிசு பொருட்கள் மற்றும் லஞ்சமாக பணம் பெற்றதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் அவரும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், தென் கொரியா முன்னாள் அதிபரின் மனைவி கிம் கியோன் ஹீ மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் இது தொடர்பாக விசாரணை நடைபெற உள்ளது. விசாரணையின் இறுதியில் அவருக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்பட உள்ளது.
- தென்னிந்தியாவில் புல்லட் ரெயில் சேவை கொண்டு வரப்படும்.
- அதற்கான கணக்கெடுப்புக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என்றார்.
விசாகப்பட்டினம்:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்திய உணவு உற்பத்தி உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டு பேசியதாவது:
தென்னிந்தியாவில் புல்லட் ரெயில் சேவை கொண்டு வரப்படும். அதற்கான கணக்கெடுப்புக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இது ஐதராபாத், அமராவதி, சென்னை, பெங்களூருவை இணைக்கும் வகையில் அமையும். இந்த சேவையால் 4 நகரங்களைச் சேர்ந்த 5 கோடி மக்கள் பயன்பெறுவர்.
புல்லட் ரெயில் சேவை தவிர, தென் மாநிலங்கள் தங்களது சாலைகளை பெரிய அளவில் மேம்படுத்த போகிறது. சர்வதேச தரத்துக்கு இணையாக தொலைதூர சாலைகளை கூட சிறப்பாக பராமரிப்பது இதில் அடங்கும். இந்தியாவின் பழங்கள் விளைச்சலில் ஆந்திர பிரதேசம் 25 சதவீதம் பங்களிக்கிறது. விவசாயிகளுக்கான புதிய சர்வதேச சந்தைகளை தேடி வருகிறோம்.
உணவு பதப்படுத்துதல் மற்றும் தொடர்புடைய துறைகளில் நிறுவனங்களை நிறுவ முதலீட்டாளர்களை வலியுறுத்த புதிய முயற்சிகளுக்கான அனுமதிகளை ஆந்திர அரசு விரைவுபடுத்தும். அமெரிக்காவில் உள்ள சிலிக்கான் பள்ளத்தாக்கால் ஈர்க்கப்பட்ட ஒரு திட்டமான சிலிகான் வேலி திட்டம் அமராவதியில் நிறுவப்படுவதற்கு, எதிர்கால மேம்பாடு குறித்து பில் கேட்சுடன் ஆந்திரா ஒத்துழைக்கும் என தெரிவித்தார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- இதில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் 3-வது சுற்றில் வெற்றி பெற்றார்.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்றில் ஸ்பெயினைச் சேர்ந்த கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் லூசியானோ டார்டெரி உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-2, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
- உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்சில் நடந்து வருகிறது.
- இந்தியாவின் சாத்விக் சிராக் ஜோடி காலிறுதி சுற்றில் வெற்றி பெற்றது.
பாரிஸ்:
29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, மலேசியாவின் ஆரோன் சியா-சோ வூய் யீக் ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 21-12, 21-19 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
- இஸ்ரேல் உடனான அனைத்து வர்த்தகத்தையும் துண்டித்து வான்வெளியை மூடுவதாக துருக்கி தெரிவித்தது.
- இஸ்ரேலின் கப்பல்கள் துருக்கி துறைமுகத்திற்கு வருவதற்கு கடந்த வாரம் தடை விதித்தது.
அங்காரா:
இஸ்ரேல்-காசா இடையிலான போர் தொடங்கியது முதலே துருக்கி மற்றும் இஸ்ரேல் இடையிலான உறவு மோசமடைந்து வருகிறது.
காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் தடையின்றி செல்ல அனுமதிக்கும் வரை இஸ்ரேல் உடனான அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்துவதாக கடந்த ஆண்டு மே மாதம் துருக்கி கூறியது.
இந்நிலையில், இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தகத்தையும் துருக்கி முற்றிலும் துண்டிக்க முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அந்நாட்டின் வெளியுறவு மந்திரி ஹக்கன் ஃபிடன் கூறுகையில், இஸ்ரேலுடனான அனைத்து பொருளாதார மற்றும் வணிக உறவுகளையும் துண்டித்து, இஸ்ரேலிய விமானங்களுக்கு அதன் வான்வெளியை துருக்கி மூடும் என தெரிவித்தார்.
மேலும், பாராளுமன்றத்தின் அமர்வில் பேசிய அவர், காசா, லெபனான், ஏமன், சிரியா, ஈரான் மீதான இஸ்ரேலின் பொறுப்பற்ற தாக்குதல்கள் சர்வதேச ஒழுங்கை மீறும் ஒரு பயங்கரவாத அரசு மனநிலையின் தெளிவான அறிகுறி என தெரிவித்தார்.
ஏற்கனவே கடந்த வாரம் இஸ்ரேலின் கப்பல்கள் துருக்கி துறைமுகத்திற்கு வருவதற்கு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
- முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 182 ரன் எடுத்தது.
- அடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் 143 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
துபாய்:
ஆசிய கோப்பை தொடருக்கு தயாராகும் பொருட்டு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) அணிகள் இடையே முத்தரப்பு டி20 தொடர் நடைபெறுகிறது.
முத்தரப்பு தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்தனர். கேப்டன் சல்மான் ஆகா அரை சதம் கடந்து 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 143 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
கேப்டன் ரஷீத்கான் அதிரடியாக ஆடி 16 பந்தில் 5 சிக்சர் உள்பட 39 ரன்கள் எடுத்தார். தொடக்க ஆட்டக்காரர் குர்பாஸ் 38 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதன்மூலம் பாகிஸ்தான் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் சார்பில் ஹரிஸ் ராப் 4 விக்கெட்டும், ஷாஹின் அப்ரிடி, முகமது நவாஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபராக பதவி வகித்தவர் கமலா ஹாரிஸ்.
- இவருக்கு வழங்கப்பட்டு வந்த ரகசிய சேவை பாதுகாப்பு திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்டது.
வாஷிங்டன்:
கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபராக இருந்தவரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிசும் போட்டியிட்டனர். இதில் டிரம்ப் அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
அமெரிக்க சட்டப்படி பதவி விலகிய துணை அதிபருக்கு ஆறு மாதங்கள் வரை ரகசிய சேவை பாதுகாப்பு வழங்கப்படும். அதிபராக இருந்தவருக்கு வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும். ஜோ பைடன் ஆட்சி காலத்தில் முன்னாள் துணை அதிபர்களுக்கான பாதுகாப்பு மேலும் 6 மாதத்துக்கு நீட்டிக்கும் வகையிலான உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், கமலா ஹாரிசுக்கு வழங்கப்பட்ட ரகசிய சேவை பாதுகாப்பை டிரம்ப் அரசு திரும்பப் பெற்றது.
இதுதொடர்பாக டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 2025-ம் ஆண்டு ஜனவரியில் பதவி விலகிய கமலா ஹாரிசின் பாதுகாப்பு ஜூலையில் காலாவதியானது. இதனால் இந்த பாதுகாப்பை விலக்கி கொள்வதற்கான உத்தரவு சமீபத்தில் பிறப்பிக்கப்பட்டது என தெரிவித்தார்.
கடந்த ஆண்டு, டிரம்ப்பை கொலை செய்வதற்கு இரண்டு சதித் திட்டங்கள் நடந்தன. அதனை ரகசிய சேவைப்பிரிவினர் முறியடித்து இருந்தனர். அதிபர்களை பாதுகாப்பதில் அவர்களின் பங்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.
- முதலில் பேட் செய்த இலங்கை அணி 298 ரன்களைக் குவித்தது.
- பதும் நிசங்கா, கமிந்து மெண்டிஸ் அரை சதம் கடந்து வெளியேறினர்.
ஹராரே:
இலங்கை அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஹராரேயில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 6 விக்கெட்டுக்கு 298 ரன்களைக் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 76 ரன்னில் அவுட்டானார். கமிந்து மெண்டிஸ் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 57 ரன்னில் வெளியேறினார்.
இதையடுத்து, 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பென் கர்ரன் சிறப்பாக ஆடி 70 ரன்கள் எடுத்தார்.
பொறுப்புடன் ஆடிய சிக்கந்தர் ராசா அரை சதம் கடந்தார். அணியை வெற்றி பெறவைக்கப் போராடிய அவர் 92 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், ஜிம்பாப்வே அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 291 ரன்கள் மட்டுமே எடுத்து 7 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
சிக்கந்தர் ராசா அவுட்டாகும்வரை இலங்கை அணிக்கு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையே இல்லை.
இலங்கை அணி சார்பில் தில்ஷன் மதுஷனகா 4 விக்கெட்டும், அசிதா பெர்னாண்டோ 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் ஒருநாள் தொடரில் இலங்கை 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
- இரண்டு மடங்குக்கும் அதிகமாக, தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இருக்கிறது.
- LKG, UKG உள்ளிட்ட தொடக்கக் கல்வி, இன்று தமிழக அரசுப் பள்ளிகளில் நடைபெறுவதில்லை.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது என்பதை, ஒவ்வொரு ஆண்டும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
கடந்த 2023 - 2024 கல்வியாண்டில் 42.23 சதவீதமாக இருந்த அரசுப் பள்ளி சேர்க்கை விகிதம், 2024 - 2025 கல்வி ஆண்டில் 39.17 சதவீதமாக குறைந்து, 2025 - 2026 நடப்புக் கல்வி ஆண்டில், 37.92 சதவீதமாக மிகவும் குறைந்திருக்கிறது.
நடப்புக் கல்வியாண்டில், தமிழகத்தில் உள்ள 37,595 அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை, 2.39 லட்சமாக இருக்கையில், 12,929 தனியார் பள்ளிகளில், 5.26 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இரண்டு மடங்குக்கும் அதிகமாக, தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இருக்கிறது.
தமிழகத்தில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் சொந்த தொகுதி உட்பட, பல அரசுப் பள்ளிகளில் கட்டிடங்கள் இல்லாமல், மரத்தடியில் வகுப்பறைகள் செயல்படுவதும், பள்ளிக் கட்டிடங்கள் இடிந்து விழுவதும், போதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படாததும், அரசுப் பள்ளி மாணவர்கள் இடையே சாதிய வன்மம் அதிகரித்து, மாணவர்கள் தாக்குதலுக்குள்ளாவதும் கடந்த நான்கு ஆண்டுகளில் மிகவும் அதிகரித்திருப்பதால், அரசுப் பள்ளிகளின் மீது நம்பிக்கை இழந்த பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டுகிறார்கள்.
இன்னும் சொல்லப் போனால், திமுகவின் கல்விக் கொள்கை என்பதே, தனியார் பள்ளிகளுக்குப் பயன்படும் வகையில்தான் அமைந்திருக்கிறது. வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள், தனியார் பள்ளிகளில் பல மொழிகள் கற்கும் வாய்ப்பு வழங்கப்படும் நேரத்தில், ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்படுகிறது. கடந்த ஆட்சிக் காலத்தில் அரசுப் பள்ளிகளில் கொண்டு வரப்பட்ட LKG, UKG உள்ளிட்ட தொடக்கக் கல்வி, இன்று தமிழக அரசுப் பள்ளிகளில் நடைபெறுவதில்லை.
மேலும், அரசுப் பள்ளிகளில், ஆண்டாண்டு கால திமுகவின் புரட்டுகளை பாடத்திட்டத்தில் திணித்திருப்பதால், கடன் வாங்கினாலும் பரவாயில்லை, தங்கள் குழந்தைகளுக்குத் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக, எளிய குடும்பங்களும், தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்கின்றனர்.
இதனால், பெருந்தலைவர் காமராஜர், அரசுப் பள்ளிகள் மூலமாகச் செய்த கல்விப் புரட்சி, திமுக அரசால் இன்று பாழ்பட்டுப் போய்விட்டது. தமிழகப் பெற்றோர்களும், பெரும் கடன் சுமைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
திமுகவினர் பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே, தமிழகத்தில் அனைத்துத் துறைகளும் செயல்பட்டு வருகின்றன. அதில், பள்ளிக் கல்வித்துறையையும் பலியிட்டிருப்பது வெட்கக்கேடு.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






