என் மலர்
தலைப்புச்செய்திகள்
- ஐந்து இனப்படுகொலைச் செயல்களில் நான்கை இஸ்ரேல் செய்ததாக ஆணையம் தனது 72 பக்க அறிக்கையில் தெரிவித்துள்ளது.
- இனக்குழுவினருக்கு வேண்டுமென்றே அழிவுக்கான சூழ்நிலைகளை உருவாக்குவது மற்றும் பிறப்புகளைத் தடுப்பது ஆகியவை இதில் அடங்கும்.
ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன விசாரணை ஆணையம், இஸ்ரேல் காசாவில் இனப்படுகொலை செய்ததாகக் குற்றம் சாட்டி பரபரப்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலியப் படைகள் காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்ததற்கான வலுவான ஆதாரங்கள் இருப்பதாக அறிக்கை கூறுகிறது.
இந்தப் போரில் இஸ்ரேல் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்ததாக ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.
சர்வதேச சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட ஐந்து இனப்படுகொலைச் செயல்களில் நான்கை இஸ்ரேல் செய்ததாக ஆணையம் தனது 72 பக்க அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஒரு இனக்குழுவினரை குறிவைத்து கொல்வது, அவர்களுக்கு கடுமையான உடல் மற்றும் மன ரீதியான தீங்கு விளைவிப்பது, அந்த இனக்குழுவினருக்கு வேண்டுமென்றே அழிவுக்கான சூழ்நிலைகளை உருவாக்குவது மற்றும் பிறப்புகளைத் தடுப்பது ஆகியவை இதில் அடங்கும்.
இஸ்ரேலிய தலைவர்களின் கருத்துகளும் இராணுவத்தின் செயல்களும் அவர்களின் இனப்படுகொலை நோக்கத்திற்கான சான்றுகள் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. வழக்கம்போல இஸ்ரேல் இந்த அறிக்கையை நிராகரித்துள்ளது.
- டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் ஆடிய வங்கதேசம் 154 ரன்கள் எடுத்தது.
அபுதாபி:
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
இன்று நடைபெற்ற 9-வது லீக் ஆட்டத்தில் 'பி' பிரிவில் இடம்பெற்றுள்ள ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, தொடக்க ஆட்டக்காரர் தன்ஜித் ஹசன் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 31 பந்தில் 52 ரன்கள் குவித்தார். சைப் ஹசன் 30 ரன்கள் எடுத்தார். தவ்ஹிக் ஹிருதோய் 26 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், வங்கதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்தது.
ஆப்கானிஸ்தானின் ரஷித் கான், நூர் அகமது தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்குகிறது.
- தனுஷ் இயக்கி நடிக்கிறார்.
- அக்டோபர் 1ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.
தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அக்டோபர் 1-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இப்படத்தில் நித்யா மேனன், ஷாலினி பாண்டே, அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீடு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் அடுத்த பாடலமான என் பாட்டன் சாமி வரும் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
- தமிழக அரசியல் நிலவரம் பற்றியும், ஒருங்கிணைப்பு பற்றியும் பேசுவார் எனத் தகவல்.
- பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தவும் வாய்ப்பு.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பதற்காக டெல்லி சென்றுள்ளார். டெல்லி சென்ற அவர் இன்றிரவு 8 மணியளவில் அமித் ஷா சந்தித்து பேசினார். அவருடன் தம்பிதுரை எம்.பி. சிவி சண்முகம் உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் சென்றனர்.
சில நாட்களுக்க முன்னதாக செங்கோட்டையன் அமித் ஷாவை சந்தித்திருந்தார். அப்போது பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைவது தொடர்பாக பேசியதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை சந்திக்கிறார்.
இந்த சந்திப்பின்போது தமிழக அரசியல் நிலவரம் பற்றியும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு குறித்தும் இருவரும் பேசுவதற்கு வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்துவார் என்று தெரிகிறது.
இந்த சந்திப்புகளை முடித்துவிட்டு இன்று இரவு எடப்பாடி பழனிசாமி டெல்லியில் தங்குகிறார். நாளை அவர் தமிழகம் திரும்புகிறார். டெல்லியில் இருந்து சென்னைக்கு வராமல், நேரடியாக கோவைக்கு செல்வதற்கு அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
- ஆர்டினரி பீப்பிள் படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருது பெற்றார்.
- ரெட்போர்ட் ஒரு அர்ப்பணிப்புள்ள சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் இருந்தார்.
லாஸ் ஏஞ்சல்ஸ்:
பிரபல ஹாலிவுட் நடிகரும், இயக்குனருமான ராபர்ட் ரெட்போர்டு (89). இவர் 1981-ம் ஆண்டு ஆர்டினரி பீப்பிள் திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றார்.
மேலும், இவர் சுற்றுச்சூழல் ஆர்வலருமாக இருந்து வந்தார். இவரது இறப்பை அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ராபர்ட் ரெட்போர்ட் செப்டம்பர் 16, 2025 அன்று உட்டா மலைகளில் உள்ள சன்டான்ஸில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவர் நேசித்த இடம், அவர் நேசித்தவர்களால் சூழப்பட்டது. அவரை மிகவும் மிஸ் செய்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரைப்படத் தயாரிப்புக் கலையின் மீதான அவரது ஆர்வம் ஒரு லாப நோக்கற்ற நிறுவனமான சன்டான்ஸ் நிறுவனத்தை உருவாக்க வழிவகுத்தது.
ரெட்போர்ட் ஒரு அர்ப்பணிப்புள்ள சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் இருந்தார். உட்டாவுக்குச் சென்று மாநிலத்தின் இயற்கை நிலப்பரப்பையும் அமெரிக்க மேற்குப் பகுதியையும் பாதுகாப்பதற்கான முயற்சிகளுக்கு தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அன்புமணி ராமதாஸ் பத்திரிகைகளுக்கு கொடுக்கும் அறிக்கையில் நம்பர் 10, திலக் தெரு, தி.நகர் என்றுதான் இருக்கும்.
- டாக்டர் ராமதாஸ் ஒப்புதலுடன் வழங்கப்பட்ட உறுப்பினர் கார்டிலும் தி.நகர் முகவரிதான் இருக்கும்.
பாமக நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் ராமதாஸ்தான். அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் முடிவடைந்து விட்டது. அவர் எப்படி செயற்குழுவை கூட்ட முடியும். மாமல்லபுரத்தில் கூட்டிய கூட்டம் செல்லாது. தேர்தல் ஆணையம் தி.நகர் முகவரிக்கு கடிதம் அனுப்பியது, முகவரி மோசடி காரணமாக என்று பாமக கவுரவத் தலைவர் ஜி.கே. மணி, அன்புமணி மீது மோசடி குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
அதற்கு அன்புமணி ஆதரவாளரான வழக்கறிஞர் பாலு விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்கறிஞர் பாலு கூறியதாவது:-
முகவரி மோசடி என்கிறார். திடீரென்று நேற்றுதான் தெரிந்தது என்கிறார் ஜி.கே. மணி. 25 வருடம் கட்சியின் தலைவராக இருந்தவர். சட்டசபை மற்றும் பொது வெளியில் கட்சியாக பேசியவர். அவர் இப்படி அபாண்டமாக பேசுவது கவுரவ தலைவருக்கு கவுரவமா? என கேள்வி கேட்க விரும்புகிறேன்.
அன்புமணி ராமதாஸ் தலைவராக 2022ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட பிறகு, ஜூன் 1ஆம் தேதி தி.நகருக்கு தலைமை அலுவலகத்தை மாற்ற தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் கொடுத்து விட்டோம். அதில் இருந்து தி.நகர் திலக் தெருதான் தலைமை அலுவலகமாக இருந்து வருகிறது.
அன்புமணி ராமதாஸ் பத்திரிகைகளுக்கு கொடுக்கும் அறிக்கையில் நம்பர் 10, திலக் தெரு, தி.நகர் என்றுதான் இருக்கும். டாக்டர் ராமதாஸ் ஒப்புதலுடன் பாமக உறுப்பினர் கார்டு வழங்கப்பட்டது. அதற்கான பணி மேற்கொள்ளப்பட்டது. அதிலும் தி.நகர் முகவரிதான் இருக்கும்.
தேர்தல் ஆணையம் சார்பில் பல வருடங்களாக தி.நகர் முகவரிக்குதான் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. ஏதோ, நேற்றுதான் திடீரென தெரிந்தது போன்று, பதட்டமாகி விட்டோம் என்று சொல்கிறார். அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. அதில் அலுவலகம் முகவரியை மாற்றிவிட்டதாக கூறும் குற்றச்சாட்டும் ஒன்று. இது நேற்றைய செய்தி அல்ல. ஒரு பழைய செய்தி.
அலுவலகம் மாற்றப்பட்டது எல்லோருக்கும் தெரியும். 63 நாட்டு முத்து நாய்க்கன் தெரு என்றால், தைலாபுரத்தில் உறுப்பினர் அட்டை சேர்க்கையின்போது ஜி.கே. மணி தூக்கிப் பிடித்த கார்டில் தைலாபுரம், விழுப்புரம் மாவட்டம் என ஏன் இருந்தது?. 63 நாட்டு முத்து நாய்க்கன் தெரு என இப்போது சொல்பவர், தைலாபுரம் என மாற்றி எப்படி செய்தி வெளியிட முடியும்.
இவ்வாறு பாலு தெரிவித்தார்.
- எதிர்க்கட்சிகளை பேச அனுமதிப்பதில்லை. வாக்குகள் திருடப்படுகின்றன.
- நாடு அறிவிக்கப்படாத அவசர நிலையை நோக்கிச் செல்கிறது என்றார்.
மும்பை:
காங்கிரஸ் எம்.பி.யான பிரணிதி ஷிண்டே மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசை இன்று சந்தித்தார். அதன்பின், அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பிரதமர் மோடியின் பிறந்தநாள் எங்களுக்கு கருப்பு நாள்.
நாடு அறிவிக்கப்படாத அவசர நிலையை நோக்கி செல்கிறது. எதிர்க்கட்சிகளின் குரல்கள் நசுக்கப்படுகிறது.
எதிர்க்கட்சிகளை பேச அனுமதிப்பதில்லை. வாக்குகள் திருடப்படுகின்றன.
பத்திரிகை சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஊடகங்கள் மோடிக்கு ஆதரவாக செயல்படுகின்றன.
விவசாயிகளின் போராட்டங்கள் புறக்கணிக்கப்படுகின்றன.
பாகிஸ்தானுடன் சண்டை போடும் அதே வேளையில், அவர்களுடன் கிரிக்கெட் விளையாடுகிறோம்.
இந்திய வீரர்களுக்கு பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
சோலாப்பூர் மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்.
கடந்த 4 ஆண்டாக சோலாப்பூர் நகராட்சித் தேர்தல்கள் நடத்தப்படாதது ஜனநாயகப் படுகொலை என தெரிவித்தார்.
- பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல்.
- பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பயங்கரவாத முகாம் மீதும் தாக்குதல் நடத்தியது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது. அதில் பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பின் முகாமும் ஒன்று.
இந்த தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியா தெரிவித்தது. இந்த நிலையில், ஜெய்ஷ்-இ-முகமது அமைபின் கமாண்டர் இல்யாஸ் காஷ்மீரி, இந்தியா தாக்குதலில் மசூத் அசாத்தின் குடும்பம் சிதைந்ததாக பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.
கடந்த 6ஆம் தேதி பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் நடைபெற்ற மிசன் முஷ்தபா மாநாட்டில் இல்யாஸ் காஷ்மிரி உருதில் பேசுவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.
பலர் துப்பாக்கிகள் ஏந்திய நிலையில், அவர்களுக்கு மத்தியில் இல்யாஸ் காஷ்மீரி "சித்தாந்தம்மற்றும் நாட்டின் புவிபரப்பு எல்லையை பாதுகாப்பதற்கு நாம் டெல்லி, காபூல், கந்தகார் மீது தாக்கதல் நடத்தினோம். அனைத்து தியாகங்களையும் செய்த பிறகு, மே 7ஆம் தேதி மசூத் அசாரின் குடும்ப உறுப்பினர்கள் பஹவல்பூரில் இந்திய தாக்குதலில் சிதைந்துவிட்டனர்" எனக் கூறுவதுபோல் வீடியோவில் உள்ளது.
லாகூரில் இருந்து சுமார் 400 கி.மீ. தூரத்தில் உள்ள பஹல்வர்பூர் ஜமியா மஸ்ஜித் சுபான் அல்லாஹ் மீது இந்திய தாக்குதல் நடத்தியதில் மசூத் அசார் குடும்பத்தை சார்ந்த 10 பேரும், அவருக்கு நெருங்கிய உதவியாளர்கள் நான்கு பேரும் கொல்லப்பட்டதாக செய்தி வெளியானது. மசூத அசாரின் மூத்த சகோதரி, அவருடைய கணவர், மருமகன், அவருடைய மனைவி, ஐந்து குழந்தைகள் என பலர் கொல்லப்பட்டனர்.
1999ஆம் ஆண்டு IC-184 விமானம் கடத்தப்பட்டபோது, விமானிகளுக்குப் பதிலாக அசார் ஜெயிலில் இருந்து ரிலீஸ் செய்யப்பட்டார். இந்தியாவின் அழுத்தத்தைத் தொடர்ந்து 2019ஆம் அண்டு ஐ.நா. மசூத் அசார உலகளாவிய பயங்கரவாதியாக அறிவித்தது. 2019 ஏப்ரலில் இருந்து மசூத் அசார் பொது வெளியில் காணப்படவில்லை. அவர் பஹவல்பூரில் பாதுகாப்பான இடத்தில் மறைந்து இருப்பதாக கூறப்படுகிறது.
ஜேஇஎம் இந்தியாவில் 2001 பாராளுமன்ற தாக்குதல், 2000-த்தில் ஜம்மு-காஷ்மீர் சட்டசபை மீது தாக்குதல், 2016 பதான்கோட் விமானப்படை தளம் மீது தாக்குதல், 2019 புல்வாமா தற்கொலை படை தாக்குதல் போன்ற பயங்கரவாத செயல்களை நடத்தியுள்ளது.
- ரெட்ட தல படத்தில் அருண் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ளார்.
- இப்படத்தில் தன்யா ரவிச்சந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த 'மான் கராத்தே' படத்தை இயக்கிய திருக்குமரன் அடுத்ததாக அருண் விஜய் -யின் 'ரெட்ட தல' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அருண் விஜயின் ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். இவர் இதற்கு முன் சிம்பு நடித்த 'வெந்து தணிந்தது காடு' படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் தன்யா ரவிச்சந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தின் இசையை சாம். சி.எஸ் மேற்கொள்கிறார். பிடிஜி யூனிவர்சல் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
இப்படத்தில் அருண் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ளார். படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது.
இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்டை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி படத்தின் முதல் பாடலின் ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் படத்தின் முதல் பாடலான கண்ணமா என்ற பாடம் வரும் 19-ந் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை தனுஷ் பாடியுள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- பிரதமர் மோடி பீகார் வரும்போது ராகுல் காந்தியை திட்டுவார்.
- காங்கிரசின் ராகுல் காந்தி பீகாரில் பிரதமர் மோடியை திட்டுவார்.
பாட்னா:
பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும்
தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பிரதமர் மோடி பீகார் வரும்போது, ராகுல் காந்தியை திட்டுவார். ராகுல் காந்தி பிரதமர் மோடியை திட்டுவார்.
பீகாரில் இருந்து இடம்பெயர்வு எப்படி நிறுத்தப்படும் என்பது பற்றி இரு தலைவர்களும் பேசவில்லை.
பீகார் மக்கள் வெள்ளத்தில் இருந்து எப்படி நிவாரணம் பெறுவார்கள் என்பது பற்றி இருவருமே பேசவில்லை.
பீகாரில் தொழிற்சாலைகள் இல்லாததற்கு பிரதமர் மோடி விளக்க வேண்டும் என தெரிவித்தார்.
- முதல் சிங்கிளான தீக்கொளுத்தி பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
- பைசன் படத்தின் 2-வது பாடலான றெக்க றெக்க பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் பைசன். இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
பைசன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17-ம் தேதி வெளியாக இருக்கிறது.
இப்படத்தின் முதல் சிங்கிளான தீக்கொளுத்தி பாடலை படக்குழு அண்மையில் வெளியிட்டது. இப்பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், பைசன் படத்தின் 2-வது பாடலான றெக்க றெக்க பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை வேடன் மற்றும் அறிவு பாடியுள்ளனர்.
இந்நிலையில் விஜய் ஆண்டனியின் 25வது படமான சக்தித் திருமகன் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை அருண் பிரபு இயக்கியுள்ளார். அருண் பிரபு இயக்கத்தில் இதற்கு முன் அருவி மற்றும் வாழ் போன்ற வெற்றித் திரைப்படங்கள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் கதாநாயகியாக த்ரிப்தி நடித்திருக்கிறார். இவர் ஒரு விளம்பர பட நடிகை மற்றும் இவர் இதற்கு முன் அமேசான் மினி வெப் தொடரில் நடித்துள்ளார். திரைப்படம் வரும் 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. விஜய் ஆண்டனியின் வழக்கமான ப்ரோமோஷனான படத்தின் முதல் 3 நிமிட காட்சியை நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.






