அறிவு- வேடன் அதிரடி காம்போவில் வெளியான பைசன் படத்தின் 2-வது பாடல்!

முதல் சிங்கிளான தீக்கொளுத்தி பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.பைசன் படத்தின் 2-வது பாடலான றெக்க றெக்க பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
அறிவு- வேடன் அதிரடி காம்போவில் வெளியான பைசன் படத்தின் 2-வது பாடல்!
Published on

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் பைசன். இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.

இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

பைசன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17-ம் தேதி வெளியாக இருக்கிறது.

இப்படத்தின் முதல் சிங்கிளான தீக்கொளுத்தி பாடலை படக்குழு அண்மையில் வெளியிட்டது. இப்பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், பைசன் படத்தின் 2-வது பாடலான றெக்க றெக்க பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை வேடன் மற்றும் அறிவு பாடியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com