என் மலர்
தலைப்புச்செய்திகள்
- பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல்.
- பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பயங்கரவாத முகாம் மீதும் தாக்குதல் நடத்தியது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது. அதில் பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பின் முகாமும் ஒன்று.
இந்த தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியா தெரிவித்தது. இந்த நிலையில், ஜெய்ஷ்-இ-முகமது அமைபின் கமாண்டர் இல்யாஸ் காஷ்மீரி, இந்தியா தாக்குதலில் மசூத் அசாத்தின் குடும்பம் சிதைந்ததாக பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.
கடந்த 6ஆம் தேதி பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் நடைபெற்ற மிசன் முஷ்தபா மாநாட்டில் இல்யாஸ் காஷ்மிரி உருதில் பேசுவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.
பலர் துப்பாக்கிகள் ஏந்திய நிலையில், அவர்களுக்கு மத்தியில் இல்யாஸ் காஷ்மீரி "சித்தாந்தம்மற்றும் நாட்டின் புவிபரப்பு எல்லையை பாதுகாப்பதற்கு நாம் டெல்லி, காபூல், கந்தகார் மீது தாக்கதல் நடத்தினோம். அனைத்து தியாகங்களையும் செய்த பிறகு, மே 7ஆம் தேதி மசூத் அசாரின் குடும்ப உறுப்பினர்கள் பஹவல்பூரில் இந்திய தாக்குதலில் சிதைந்துவிட்டனர்" எனக் கூறுவதுபோல் வீடியோவில் உள்ளது.
லாகூரில் இருந்து சுமார் 400 கி.மீ. தூரத்தில் உள்ள பஹல்வர்பூர் ஜமியா மஸ்ஜித் சுபான் அல்லாஹ் மீது இந்திய தாக்குதல் நடத்தியதில் மசூத் அசார் குடும்பத்தை சார்ந்த 10 பேரும், அவருக்கு நெருங்கிய உதவியாளர்கள் நான்கு பேரும் கொல்லப்பட்டதாக செய்தி வெளியானது. மசூத அசாரின் மூத்த சகோதரி, அவருடைய கணவர், மருமகன், அவருடைய மனைவி, ஐந்து குழந்தைகள் என பலர் கொல்லப்பட்டனர்.
1999ஆம் ஆண்டு IC-184 விமானம் கடத்தப்பட்டபோது, விமானிகளுக்குப் பதிலாக அசார் ஜெயிலில் இருந்து ரிலீஸ் செய்யப்பட்டார். இந்தியாவின் அழுத்தத்தைத் தொடர்ந்து 2019ஆம் அண்டு ஐ.நா. மசூத் அசார உலகளாவிய பயங்கரவாதியாக அறிவித்தது. 2019 ஏப்ரலில் இருந்து மசூத் அசார் பொது வெளியில் காணப்படவில்லை. அவர் பஹவல்பூரில் பாதுகாப்பான இடத்தில் மறைந்து இருப்பதாக கூறப்படுகிறது.
ஜேஇஎம் இந்தியாவில் 2001 பாராளுமன்ற தாக்குதல், 2000-த்தில் ஜம்மு-காஷ்மீர் சட்டசபை மீது தாக்குதல், 2016 பதான்கோட் விமானப்படை தளம் மீது தாக்குதல், 2019 புல்வாமா தற்கொலை படை தாக்குதல் போன்ற பயங்கரவாத செயல்களை நடத்தியுள்ளது.
- ரெட்ட தல படத்தில் அருண் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ளார்.
- இப்படத்தில் தன்யா ரவிச்சந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த 'மான் கராத்தே' படத்தை இயக்கிய திருக்குமரன் அடுத்ததாக அருண் விஜய் -யின் 'ரெட்ட தல' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அருண் விஜயின் ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். இவர் இதற்கு முன் சிம்பு நடித்த 'வெந்து தணிந்தது காடு' படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் தன்யா ரவிச்சந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தின் இசையை சாம். சி.எஸ் மேற்கொள்கிறார். பிடிஜி யூனிவர்சல் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
இப்படத்தில் அருண் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ளார். படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது.
இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்டை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி படத்தின் முதல் பாடலின் ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் படத்தின் முதல் பாடலான கண்ணமா என்ற பாடம் வரும் 19-ந் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை தனுஷ் பாடியுள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- பிரதமர் மோடி பீகார் வரும்போது ராகுல் காந்தியை திட்டுவார்.
- காங்கிரசின் ராகுல் காந்தி பீகாரில் பிரதமர் மோடியை திட்டுவார்.
பாட்னா:
பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும்
தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பிரதமர் மோடி பீகார் வரும்போது, ராகுல் காந்தியை திட்டுவார். ராகுல் காந்தி பிரதமர் மோடியை திட்டுவார்.
பீகாரில் இருந்து இடம்பெயர்வு எப்படி நிறுத்தப்படும் என்பது பற்றி இரு தலைவர்களும் பேசவில்லை.
பீகார் மக்கள் வெள்ளத்தில் இருந்து எப்படி நிவாரணம் பெறுவார்கள் என்பது பற்றி இருவருமே பேசவில்லை.
பீகாரில் தொழிற்சாலைகள் இல்லாததற்கு பிரதமர் மோடி விளக்க வேண்டும் என தெரிவித்தார்.
- முதல் சிங்கிளான தீக்கொளுத்தி பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
- பைசன் படத்தின் 2-வது பாடலான றெக்க றெக்க பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் பைசன். இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
பைசன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17-ம் தேதி வெளியாக இருக்கிறது.
இப்படத்தின் முதல் சிங்கிளான தீக்கொளுத்தி பாடலை படக்குழு அண்மையில் வெளியிட்டது. இப்பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், பைசன் படத்தின் 2-வது பாடலான றெக்க றெக்க பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை வேடன் மற்றும் அறிவு பாடியுள்ளனர்.
இந்நிலையில் விஜய் ஆண்டனியின் 25வது படமான சக்தித் திருமகன் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை அருண் பிரபு இயக்கியுள்ளார். அருண் பிரபு இயக்கத்தில் இதற்கு முன் அருவி மற்றும் வாழ் போன்ற வெற்றித் திரைப்படங்கள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் கதாநாயகியாக த்ரிப்தி நடித்திருக்கிறார். இவர் ஒரு விளம்பர பட நடிகை மற்றும் இவர் இதற்கு முன் அமேசான் மினி வெப் தொடரில் நடித்துள்ளார். திரைப்படம் வரும் 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. விஜய் ஆண்டனியின் வழக்கமான ப்ரோமோஷனான படத்தின் முதல் 3 நிமிட காட்சியை நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
- பொறுப்பான பதவியில் இருந்த பொன்முடி இதுபோன்ற பேச்சை தவிர்த்திருக்க வேண்டும்.
- காவல்துறை குறைந்தபட்சம் புகார் அளித்தவர்களிடம் முறையான விசாரணை நடத்தி இருக்க வேண்டும்.
தமிழக முன்னாள் அமைச்சர் பொன்முடி சைவ, வைணவ சமயங்களை ஒப்பிட்டு பெண்களை இழிவாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்த நிலையில் பொன்முடி மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. அவருக்கு எதிராக தனிநபர் புகார் தாக்கல் செய்து கொள்ளலாம். புகார்களை காவல்துறையினர் முடித்து வைத்ததை எதிர்த்து சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரலாம்.
பொறுப்பான பதவியில் இருந்த பொன்முடி இதுபோன்ற பேச்சை தவிர்த்திருக்க வேண்டும். காவல்துறை குறைந்தபட்சம் புகார் அளித்தவர்களிடம் முறையான விசாரணை நடத்தி இருக்க வேண்டும்.
- இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
- 21ஆம் தேதி பக்தர்கள் தரிசத்திற்கான நடை திறந்திருக்கும்.
புரட்டாசி மாத பூஜைகளுக்காக இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில், மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டார்கள். 21-ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்காக நடை திறந்திருக்கும்.
பக்தர்கள் தரிசனம் மற்றும் தங்குவதற்கு http://sabarimalaonline.org என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செப்டம்பர் 20-ஆம் தேதி பம்பை நதிக்கரையில் சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
- தமிழ்நாட்டில் 2025 ஜூன் மாதம் முதல் காரிப் பருவத்தில் நெற்பயிர் முழுவீச்சில் பயிரிடப்பட்டுள்ளது.
- உற்பத்தியாளர்களால் மொத்த ஒதுக்கீட்டில் சுமார் 57 விழுக்காடு அளவிற்கு மட்டும்தான் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடித்தில் கூறியிருப்பதாவது:-
நாட்டின் முக்கியமான நெல் உற்பத்தி மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்றாகும். மாநிலத்தில் விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து உயர் முன்னுரிமை அளித்து வருகிறது.
விவசாய உற்பத்தியை அதிகரிக்க ஊக்கமளிக்கும் வகையில் குறிப்பான பகுதிக்கு ஏற்ப திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்துடன், தேவையான வேளாண் இடுபொருட்கள் கிடைப்பதையும் சீராக கண்காணித்தும் வருகிறது.
பருவமழை முன்கூட்டியே தொடங்குவதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் 2025 ஜூன் மாதம் முதல் காரிப் பருவத்தில் நெற்பயிர் முழுவீச்சில் பயிரிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 5.661 லட்சம் ஹெக்டேரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது.
இது கடந்த வருடத்தில் பயிரிடப்பட்ட 5.136 லட்சம் ஹெக்டேர் பரப்பளவைவிட 0.525 லட்சம் ஹெக்டேர் (10%) அதிகமாகும். இதனால் மாநிலம் முழுவதும் நேரடி உரங்களுக்கு அதிக தேவை நிலவுகிறது.
மாநிலத்தில் பெய்துவரும் பரவலான மழை மற்றும் முக்கிய நீர்த்தேக்கங்களில் தண்ணீர் போதுமான அளவில் உள்ளதன் காரணமாக, விவசாய உற்பத்திக்குத் தேவைப்படும் யூரியா, டிஏபி, எம்ஓபி மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை உற்பத்தியாளர்களால் இந்திய அரசின் வழங்கல் திட்டத்தின்படி 2025 ஏப்ரல் முதல் 2025 ஆகஸ்ட் வரை வழங்கிடவில்லை.
மேலும் அவர்களால் மொத்த ஒதுக்கீட்டில் சுமார் 57 விழுக்காடு அளவிற்கு மட்டும்தான் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டின் தற்போதைய காரிப் மற்றும் எதிர்வரும் ராபி பருவத்திற்கு, உரப் பற்றாக்குறையை தவிர்த்திடும் வகையில், தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய 27,823 மெட்ரிக் டன் யூரியா, 15,831 மெட்ரிக் டன் டிஏபி, 12,422 மெட்ரிக் டன் எம்ஓபி மற்றும் 98,623 மெட்ரிக் டன் என்பிகே காம்ப்ளக்ஸ் உரங்களை உடனடியாக வழங்கிடத் தேவையான அறிவுரைகளை ரசாயன மற்றும் உர அமைச்சகத்திற்கு வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
- வைஷாலி கிராண்ட் செஸ் தொடரை வெல்வது இது இரண்டாவது முறையாகும்.
- அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கேன்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு அவர் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி (24) ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
இறுதிப்போட்டியில் சீன வீராங்கனை டான் ஸோங்கி உடன் மோதிய வைஷாலி 11 சுற்றுகளில், 8 புள்ளிகளைப் பெற்று தொடரை வென்றார். வைஷாலி கிராண்ட் செஸ் தொடரை வெல்வது இது இரண்டாவது முறையாகும். இதன்மூலம், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கேன்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு அவர் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளார்.
கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரின் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வைஷாலிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடந்த கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரின் மகளிர் பிரிவில் தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் வைஷாலி அவர்களுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகள்.
தங்களின் தொடர் வெற்றிகள் மூலம் தமிழ்நாட்டிற்கும், இந்திய திருநாட்டிற்கும் மென்மேலும் பெருமைகளைச் சேர்த்திட வாழ்த்துகிறேன்.
என கூறினார்.
- அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் 28-5-2025-யுடன் முடிவடைந்து விட்டது.
- தலைவர் பதவி குறித்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியிருந்தாலும், பதவிக்காலம் முடிந்த பின்னர் அது செல்லாது.
பாமக கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே. மணி இன்று தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் 28-5-2025-யுடன் முடிவடைந்து விட்டது. அவருக்கு பதவியே இல்லை. தலைவர் பதவியே இல்லாதவர் எப்படி மாமல்லபுரத்தில் பொதுக்குழுவை கூட்ட முடியும்?. கட்சியின் அமைப்பு விதி, நிறுவனர் ராமதாஸ் ஒப்புதல் இல்லாமல் செயற்குழு, பொதுக்குழு என எந்த நடவடிக்கையும் செயல்படக் கூடாது எனக் கூறுகிறது.
விதியை மீறி எப்படி பொதுக்குழுவை கூட்ட முடியும்?. மாமல்லபுரத்தில் கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லாது. அதில் நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகளின் பதவியும் செல்லாது.
தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகள் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியிருந்தாலும், பதவிக்காலம் முடிந்த பின்னர் அது செல்லாது. 29ஆம் தேதி நிர்வாகிகள் குழு கூடி ராமதாஸை தலைவராக்க வேண்டும் எனக்கூறி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நிர்வாகக்குழுவால் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் ராமதாஸ் நிறுவனர் மற்றும் தலைவர் என அழைக்கப்படுகிறார். செயற்குழு நிர்வாகக்குழு எடுத்த முடிவை அங்கீகரிக்கிறது. அதன்பின் மாநில பொதுக்குழுவில் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு எடுத்த முடிவை முழுமையாக அங்கீகரிக்கிறது.
தலைவர் என்று கடிதம் எழுதுவது மக்களை திசை திருப்புவதற்கான நாடகம். தேனாம்பேட்டையில் இருந்து தி.நகருக்கு முகவரி மாற்றி, தலைவர் எனச் சொல்லப்படுகிறது. இது மோசடி என வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இதன் மூலமாகவே தேர்தல் ஆணையம் கடிதம் அங்கு சென்றுள்ளது. அந்த கடிதத்தை வைத்து அன்புமணி ராமதாஸ் தலைவர், வடிவேல் ராவணன் பொதுச் செயலாளர், திலகபாமா பொருளாளர் எனக் கூறுவது மோசடி.
இவ்வாறு ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.
- எங்களுக்குள் ஆரோக்கியமான போட்டி இருந்தது.
- அவரது மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.
சென்னை:
நடிகை சவுந்தர்யா 1972-ம் ஆண்டு கர்நாடகா மாநிலம் கோலாரில் பிறந்தார். இவர் கன்னடம், தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் பொன்னுமணி, படையப்பா, அருணாசலம், சொக்க தங்கம், தவசி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
நடிகை சவுந்தர்யா, தனது 31-வது வயதில் ஏப்ரல் 17, 2004 அன்று ஒரு துயரமான விமான விபத்தில் காலமானார். இது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

சமீபத்தில், சவுந்தர்யாவின் மரணம் விபத்து அல்ல, அது ஒரு திட்டமிட்ட கொலை என்று சில தகவல்கள் வெளியாகின. தெலுங்கு நடிகர் மோகன்பாபு மற்றும் சவுந்தர்யாவின் குடும்பத்திற்கு இடையே நிலத்தகராறு இருந்ததாகவும், அதன் காரணமாகவே இந்த விபத்து நடந்ததாகவும் சில சமூக ஆர்வலர்கள் புகார் அளித்தனர். இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை சவுந்தர்யாவின் கணவர் ஜி.எஸ்.ரகு மறுத்துள்ளார்.
இந்த நிலையில் நடிகை சவுந்தர்யா பயணித்த அதே ஹெலிகாப்டரில் தானும் பயணித்திருக்க வேண்டியவர் என நடிகை மீனா பகீர் தகவலை அளித்துள்ளார்.
அதில், எங்களுக்குள் ஆரோக்கியமான போட்டி இருந்தது. சவுந்தர்யா நல்ல நபர், எனக்கு அற்புதமான தோழி. அவரது மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அன்றைய தினம் நடந்த பிரச்சாரத்திற்கு சவுந்தர்யாவுடன் வருமாறும் என்னையும் அழைத்தார்கள். ஆனால் சூழ்நிலை காரணமாக அதனை தவிர்த்து விட்டதாகவும் நடிகை மீனா கூறினார்.
- மொரீசியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
- துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை மொரீசியஸ் பிரதமர் இன்று சந்தித்தார்.
புதுடெல்லி:
மொரீசியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் பிரதமர் மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்தியா மற்றும் மொரீசியஸ் இடையே சிறப்பு ஆயுஷ் மையம், ஹெலிகாப்டர்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதற்கிடையே, துணை ஜனாதிபதியான சி.பி.ராதாகிருஷ்ணனை மொரீசியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் இன்று சந்தித்தார்.
இந்நிலையில், ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை மொரீசியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது இரு தரப்பு உறவுகள் மேலும் வலுவடையும் என நம்பிக்கை தெரிவித்தனர்.






