என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சைவ- வைணவ சமயங்களை ஒப்பிட்டு பெண்கள் குறித்து இழிவான பேச்சு: பொன்முடிக்கு எதிராக வழக்கு முடித்து வைப்பு
- பொறுப்பான பதவியில் இருந்த பொன்முடி இதுபோன்ற பேச்சை தவிர்த்திருக்க வேண்டும்.
- காவல்துறை குறைந்தபட்சம் புகார் அளித்தவர்களிடம் முறையான விசாரணை நடத்தி இருக்க வேண்டும்.
தமிழக முன்னாள் அமைச்சர் பொன்முடி சைவ, வைணவ சமயங்களை ஒப்பிட்டு பெண்களை இழிவாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்த நிலையில் பொன்முடி மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. அவருக்கு எதிராக தனிநபர் புகார் தாக்கல் செய்து கொள்ளலாம். புகார்களை காவல்துறையினர் முடித்து வைத்ததை எதிர்த்து சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரலாம்.
பொறுப்பான பதவியில் இருந்த பொன்முடி இதுபோன்ற பேச்சை தவிர்த்திருக்க வேண்டும். காவல்துறை குறைந்தபட்சம் புகார் அளித்தவர்களிடம் முறையான விசாரணை நடத்தி இருக்க வேண்டும்.
Next Story






