அருண் விஜய் நடித்த `ரெட்ட தல' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ வெளியீடு

ரெட்ட தல படத்தில் அருண் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ளார்.இப்படத்தில் தன்யா ரவிச்சந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
அருண் விஜய் நடித்த `ரெட்ட தல' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ வெளியீடு
Published on

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த 'மான் கராத்தே' படத்தை இயக்கிய திருக்குமரன் அடுத்ததாக அருண் விஜய் -யின் 'ரெட்ட தல' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அருண் விஜயின் ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். இவர் இதற்கு முன் சிம்பு நடித்த 'வெந்து தணிந்தது காடு' படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் தன்யா ரவிச்சந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தின் இசையை சாம். சி.எஸ் மேற்கொள்கிறார். பிடிஜி யூனிவர்சல் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இப்படத்தில் அருண் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ளார். படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது.

இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்டை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி படத்தின் முதல் பாடலின் ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் படத்தின் முதல் பாடலான கண்ணமா என்ற பாடம் வரும் 19-ந் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை தனுஷ் பாடியுள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com