என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் 28-5-2025-யுடன் முடிவடைந்து விட்டது.
    • தலைவர் பதவி குறித்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியிருந்தாலும், பதவிக்காலம் முடிந்த பின்னர் அது செல்லாது.

    பாமக கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே. மணி இன்று தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் 28-5-2025-யுடன் முடிவடைந்து விட்டது. அவருக்கு பதவியே இல்லை. தலைவர் பதவியே இல்லாதவர் எப்படி மாமல்லபுரத்தில் பொதுக்குழுவை கூட்ட முடியும்?. கட்சியின் அமைப்பு விதி, நிறுவனர் ராமதாஸ் ஒப்புதல் இல்லாமல் செயற்குழு, பொதுக்குழு என எந்த நடவடிக்கையும் செயல்படக் கூடாது எனக் கூறுகிறது.

    விதியை மீறி எப்படி பொதுக்குழுவை கூட்ட முடியும்?. மாமல்லபுரத்தில் கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லாது. அதில் நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகளின் பதவியும் செல்லாது.

    தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகள் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியிருந்தாலும், பதவிக்காலம் முடிந்த பின்னர் அது செல்லாது. 29ஆம் தேதி நிர்வாகிகள் குழு கூடி ராமதாஸை தலைவராக்க வேண்டும் எனக்கூறி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நிர்வாகக்குழுவால் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் ராமதாஸ் நிறுவனர் மற்றும் தலைவர் என அழைக்கப்படுகிறார். செயற்குழு நிர்வாகக்குழு எடுத்த முடிவை அங்கீகரிக்கிறது. அதன்பின் மாநில பொதுக்குழுவில் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு எடுத்த முடிவை முழுமையாக அங்கீகரிக்கிறது.

    தலைவர் என்று கடிதம் எழுதுவது மக்களை திசை திருப்புவதற்கான நாடகம். தேனாம்பேட்டையில் இருந்து தி.நகருக்கு முகவரி மாற்றி, தலைவர் எனச் சொல்லப்படுகிறது. இது மோசடி என வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இதன் மூலமாகவே தேர்தல் ஆணையம் கடிதம் அங்கு சென்றுள்ளது. அந்த கடிதத்தை வைத்து அன்புமணி ராமதாஸ் தலைவர், வடிவேல் ராவணன் பொதுச் செயலாளர், திலகபாமா பொருளாளர் எனக் கூறுவது மோசடி.

    இவ்வாறு ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.

    • எங்களுக்குள் ஆரோக்கியமான போட்டி இருந்தது.
    • அவரது மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.

    சென்னை:

    நடிகை சவுந்தர்யா 1972-ம் ஆண்டு கர்நாடகா மாநிலம் கோலாரில் பிறந்தார். இவர் கன்னடம், தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் பொன்னுமணி, படையப்பா, அருணாசலம், சொக்க தங்கம், தவசி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

    நடிகை சவுந்தர்யா, தனது 31-வது வயதில் ஏப்ரல் 17, 2004 அன்று ஒரு துயரமான விமான விபத்தில் காலமானார். இது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

     

    சமீபத்தில், சவுந்தர்யாவின் மரணம் விபத்து அல்ல, அது ஒரு திட்டமிட்ட கொலை என்று சில தகவல்கள் வெளியாகின. தெலுங்கு நடிகர் மோகன்பாபு மற்றும் சவுந்தர்யாவின் குடும்பத்திற்கு இடையே நிலத்தகராறு இருந்ததாகவும், அதன் காரணமாகவே இந்த விபத்து நடந்ததாகவும் சில சமூக ஆர்வலர்கள் புகார் அளித்தனர். இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை சவுந்தர்யாவின் கணவர் ஜி.எஸ்.ரகு மறுத்துள்ளார்.

    இந்த நிலையில் நடிகை சவுந்தர்யா பயணித்த அதே ஹெலிகாப்டரில் தானும் பயணித்திருக்க வேண்டியவர் என நடிகை மீனா பகீர் தகவலை அளித்துள்ளார்.

    அதில், எங்களுக்குள் ஆரோக்கியமான போட்டி இருந்தது. சவுந்தர்யா நல்ல நபர், எனக்கு அற்புதமான தோழி. அவரது மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அன்றைய தினம் நடந்த பிரச்சாரத்திற்கு சவுந்தர்யாவுடன் வருமாறும் என்னையும் அழைத்தார்கள். ஆனால் சூழ்நிலை காரணமாக அதனை தவிர்த்து விட்டதாகவும் நடிகை மீனா கூறினார். 

    • மொரீசியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
    • துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை மொரீசியஸ் பிரதமர் இன்று சந்தித்தார்.

    புதுடெல்லி:

    மொரீசியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

    உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் பிரதமர் மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்தியா மற்றும் மொரீசியஸ் இடையே சிறப்பு ஆயுஷ் மையம், ஹெலிகாப்டர்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

    இதற்கிடையே, துணை ஜனாதிபதியான சி.பி.ராதாகிருஷ்ணனை மொரீசியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் இன்று சந்தித்தார்.

    இந்நிலையில், ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை மொரீசியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது இரு தரப்பு உறவுகள் மேலும் வலுவடையும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

    • நாள்தோறும் பிரசாரம் மேற்கொள்ளும் 3-வது இடத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும்.
    • எடப்பாடி பழனிசாமியின் பிரசார சுற்றுப் பயணத்தில் எதிர்பார்த்ததை விட பிரமாண்டாக கூட்டம் கூறடுகிறது.

    பாஜக மாநில சிந்தனைக் கூட்டத்தில் தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசும்போது "தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அக்டோபர் முதல் வாரத்தில் தமிழகம் தழுவிய தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். அவர் நாள்தோறும் பிரசாரம் மேற்கொள்ளும் 3-வது இடத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும்" எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், எடப்பாடி பழனிசாமியின் பிரசார சுற்றுப் பயணத்தில் எதிர்பார்த்ததை விட பிரமாண்டாக கூட்டம் கூடுகிறது. எழுச்சியாக பாஜக தொண்டர்கள் பங்கேற்று வருகி்ன்றனர் எனத் தெரிவித்துள்ளார்.

    தேர்தல் நெருங்குவதால் எடப்பாடி பழனிசாமி, விஜய், உதயநிதி ஸ்டாலின், பிரேமலதா விஜயகாந்த், அன்புமணி ராமதாஸ் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.

    • எடப்பாடி பழனிசாமி இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார்.
    • இன்று இரவு உள்துறை மந்திரி அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளார்.

    புதுடெல்லி:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் மூத்த தலைவர்களான கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் சென்றனர்.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள துணை ஜனாதிபதி மாளிகையில் சி.பி.ராதாகிருஷ்ணனை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி சந்தித்தார். அப்போது அவருக்கு வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, இந்தியாவின் துணை ஜனாதிபதியாக கொங்கு மண்டலத்தைச் சார்ந்த தமிழர் ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டது தமிழகம் பெற்றுள்ள பெருமை என தெரிவித்தார்.

    அவருடன் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, பாராளுமன்ற கட்சித் தலைவர் மு. தம்பிதுரை, எம்.பி.க்கள் சி.வி.சண்முகம், இன்பதுரை, தனபால் ஆகியோர் உடனிருந்தனர்.

    இன்று இரவு 8 மணிக்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளார்.

    தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 1-ம் தேதி ரிலீசாகிறது.

    இந்நிலையில், இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது. படக்குழு மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பல இந்த விழாவில் கலந்துக் கொண்டனர்.

    இந்த விழாவிற்கு தனுஷ் ரசிகர்கள் கடலென திரண்டனர். சிலருக்கு அனுமதி சீட்டு இருந்துல் பலரால் அரங்கம் உள்ளே நுழைய முடியவில்லை. இதனால் பல ரசிகர்கள் கடுப்பாகி இணையத்தில் வீடியோ வெளியிட்டனர். இந்நிலையில் இதனை கருத்தில் கருதி தனுஷ் நற்பணி மன்றம் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

    அதில் "பேரன்புக்கும் மரியாதைக்கும் உரிய தலைவர் தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்ற மாவட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், தாய்மார்கள், குழந்தைகள், ரசிகர்கள் மற்றும் தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம்!

    14.09.2025 ஞாயிறு அன்று சிறப்பாக நடந்து முடிந்த தலைவர் தனுஷ் அவர்கள் நடித்து, இயக்கி டான் பிக்சர்ஸ் தயாரிப்பான நமது "இட்லி கடை" இசை வெளியீட்டு விழா - விற்கு வந்த அனைவருக்கும் பாராட்டும், நன்றியையும் தெரிவித்து கொள்கிறோம்.

    மேலும், சில தவிர்க்கமுடியாத காரணத்தினாலும், பாதுகாப்பையும், நேரத்தையும் கருத்தில் கொண்டு சில அன்பான ரசிகர்களை விழாவில் அனுமதிக்க முடியாத நெருக்கடி ஏற்பட்டதை நினைத்து வருந்துகிறோம் என்பதை சிரம் தாழ்த்தி தெரிவித்துக்கொள்கிறோம். அதன் பொருட்டு தங்களது வருத்தம் முற்றிலும் நியாயமானது என்பதை முழுமையாக ஏற்கிறோம்.தாங்களும் இந்த விழாவில் கலந்திருந்தால் விழா, மேலும் சிறப்பாக அமைந்திருக்கும் என்பதே உண்மை. இதை போன்ற நெருக்கடிகளையும், வருத்தங்களையும் வருங்காலத்தில் சரிசெய்து தங்களுக்கு சிறு குறையும், மன வருத்தமும் ஏற்படாத வகையில் விழா நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

    எனவே விழாவில் கலந்துக்கொள்ள முடியாத அன்பு உள்ளங்களின் வேதனை எங்களுக்கும் பல மடங்கு உள்ளது என்பதை தெரிவிக்கிறோம். இனி வருங்காலங்களில் வரும் விழாக்களை தங்களுடன் சேர்ந்து இன்னும் சிறப்பாக பயணிப்போம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

    நன்றி!

    • தற்போது 16 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. 1128 இருக்கைகள் உள்ளன.
    • செப்டம்பர் 24ஆம் தேதி முதல் 1400 இருக்கைகளாக அதிகரிக்கும்.

    ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் நெடுந்தூரத்தை குறுகிய காலத்தில் சென்றடையும் வகையில் இந்திய ரெயில்வே, வந்தே பாரத் ரெயிலை அறிமுகப்படுத்தியது. இதற்கு பயணிகள் இடையே அதிக வரவேற்பு உள்ளதால் வந்தே பாரத் ரெயில்களின் வழித்தடங்களை அதிகரித்த வண்ணம் உள்ளது.

    திருநெல்வேலி (நெல்லை)- சென்னை எக்மோர்- திருநெல்வேலி வந்தே பாரத் ரெயில் (20666/20665) 16 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பெட்டிகளை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வந்தது.

    இந்த நிலையில் வருகிற 24ஆம் தேதி முதல் இந்த ரெயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கக்பட்டு 20 பெட்டிகளுடன் இணைக்கப்படும். நான்கும் Chair Car பெட்டிகளாகும். இதன்மூலம் கூடுதலாக 312 இருக்கைகளை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏற்கனவே 1128 இருக்கைகள் என்ற நிலையில், தற்போது மொத்ம் 1440 இருக்கைகளாக அதிரிக்கப்பட்டுள்ளது என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    ஆயுதபூஜை மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைகள் வரக்கூடிய நேரத்தில் தெற்கு ரெயில்வேயின் இந்த அறிவிப்பு பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • DREAM11-உடனான உறவை முறித்துக் கொள்கிறோம் என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்துள்ளார்.
    • போட்டி ஒன்றுக்கு ரூ.4.5 கோடி வீதம் அப்போலோ டயர்ஸ் நிறுவனத்துடன் பிசிசிஐ ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    சூதாட்டம் மற்றும் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்களை தடை செய்யும் புதிய கேமிங் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு சட்டமானது.

    ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளதால் DREAM11-உடனான உறவை முறித்துக் கொள்கிறோம் என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்துள்ளார். மேலும் வரும் காலங்களில் இதுபோன்ற நிறுவனங்களுடன் BCCI உறுதியாக தொடர்பு வைத்துக்கொள்ளாது எனவும் கூறினார். இதனால் ஆசிய கோப்பை தொடரின் போது ஸ்பான்சர் இல்லாத ஜெர்சியுடன் இந்திய அணி களமிறங்கியது.

    இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி ஸ்பான்சராக அப்போலோ டயர்ஸ் நிறுவனம் தேர்வாகி உள்ளது. அடுத்த 3 ஆண்டுகளுக்கு ரூ.579 கோடிக்கு அப்போலோ டயர்ஸ் உரிமையை பெற்றுள்ளது.

    போட்டி ஒன்றுக்கு ரூ.4.5 கோடி வீதம் அப்போலோ டயர்ஸ் நிறுவனத்துடன் பிசிசிஐ ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    • தாம்பரம் டூ நாகர்கோவிலுக்கு செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 27 வரை திங்கள்தோறும் சிறப்பு ரெயில்.
    • எழும்பூர் டூ நெல்லைக்கு செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 23 வரை வியாழன் தோறும் சிறப்பு ரெயில்.

    ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு நாளை தொடங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

    * செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 26ஆம் தேதி வரை ஞாயிறுதோறும் நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரெயில். மறுமார்க்கத்தில் செப்டம்பர் 29ஆம் தேதி முதல் அக்டோபர் 27ஆம் தேதி வரை திங்கட்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில்.

    * சென்ட்ரல்- செங்கோட்டைக்கு செப்டம்பர் 24ஆம் தேதி முதல் அக்டோபர் 24ஆம் தேதி வரை புதன்கிழமைகளில் ரெயில் இயக்கம். மறுமார்க்கத்தில் செப்டம்பர் 26ஆம் தேதி முதல் அக்டோபர் 25ஆம் தேதி வரை வியாழக்கிழமைகளில் இயக்கம்.

    * எழும்பூர்- நெல்லைக்கு செப்டம்பர் 25ஆம் தேதி முதல் அக்டோபர் 23ஆம் தேதி வரை வியாழக்கிழமைகளில் ரெயில் இயக்கம். மறுமார்க்கத்தில் செப்டம்பர் 26ஆம் தேதி முதல் அக்டோபர் 24ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் ரெயில் இயக்கம்.

    * எழும்பூர்- தூத்துக்குடிக்கு செப்டம்பர் 29ஆம் தேதி முதல் அக்டோபர் 27ஆம் தேதி வரை திங்கள்தோறும் ரெயில் இயக்கம். மறுமார்க்கத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் அக்டோபர் 28ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் இயக்கம்.

    * சென்ட்ரல்- போத்தனூர் (கோவை) இடையே செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 23 வரை வியாழக்கிழமைகளில் ரெயில் இயக்கம். மறுமார்க்கத்தில் செப்டம்பர் 26ஆம் தேதி முதல் அக்டோபர் 24ஆம் தேதிவை வரை வெள்ளிக்கிழமைகளில் இயக்கம்.

    • உமர் ஷா ஜீதோ பாகிஸ்தான் என்ற பிரபல டி.வி. தொடரில் நடித்தவர்.
    • உமர் ஷா உயிரிழந்தது அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    லாகூர்:

    பாகிஸ்தானில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பெயர் பெற்றவர் உமர் ஷா. இவருக்கு வயது 15.

    இந்நிலையில், மாரடைப்பு காரணமாக உமர் ஷா உயிரிழந்தார் என அவரது சகோதரர் அகமது ஷா தெரிவித்துள்ளார்.

    உமர் ஷா ஜீதோ பாகிஸ்தான் என்ற பிரபல டி.வி. தொடர் உள்பட பல்வேறு தொடர்களில் நடித்தவர்.

    டிக் டாக் பிரபலமான அகமது ஷா, உமர் ஷாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிறிய வயதிலேயே உமர் ஷா மாரடைப்பால் உயிரிழந்துள்ளது அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    சர்வதேச மேடையில் புதிய அத்தியாயம் தொடங்க இருக்கிறார் சித்தார்த்.

    இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகர் சித்தார்த், இப்போது சர்வதேச மேடையில் புதிய அத்தியாயம் தொடங்க இருக்கிறார். ஜும்பா லஹிரியின் புகழ்பெற்ற சிறுகதைத் தொகுப்பு அடிப்படையாக உருவாகும் நெட்ஃப்ளிக்ஸ் குளோபல் சீரிஸ் "Unaccustomed Earth"-இல் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    இந்த சீரிஸில் சித்தார்த் அமித் முகர்ஜி என்ற கேம்பிரிட்ஜ், மாசசூசெட்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த பெங்காலி-அமெரிக்க இளைஞராக நடிக்கிறார்.

    இதனுடன், நடிகை ஃப்ரீடா பின்டோ பாருல் சௌதரி திருமணமான பெண் கதாப்பாத்திரத்தில் வருகிறார். அவளது முன்னாள் காதல் மீண்டும் வாழ்வில் வரும்போது, அவர்களுக்குள் மீண்டும் காதல் மலர்கிறது. இவர்களது காதல் இந்திய அமெரிக்க சமூகத்தை அதிரச் செய்கிறது. இத்தொடர் நெட்பிளிக்ஸில் வெளியாக இருக்கிறது.

    தயாரிப்பு & குழு

    எபிசோடுகள்: 8 (டிராமா தொடர்)

    தயாரிப்பு நிறுவனம்: ஜான் வெல்ஸ் புரொடக்ஷன்ஸ், வார்னர் பிரதர்ஸ் டெலிவிஷன்

    ஷோ ரன்னர்: மதுரி சேகர்

    இயக்கம்: முதல் இரண்டு எபிசோடுகளை The Lunchbox புகழ் ரிதேஷ் பட்ரா இயக்கியுள்ளார்

    சித்தார்தின் சமீபத்திய "சித்தா" மற்றும் "3BHK" போன்ற படங்கள் உணர்ச்சி வசப்பட்ட கதை சொல்லலுக்காக பாராட்டைப் பெற்றன. தற்போது அவர் உலகளாவிய ரசிகர்களையும் கவரப்போகிறார் என்பதில் சந்தேகமே இல்லை.

    • புதிய ஹோண்டா பைக்கில் 999cc இன்லைன் 4-சிலிண்டர் மோட்டார் உள்ளது.
    • இந்த யூனிட் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    ஹோண்டாவின் முதன்மை ஸ்போர்ட் பைக் CBR1000RR-R இந்திய சந்தையில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் டாப் எண்ட் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கிறது. இதன் விலை ரூ. 28.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலின் விலையை விட சுமார் ரூ. 2.23 லட்சம் விலை அதிகம் ஆகும். இந்த பைக் புதுப்பிக்கப்பட்ட பாடிவொர்க் மற்றும் திருத்தப்பட்ட வன்பொருளைப் பெறுகிறது.

    இந்த பைக்கின் முன்பக்க அமைப்பு அதன் முந்தைய மாடலை போலவே உள்ளது. இந்த பைக்கின் ஃபேரிங்கில் புதிதாக ஏரோடைனமிக் விங்லெட்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை பைக் அதிவேகத்தில் செல்லும் போது டவுன்ஃபோர்ஸ் அதிகப்படுத்துகிறது.

    புதிய ஹோண்டா பைக்கில் 999cc இன்லைன் 4-சிலிண்டர் மோட்டார் உள்ளது. இது 14,000rpm-இல் 214.5bhp பவர் மற்றும் 12,000rpm இல் 113Nm டார்க் உருவாக்குகிறது. இந்த செயல்திறன் முந்தைய மாடலைப் போலவே உள்ளன. இந்த யூனிட் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பை-டைரக்ஷனல் குயிக்ஷிஃப்டர் மற்றும் அக்ரபோவிக் டைட்டானியம் எக்சாஸ்ட் உள்ளது.



    சஸ்பென்ஷனுக்கு ஒலின்ஸ் யுஎஸ்டி முன்புற ஃபோர்க்குகள் மற்றும் பின்புற மோனோஷாக் மூலம் இயக்கப்படுகிறது. இரண்டும் மின்னணு முறையில் சரிசெய்யக்கூடியவை. பிரேக்கிங்கிற்கு முன்புறத்தில் டூயல் 330mm டிஸ்க், பின்புறத்தில் 220mm ஒற்றை டிஸ்க் பெற்றிருக்கிறது.

    எலெக்ட்ரானிக்ஸ்-ஐ பொருத்தவரை 5 லெவல் பவர் மோட்கள், 9 லெவல் டிராக்ஷன் கண்ட்ரோல், 3-லெவல் எஞ்சின் பிரேக் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல், ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளன.

    ×