என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னை- நெல்லை வந்தே பாரத் ரெயில் பெட்டிகளின் எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு..!
- தற்போது 16 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. 1128 இருக்கைகள் உள்ளன.
- செப்டம்பர் 24ஆம் தேதி முதல் 1400 இருக்கைகளாக அதிகரிக்கும்.
ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் நெடுந்தூரத்தை குறுகிய காலத்தில் சென்றடையும் வகையில் இந்திய ரெயில்வே, வந்தே பாரத் ரெயிலை அறிமுகப்படுத்தியது. இதற்கு பயணிகள் இடையே அதிக வரவேற்பு உள்ளதால் வந்தே பாரத் ரெயில்களின் வழித்தடங்களை அதிகரித்த வண்ணம் உள்ளது.
திருநெல்வேலி (நெல்லை)- சென்னை எக்மோர்- திருநெல்வேலி வந்தே பாரத் ரெயில் (20666/20665) 16 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பெட்டிகளை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வந்தது.
இந்த நிலையில் வருகிற 24ஆம் தேதி முதல் இந்த ரெயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கக்பட்டு 20 பெட்டிகளுடன் இணைக்கப்படும். நான்கும் Chair Car பெட்டிகளாகும். இதன்மூலம் கூடுதலாக 312 இருக்கைகளை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏற்கனவே 1128 இருக்கைகள் என்ற நிலையில், தற்போது மொத்ம் 1440 இருக்கைகளாக அதிரிக்கப்பட்டுள்ளது என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
ஆயுதபூஜை மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைகள் வரக்கூடிய நேரத்தில் தெற்கு ரெயில்வேயின் இந்த அறிவிப்பு பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






