என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    சர்வதேச மேடையில் புதிய அத்தியாயம் தொடங்க இருக்கிறார் சித்தார்த்.

    இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகர் சித்தார்த், இப்போது சர்வதேச மேடையில் புதிய அத்தியாயம் தொடங்க இருக்கிறார். ஜும்பா லஹிரியின் புகழ்பெற்ற சிறுகதைத் தொகுப்பு அடிப்படையாக உருவாகும் நெட்ஃப்ளிக்ஸ் குளோபல் சீரிஸ் "Unaccustomed Earth"-இல் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    இந்த சீரிஸில் சித்தார்த் அமித் முகர்ஜி என்ற கேம்பிரிட்ஜ், மாசசூசெட்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த பெங்காலி-அமெரிக்க இளைஞராக நடிக்கிறார்.

    இதனுடன், நடிகை ஃப்ரீடா பின்டோ பாருல் சௌதரி திருமணமான பெண் கதாப்பாத்திரத்தில் வருகிறார். அவளது முன்னாள் காதல் மீண்டும் வாழ்வில் வரும்போது, அவர்களுக்குள் மீண்டும் காதல் மலர்கிறது. இவர்களது காதல் இந்திய அமெரிக்க சமூகத்தை அதிரச் செய்கிறது. இத்தொடர் நெட்பிளிக்ஸில் வெளியாக இருக்கிறது.

    தயாரிப்பு & குழு

    எபிசோடுகள்: 8 (டிராமா தொடர்)

    தயாரிப்பு நிறுவனம்: ஜான் வெல்ஸ் புரொடக்ஷன்ஸ், வார்னர் பிரதர்ஸ் டெலிவிஷன்

    ஷோ ரன்னர்: மதுரி சேகர்

    இயக்கம்: முதல் இரண்டு எபிசோடுகளை The Lunchbox புகழ் ரிதேஷ் பட்ரா இயக்கியுள்ளார்

    சித்தார்தின் சமீபத்திய "சித்தா" மற்றும் "3BHK" போன்ற படங்கள் உணர்ச்சி வசப்பட்ட கதை சொல்லலுக்காக பாராட்டைப் பெற்றன. தற்போது அவர் உலகளாவிய ரசிகர்களையும் கவரப்போகிறார் என்பதில் சந்தேகமே இல்லை.

    • புதிய ஹோண்டா பைக்கில் 999cc இன்லைன் 4-சிலிண்டர் மோட்டார் உள்ளது.
    • இந்த யூனிட் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    ஹோண்டாவின் முதன்மை ஸ்போர்ட் பைக் CBR1000RR-R இந்திய சந்தையில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் டாப் எண்ட் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கிறது. இதன் விலை ரூ. 28.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலின் விலையை விட சுமார் ரூ. 2.23 லட்சம் விலை அதிகம் ஆகும். இந்த பைக் புதுப்பிக்கப்பட்ட பாடிவொர்க் மற்றும் திருத்தப்பட்ட வன்பொருளைப் பெறுகிறது.

    இந்த பைக்கின் முன்பக்க அமைப்பு அதன் முந்தைய மாடலை போலவே உள்ளது. இந்த பைக்கின் ஃபேரிங்கில் புதிதாக ஏரோடைனமிக் விங்லெட்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை பைக் அதிவேகத்தில் செல்லும் போது டவுன்ஃபோர்ஸ் அதிகப்படுத்துகிறது.

    புதிய ஹோண்டா பைக்கில் 999cc இன்லைன் 4-சிலிண்டர் மோட்டார் உள்ளது. இது 14,000rpm-இல் 214.5bhp பவர் மற்றும் 12,000rpm இல் 113Nm டார்க் உருவாக்குகிறது. இந்த செயல்திறன் முந்தைய மாடலைப் போலவே உள்ளன. இந்த யூனிட் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பை-டைரக்ஷனல் குயிக்ஷிஃப்டர் மற்றும் அக்ரபோவிக் டைட்டானியம் எக்சாஸ்ட் உள்ளது.



    சஸ்பென்ஷனுக்கு ஒலின்ஸ் யுஎஸ்டி முன்புற ஃபோர்க்குகள் மற்றும் பின்புற மோனோஷாக் மூலம் இயக்கப்படுகிறது. இரண்டும் மின்னணு முறையில் சரிசெய்யக்கூடியவை. பிரேக்கிங்கிற்கு முன்புறத்தில் டூயல் 330mm டிஸ்க், பின்புறத்தில் 220mm ஒற்றை டிஸ்க் பெற்றிருக்கிறது.

    எலெக்ட்ரானிக்ஸ்-ஐ பொருத்தவரை 5 லெவல் பவர் மோட்கள், 9 லெவல் டிராக்ஷன் கண்ட்ரோல், 3-லெவல் எஞ்சின் பிரேக் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல், ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளன.

    • தெளிவு, நிதானம், எடுத்துக்கொண்ட துறைகளில் ஆழங்காற்பட்ட அறிவு, நீண்ட அனுபவம் ஒருங்கே அமையப் பெற்ற அருமை நண்பர்.
    • ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

    ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தெளிவு, நிதானம், எடுத்துக்கொண்ட துறைகளில் ஆழங்காற்பட்ட அறிவு, நீண்ட அனுபவம் ஆகியவை ஒருங்கே அமையப் பெற்ற அருமை நண்பர், ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

    தாங்கள் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் திகழ்ந்து, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் இந்தியாவின் உயர்வுக்கும் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என விழைகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • அவ்வப்போது அரசாங்கத்தால் பயிற்சி அளிக்கப்படுகிறது.
    • அவர்களின் தகுதிகள் மற்றும் பல ஆண்டு சேவையைப் புறக்கணிப்பது நியாயமானது அல்ல.

    இந்தியாவில் அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கும் நோக்கத்துடன் கல்வி உரிமைச் சட்டம் கடந்த 2009-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்தின்படி 8-ஆம் வகுப்பு வரை இலவசக் கல்வி வழங்க மத்திய அரசு நிதியுதவி வழங்குவதால், எட்டாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கக் கூடிய இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் வெற்றி பெறுவது கட்டாயம் ஆகும்.

    கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும். அடுத்த இரு ஆண்டுகளில் தகுதித்தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மூலம் இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. ஆசியர்களை ஒருபோதும் அரசு கைவிடாது என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். அத்துடன் உச்சநீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடீவு செய்துள்ளது எனத் தெரிவித்தார்.

    இந்த நிலையில் தமிழகத்தை தொடர்ந்து உத்தர பிரதேச மாநில அரசும் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கல்வித்துறை சீராய்வு மனு தாக்கல் செய்யும்படி அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும், "மாநில ஆசிரியர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள், அவர்களுக்கு அவ்வப்போது அரசாங்கத்தால் பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்களின் தகுதிகள் மற்றும் பல ஆண்டு சேவையைப் புறக்கணிப்பது நியாயப்படுத்தப்படவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

    திருக்குமரன் அடுத்ததாக அருண் விஜய் -யின் 'ரெட்ட தல' படத்தை இயக்கியுள்ளார்

    சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த 'மான் கராத்தே' படத்தை இயக்கிய திருக்குமரன் அடுத்ததாக அருண் விஜய் -யின் 'ரெட்ட தல' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அருண் விஜயின் ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். இவர் இதற்கு முன் சிம்பு நடித்த 'வெந்து தணிந்தது காடு' படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    மேலும் இப்படத்தில் தன்யா ரவிச்சந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தின் இசையை சாம். சி.எஸ் மேற்கொள்கிறார். பிடிஜி யூனிவர்சல் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

    இப்படத்தில் அருண் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ளார்.படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்டை இன்று மாலை 6.30 மணிக்கு படக்குழு அறிவித்துள்ளது.

    சமீபத்தில் பாலா இயக்கத்தில் அருண் விஜய் வணங்கான் படத்தில் நடித்தார். மேலும் தனுஷ் இயக்கி நடித்து இருக்கும் இட்லி கடை திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் அருண் விஜய் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கொல்லைப்புறம் வழியாக இந்தியைத் திணிக்க ஒன்றிய பா.ஜ.க. அரசு முயன்றது.
    • இந்தியைத் திணிப்பதில் ஒன்றிய பா.ஜ.க. அரசு தொடர்ந்து தோல்வி கண்டபோதிலும், விடாமல் இந்தியைத் திணிக்க முயன்று வருகிறது.

    தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    இந்தி மொழி நாளையொட்டி தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்துச் செய்தியைப் பதிவிட்டுள்ள ஒன்றிய உள்துறை அமைச்சர், "இந்திய நாட்டின் மொழிகள் மற்றும் பேச்சு வழக்குகளுக்கு இடையே ஒரு பாலமாக இந்தி செயல்படுகிறது. இந்தி மொழி வெறும் தகவல் தொடர்பு ஊடகமாக மட்டுமல்லாமல், தொழில்நுட்பம், அறிவியல், நீதி, கல்வி மற்றும் நிர்வாகத்தின் அச்சாணியாக மாறுவதை உறுதி செய்வதே எங்கள் குறிக்கோள். நாட்டின் குடிமக்களை ஒன்றிணைப்பதில் இந்தி, முக்கியப் பங்கு வகித்துள்ளது. அனைத்து மொழிகளையும் இணைத்து, வளர்ந்த மொழியியல் ரீதியாகத் தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதில் இந்தி தொடர்ந்து முக்கியப் பங்கு வகிக்கும்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

    மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டிருக்கும் ஒரு தேசத்தில், 22 அலுவல் மொழிகளைக் கொண்டிருக்கும் அரசின் நிர்வாகத்தில் ஒற்றை மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பது எதேச்சதிகாரப் போக்காகும்.

    ஒன்றிய அரசு நிர்வாகத்தின் அச்சாணியாக இந்தியை மாற்றுவதே லட்சியம் என்று கூறுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது ஆகும்.

    பா.ஜ.க. முதன்முதலில் ஆட்சி அமைத்ததில் இருந்தே ஒரே நாடு ஒரே ரேஷன், ஒரே நாடு ஒரே தேர்தல் என்று பன்முகத்தன்மை கொண்ட நாட்டை ஒற்றைத் தன்மையில் சுருக்க முயல்கிறது. இந்த வரிசையில்தான் இப்போது ஒரே நாடு ஒரே மொழி என்று இந்தியைத் திணிக்க முயல்கிறார்கள். ஒன்றிய அரசு கொண்டுவந்த தேசியக் கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்தி, கொல்லைப்புறம் வழியாக இந்தியைத் திணிக்க ஒன்றிய பா.ஜ.க. அரசு முயன்றது.

    யார் வேண்டுமானாலும் எந்த மொழியை வேண்டுமானாலும் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் படிக்கலாம். அதில் மாற்றுக் கருத்து இல்லை. வலுக்கட்டாயமாகத் திணிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும். ஆனால், தமிழகத்தில் இருமொழிக் கொள்கை என்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கையும்கூட. இதனை எங்கள் பொதுக்குழுவிலும் செயற்குழுவிலும் தீர்மானமாகவே நிறைவேற்றி இருக்கிறோம்.

    இந்தியைத் திணிப்பதில் ஒன்றிய பா.ஜ.க. அரசு தொடர்ந்து தோல்வி கண்டபோதிலும், விடாமல் இந்தியைத் திணிக்க முயன்று வருகிறது. ஒன்றிய அரசின் நிர்வாகத்தில் அலுவல் மொழியாக 22 மொழிகள் இருக்கும்போது, இந்தியை மட்டுமே தொழில்நுட்பம், அறிவியல், நீதி, கல்வி மற்றும் நிர்வாகத்தின் அச்சாணியாக மாற்ற நினைப்பது எதேச்சதிகாரப் போக்கு.

    ஒன்றியத்தை ஆளும் அரசானது, நாட்டிலுள்ள அத்தனை மதத்தினரையும் மொழியினரையும் மாநிலத்தவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். இதுவே நாட்டின் ஒட்டு மொத்தப் பகுதிகளும் வளர்ச்சி அடைவதற்கான வழி ஆகும். இந்தி பேசாத மாநிலங்கள், பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் என்று பிரித்துப் பார்ப்பதும், ஒற்றை மொழிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதும் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானவை. எனவே கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சியை ஒன்றிய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஒன்றிய அரசு நிர்வாகத்தின் அச்சாணியாக இந்தியை மாற்றுவதே லட்சியம் என்ற தன் கருத்தை ஒன்றிய உள்துறை அமைச்சர் திரும்பப் பெற வேண்டும் என்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இரண்டு பாமக எம்.எல்.ஏ.-க்கள் ஒற்றுமையாக பாராட்டியுள்ளனர்.
    • அவர்கள் எப்போதும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். மக்கள் பணி ஆற்ற வேண்டும்.

    சேலம் அருகே உள்ள கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு அடையாள அட்டை மற்றும் வங்கி கடன் இணைப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு அடையாள அட்டை மற்றும் வங்கி கடன் இணைப்பு வழங்கி பேசினார்.

    அப்போது உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-

    இங்கு நடப்பது அரசு விழாவா? மகளிர் விழாவா? என்ற அளவிற்கு எழுச்சியோடு, மகிழ்ச்சியோடு வந்துள்ளீர்கள். இந்த விழாவிற்கு இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் வந்துள்ளனர். அவர்கள் நம்முடைய இயக்கம் கிடையாது. நம்முடைய கூட்டணியில் கூட (இப்போது) கிடையாது.

    சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருண், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் ஆகிய இருவரும், சேலம் மாவட்டத்திற்கு திமுக அரசு பல்வேறு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பாராட்டுகள் என போட்டி போட்டு கொண்டு பாராட்டியிருக்கிறார்கள். ஆனால் ஒற்றுமையாக பாராட்டியிருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். மக்கள் பணி ஆற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    • மைக்ரோ எஸ்டி மூலம் மெமரியை நீட்டித்துக் கொள்ளும் வசதி.
    • 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 18W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங்.

    போக்கோ இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது M7 பிளஸ் ஸ்மார்ட்போனின் புதிய லிமிட்டெட் எடிஷன் மாடலை அறிமுகம் செய்தது. முன்னதாக கடந்த மாதம் 6 ஜிபி மற்றும் 8 ஜிபி மாடல்களை அறிமும் செய்தது.

    இந்த நிலையில், போக்கோ நிறுவனம் தற்போது போக்கோ M7 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் 4 ஜிபி லிமிடெட் எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. ரேம் தவிர இந்த ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை.

    போக்கோ M7 பிளஸ் 5ஜி அம்சங்கள்

    6.9-இன்ச் FHD+ (2340 x 1080 பிக்சல்) FHD+ LCD ஸ்கிரீன் 144Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6s ஜென் 3 6nm 5ஜி பிராசஸர்

    அட்ரினோ 619 GPU

    4 ஜிபி / 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4X ரேம்

    128 ஜிபி UFS 2.2 மெமரி

    மைக்ரோ எஸ்டி மூலம் மெமரியை நீட்டித்துக் கொள்ளும் வசதி

    ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஹைப்பர் ஓஎஸ்

    ஹைப்ரிட் டூயல் சிம்

    50MP பிரைமரி கேமரா, இரண்டாம் நிலை கேமரா, LED ஃபிளாஷ்

    8MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP64)

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.1, GPS + GLONASS,

    யுஎஸ்பி டைப்-சி

    7000mAh பேட்டரி

    33W ஃபாஸ்ட் சார்ஜிங், 18W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங்

    போக்கோ M7 பிளஸ் ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட் போக்கோவின் பண்டிகை கால பிரச்சார திட்டம் 'POCO Festive MADness' இன் கீழ் அறிமுகமாகிறது. இந்த ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை செப்டம்பர் 23ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்தியேகமாக தொடங்குகிறது.

    போக்கோ M7 பிளஸ் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 12,999 ஆகும். வாடிக்கையாளர்கள் சிறப்பு சலுகைகளுடன், இந்த ஸ்மார்ட்போனை ரூ. 10,999 விலையில் வாங்கிட முடியும்.

    • இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்னிந்திய பகுதி மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை, நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும்

    நாளை மறுநாள் நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் கனமழை பெய்யலாம்.

    19-ந்தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    20-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    21 மற்றும் 22-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இரவு மற்றும் நள்ளிரவு நேரங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

    • வடகொரிய மக்களின் வாழ்க்கை நிலை வெளியுலகிற்கு இன்னும் புதிரானதாகவே உள்ளது.
    • வடகொரியாவின் அதிபராக கிட்டத்தட்ட மன்னராகவே கிம் ஜாங் உன் உள்ளார்.

    உலக நாடுகளில் இருந்து துண்டிக்கப்பட்டு தன்னந்தனியாக தனக்கென தனித்த சட்டதிட்டங்களுடன் சர்வாதிகார ஆட்சியின் கீழ் உள்ள நாடு வட கொரியா. கடந்த நூற்றாண்டு தொட்டு ஒற்றைக் குடும்ப ஆட்சியின் கீழ் வட கொரியா இயங்கி வருகிறது. அதன் தற்போதைய அதிபராக கிட்டத்தட்ட மன்னராகவே கிம் ஜாங் உன் உள்ளார்.

    வடகொரியாவின் மக்களின் வாழ்க்கை நிலை குறித்து வெளியுலகிற்கு இன்னும் புதிரானதாகவே இருந்து வருகிறது. கடுமையான கட்டுப்பாடுகளுடன் மக்கள் தங்கள் அன்றாட வாழ்நாளை கடத்தவே மிகவும் சிரமப்படுகின்றனர் என்பது தென் கொரியா மற்றும் பிற உலக நாடுகளின் கூற்று.

    இந்நிலையில், Hamburger, Ice cream, Karaoke உள்ளிட்ட ஆங்கில சொற்களை பயன்படுத்த வடகொரிய அரசு தடை விதித்துள்ளது.

    சொற்கள் பயன்பாட்டில் மேற்கத்திய நாடுகள் மற்றும் தென் கொரியாவின் தாக்கத்தைத் தவிர்த்து, அதற்கு இணையான அரசு அங்கீகரித்த சொற்களை பயன்படுத்த சுற்றுலாத் தலங்களுக்கு வடகொரியா உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதனையடுத்து சுற்றுலா தலங்களில் வேலை பார்க்கும் வழிகாட்டிகள் 3 மாத பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். சுற்றுலா வழிகாட்டிகள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் பேசும்போது கூட ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்த கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. 

    • சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் வந்தது.
    • அடையாளம் காணப்பட்ட 14 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிந்தனர்.

    திருவனந்தபுரம்:

    செல்போன் பயன்பாடு அதிகரித்துவிட்ட தற்போதைய காலகட்டத்தில், செல்போனில் பயன்படுத்தக்கூடிய ஏராளமான செயலிகளும் வந்துவிட்டன. அவற்றில் "ஆபாச சாட்டிங்" தொடர்பான செயலிகளும் ஏராளமாக இருக்கின்றன.

    அதுபோன்ற செயலியை பயன்படுத்தி பணத்தை இழப்பவர்கள் ஏராளமாக இருக்கின்றனர். இந்த நிலையில் கேரளாவில் "டேட்டிங் செயலி" பயன்படுத்திய சிறுவன் ஒருவன், பல நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் நடந்திருக்கிறது.

    14 வயது மதிக்கத்தக்க அந்த சிறுவன், சமூக வலைதளங்களை பயன்படுத்தி வந்திருக்கிறான். அப்போது அந்த சிறுவனுக்கு "டேட்டிங் செயலி" மூலமாக சிலருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அந்த நபர்கள், சிறுவனை வரவழைத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கின்றனர்.

    கடந்த 2 ஆண்டுகளாக பலரால் சிறுவன் பாலியல் தொல்லைக்கு உள்ளாகியிருக்கிறான். சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களை கண்டுபிடிக்க 4 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது.

    அவர்கள் விசாரணை நடத்தியதில் சிறுவனை காசர்கோடு, கண்ணூர் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களை சேர்ந்த பலர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது தெரிய வந்தது. இதையடுத்து அடையாளம் காணப்பட்ட 14 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிந்தனர்.

    அவர்களில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள் மட்டுமின்றி, மேலும் பலரால் சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

    இதனால் இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். டேட்டிங் செயலியை பயன்படுத்திய சிறுவன், பலரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    • முதலமைச்சர் நாற்காலியை சாமானியன் அலங்கரித்தான் என்ற சாதனையை தொடங்கி வைத்த இந்த அண்ணாதுரை அன்று தலைமை தாங்க தம்பிகளை அழைத்தேன்.

    சென்னை:

    தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளும் அறிஞர் அண்ணா கொள்கைகளை பின்பற்றி அரசியல் பணிகளை செய்து வருகின்றன.

    இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி த.வெ.க. தலைவர் விஜய்யை அண்ணா பாராட்டி பேசுவது போல் சிறப்பு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    வீடியோவில் கோடான கோடி உழைக்கும் மக்களின் உணர்வுமிக்க தம்பிகளின் பேராதரவை பெற்று தமிழ் மாநிலத்தின் முதலமைச்சர் நாற்காலியை சாமானியன் அலங்கரித்தான் என்ற சாதனையை தொடங்கி வைத்த இந்த அண்ணாதுரை அன்று தலைமை தாங்க தம்பிகளை அழைத்தேன்.

    'இன்று தம்பி விஜய் உன்னை அழைக்கிறேன், தம்பி வா. தலைமை தாங்க வா' என்பது உள்பட விஜய்யை புகழ்ந்து பேசும் பல வசனங்களுடன் அண்ணா, பெரியாருடன் விஜய் இருப்பது போல் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாகி வெளியாகி உள்ள இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதுடன் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பையும் உருவாக்கி உள்ளது.



    ×