சக்தித் திருமகன் படத்தின் ஸ்னீக் பீக் காட்சி நாளை வெளியீடு!

விஜய் ஆண்டனியின் 25வது படமான சக்தித் திருமகன் திரைப்படம் உருவாகியுள்ளது.
சக்தித் திருமகன் படத்தின் ஸ்னீக் பீக் காட்சி நாளை வெளியீடு!
Published on: 

இந்நிலையில் விஜய் ஆண்டனியின் 25வது படமான சக்தித் திருமகன் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை அருண் பிரபு இயக்கியுள்ளார். அருண் பிரபு இயக்கத்தில் இதற்கு முன் அருவி மற்றும் வாழ் போன்ற வெற்றித் திரைப்படங்கள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் கதாநாயகியாக த்ரிப்தி நடித்திருக்கிறார். இவர் ஒரு விளம்பர பட நடிகை மற்றும் இவர் இதற்கு முன் அமேசான் மினி வெப் தொடரில் நடித்துள்ளார். திரைப்படம் வரும் 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. விஜய் ஆண்டனியின் வழக்கமான ப்ரோமோஷனான படத்தின் முதல் 3 நிமிட காட்சியை நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com