என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
- தமிழக அரசியல் நிலவரம் பற்றியும், ஒருங்கிணைப்பு பற்றியும் பேசுவார் எனத் தகவல்.
- பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தவும் வாய்ப்பு.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பதற்காக டெல்லி சென்றுள்ளார். டெல்லி சென்ற அவர் இன்றிரவு 8 மணியளவில் அமித் ஷா சந்தித்து பேசினார். அவருடன் தம்பிதுரை எம்.பி. சிவி சண்முகம் உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் சென்றனர்.
சில நாட்களுக்க முன்னதாக செங்கோட்டையன் அமித் ஷாவை சந்தித்திருந்தார். அப்போது பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைவது தொடர்பாக பேசியதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை சந்திக்கிறார்.
இந்த சந்திப்பின்போது தமிழக அரசியல் நிலவரம் பற்றியும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு குறித்தும் இருவரும் பேசுவதற்கு வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்துவார் என்று தெரிகிறது.
இந்த சந்திப்புகளை முடித்துவிட்டு இன்று இரவு எடப்பாடி பழனிசாமி டெல்லியில் தங்குகிறார். நாளை அவர் தமிழகம் திரும்புகிறார். டெல்லியில் இருந்து சென்னைக்கு வராமல், நேரடியாக கோவைக்கு செல்வதற்கு அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.






