என் மலர்
தலைப்புச்செய்திகள்
2011 ஆம் ஆண்டு சாம்பி ரெட்டி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார் தேஜா சஜ்ஜா . தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் இவர்.
இப்படத்தில் மனோஜ் மஞ்சு வில்லனாகவும், ரித்திகா நாயக், தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளனர்.
தேஜா சஜ்ஜாவின் அடுத்த படமாக மிராய் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்தை ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனரான கார்த்திக் கட்டாமானேனி இயக்கியுள்ளார். பீபில் மீடியா ஃபேக்டரி நிறுவனம் மிராய் படத்தை தயாரித்துள்ளனர்.
படத்தின் இரண்டாம் நாள் வசூல் விவரத்தை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி திரைப்படம் 55.60 கோடி ரூபாய் வசூலித்தது.
இந்நிலையில், மிராய் திரைப்படம் உலகளவில் ரூ.100 கோடியை வசூலித்துள்ளது.
இதுகுறித்து, படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
- திருநங்கை ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
- புகாரின் அடிப்படையில் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையம் தீவிர விசாரணை.
தனியார் தொலைக்காட்சியில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து பிரபலம் ஆனவர் நாஞ்சில் விஜயன். பெண் வேடம் போட்டு அவர் ரசிகர்கள் மத்தியில் தனக்கு என இடம் பிடித்தவர்.
இவருக்கு திருமணம் ஆகி மரியா என்ற மனைவி உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தையும் பிறந்தது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நஞ்சில் விஜயன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக திருநங்கை ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரில்," நானும், நாஞ்சில் விஜயனும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்தோம். தன்னை திருமணம் செய்துக் கொள்வதாக கூறிவிட்டு பாலியல் ரீதியாகவும் பயன்படுத்திக் கொண்டார்.
திருமணம் ஆன பிறகும் என்னுடன் பழகிக்கொண்டு தான் இருந்தார். இப்போது என்னை திருநங்கை என்ற காரணத்தை காட்டி திருமணம் செய்ய மறுக்கிறார்" என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக, புகாரின் அடிப்படையில் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், நடிகர் நாஞ்சில் விஜயன் மீது, புகார் கொடுத்திருந்த திருநங்கை, அந்த புகாரை வாபஸ் பெற்றுள்ளார்.
நடவடிக்கை தேவையில்லை, சமாதானமாக செல்வதாக கூறி எழுத்துப்பூர்வமாக வழக்கை வாபஸ் வாங்கியுள்ளார். இதன் நகலை, நாஞ்சில் விஜயன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
- ஏஐ தொழில்நுட்பங்கள் நிறைந்திருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 7300 பிளஸ் சிப்செட் உள்ளது.
- ஒன்பிளஸ் நிறுவனத்தின் CE5 ஸ்மார்ட்போன் ரூ. 24,997 என்கிற பட்ஜெட் விலையில் பல்வேறு வசதிகளை வழங்குகிறது.
ஸ்மார்ட்போன் சந்தையில் தொடர்ச்சியாக பல்வேறு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பட்ஜெட் பிரிவில் புதிய மாடல்களை அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளன. அந்த வரிசையில், பட்ஜெட் விலையில் கிடைக்கும் டாப் ஸ்மார்ட்போன் மாடல்கள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ
8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரியுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் மோட்டோ எட்ஜ் 60 ப்ரோ ஸ்மார்ட்போன், மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதில் மீடியாடெக் டிமென்சிட்டி 8350 எக்ஸ்ட்ரீம் புராசஸர், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ், 6.7 இன்ச் குவாட் கர்வ்டு pOLED ஸ்கிரீன், 4500 நிட்ஸ் பிரைட்னஸ், கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு கொண்டிருக்கிறது. கேமராக்களில், 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு லென்ஸ், 10 MP டெலிபோட்டோ கேமரா, செல்ஃபி எடுக்க 50MP கேமராவும் உண்டு. இதன் விலை ரூ.29,999.
iQOO நியோ 10R
இந்த ஸ்மார்ட்போன் இருவேறு வண்ணங்களில் கிடைக்கிறது. 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 6.7 இன்ச் AMOLED ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 8s Gen 3 சிப்செட், ஏஐ சார்ந்த அம்சங்ககளை இந்த ஸ்மார்ட்போன் இயங்குதளத்திலேயே கொண்டிருக்கிறது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு லென்ஸ், 32MP செல்ஃபி கேமரா, 6400 எம்ஏஹெச் பேட்டரி, 80 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் உள்பட பல அம்சங்களுடன் ரூ.30,999 விலையில் கிடைக்கிறது.
விவோ T3 அல்ட்ரா
6.78 இன்ச் AMOLED ஸ்கிரீனுடன், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 9200 புராசஸர் வழங்கப்பட்டுள்ளது. 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 5500 எம்ஏஹெச் பேட்டரி, 80 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. புகைப்படங்கள் எடுக்க சோனியின் 50MP பிரைமரி கேமரா, 8MP வைடு லென்ஸ், 50MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.27,999 ஆகும்.
ரியல்மி 15 5ஜி
ஏஐ தொழில்நுட்பங்கள் நிறைந்திருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 7300 பிளஸ் சிப்செட் உள்ளது. 7000 எம்ஏஹெச் பேட்டரியும், 80 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. இத்துடன் 50MP சோனி கேமரா, 50MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரியுடன் ரூ. 30,999 விலையில் கிடைக்கிறது.
ஒன்பிளஸ் நார்டு CE5
ஒன்பிளஸ் நிறுவனத்தின் CE5 ஸ்மார்ட்போன் ரூ. 24,997 என்கிற பட்ஜெட் விலையில் பல்வேறு வசதிகளை வழங்குகிறது. இதில் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 7100 எம்ஏஹெச் பேட்டரியுடன் பைபாஸ் சார்ஜிங் வசதி, 50MP பிரைமரி கேமரா, 4K ரெக்கார்டிங் வசதி, 6.77 இன்ச் AMOLED ஸ்கிரீன் உள்ளது. இத்துடன் ஆண்ட்ராய்டு சார்ந்த ஆக்சிஜன் ஓஎஸ் 15 கொண்டிருக்கிறது.
- ஐ.சி.சி. டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது.
- இதில் இந்தியாவின் வருண் சக்கரவர்த்தில் 3 இடங்கள் முன்னேறியுள்ளார்.
துபாய்:
டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.
இதில் இந்திய பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி 3 இடங்கள் முன்னேறி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். சமீபத்தில் நடந்த டி20 போட்டிகளில் அவர் சிறப்பாக பந்து வீசினார்.
பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் அபிஷேக் சர்மா முதலிடத்திலும், திலக் வர்மா 2 இடம் பின்தங்கி 4-வது இடத்திலும் சூர்யகுமார் யாதவ் 7வது இடத்திலும் உள்ளார்.
ஆல் ரவுண்டர் தரவரிசையில் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா முதலிடத்தில் நீடிக்கிறார்.
- ஜி.எஸ்.டி. வரி 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைகிறது.
- ரூ.10 லட்சத்திற்குள் சக்தி வாய்ந்த மற்றும் நவீன அம்சங்கள் நிறைந்த கார்களை விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.
மத்திய அரசு வசூலித்து வரும் ஜிஎஸ்டி வரியில் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி வருகிற 22-ந்தேதிக்கு பின் ஜி.எஸ்.டி. 2.0 சீர்திருத்தங்கள் அமலுக்கு வரவிருக்கிறது. இதன் பிறகு, இந்தியாவில் சிறிய ரக கார்களின் விலை குறைய உள்ளது.
ஜி.எஸ்.டி. மாற்றத்தின் படி, 4 மீட்டருக்கும் குறைவான நீளமும், 1200 சி.சி. பெட்ரோல் அல்லது 1500 சி.சி. டீசல் எஞ்ஜினுக்கு இணையாகவோ அல்லது அதனை காட்டிலும் குறைந்த சி.சி. எஞ்ஜின் கொண்ட பெட்ரோல், டீசல், சி.என்.ஜி. மற்றும் எல்.பி.ஜி. வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி. வரி 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைகிறது.
இந்நிலையில் ரூ.10 லட்சத்திற்குள் பாதுகாப்பிற்கும், எரிபொருள் சிக்கனத்திற்கும், செயல்திறனுக்கும் பிரபலமான கார்கள், எவ்வளவு விலை குறைய இருக்கின்றன என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
டாடா பன்ச்
இந்தியாவின் பாதுகாப்பான மற்றும் பிரபலமான மைக்ரோ-எஸ்.யூ.வி. கார்களில் ஒன்று டாடா பன்ச். 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்ஜின் (87 எச்.பி.) இதில் உள்ளது. ஜி.எஸ்.டி. குறைப்பிற்குபிறகு சுமார் ரூ. 85 ஆயிரம் வரை இந்த காரில் சலுகை கிடைக்கும். சிறிய அளவிலான இந்த எஸ்.யூ.வி. கார் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பவர்களுக்கு சிறந்த தேர்வு ஆகும்.
மாருதி சுசுகி வேகன்ஆர்
இது குடும்பங்களிடையே மிகவும் பிரபலமான கார். எரிபொருள் சிக்கனத்திற்கு பிரபலமானது. ஜி.எஸ்.டி. சலுகைக்கு பிறகு சுமார் ரூ.57 ஆயிரம் வரை விலை குறைப்பை பெற இருக்கும் வேகன்ஆர் கார், அதிக இடவசதி மற்றும் மிகக் குறைந்த இயக்கச் செலவுகளை விரும்பும் பெரிய குடும்பங்களுக்கு ஒரு நல்ல தேர்வாகும்.

மஹிந்திரா XUV 3XO
சிறந்த செயல்திறன் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களை வழங்கும் காம்பாக்ட் எஸ்.யூ.வி. காரான இது, ஜி.எஸ்.டி. சலுகைக்கு பிறகு சுமார் ரூ.1.40 லட்சம் வரை விலை குறைக்கப்பட உள்ளது. ரூ.10 லட்சத்திற்குள் சக்தி வாய்ந்த மற்றும் நவீன அம்சங்கள் நிறைந்த கார்களை விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.
மாருதி சுசுகி பலேனோ
இது பிரீமியம் ஹேட்ச்பேக் கார் பிரிவில் உள்ளது. விசாலமான மற்றும் தொழிற்நுட்ப அம்சங்கள் நிறைந்த கேபினுக்கு இது பிரபலமானது. ஜி.எஸ்.டி. சலுகைக்கு பிறகு சுமார் ரூ.60 ஆயிரம் வரை விலை குறைய இருக்கிறது. நவீன தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்த மற்றும் விசாலமான ஹேட்ச்பேக் கார் தேவைப்படும் குடும்பங்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
டாடா அல்ட்ரோஸ்
குளோபல் NCAP கிராஷ் டெஸ்ட்டில் 5 நட்சத்திர ரேட்டிங் பெற்ற டாடா நிறுவனத்தின் மற்றொரு கார் அல்ட்ரோஸ். ஜி.எஸ்.டி. சலுகைக்கு பிறகு சுமார் ரூ.1.10 லட்சம் வரை விலை குறைப்பை பெற உள்ளது. பன்முக எஞ்ஜின் தேர்வுகள் கொண்ட பிரீமியம் மற்றும் பாதுகாப்பான ஹேட்ச்பேக் காரை விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.
ஹூண்டாய் எக்ஸ்டர்
டாடா பன்ச்-க்கு போட்டியாக களமிறங்கிய ஹூண்டாயின் மைக்ரோ-எஸ்.யூ.வி. கார் இது. ஜி.எஸ்.டி. சலுகைக்கு பிறகு சுமார் ரூ.89 ஆயிரம் வரை விலை குறைக்கப்பட உள்ளது. நவீன அம்சங்கள் கொண்ட உயரமான எஸ்.யூ.வி. காரை விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.
மாருதி சுசுகி ஸ்விப்ட்
இது ஹேட்ச்பேக் கார் பிரிவில் நீண்டகாலமாகவே பிரபலமான மாடலாகும். ஜி.எஸ்.டி. சலுகைக்கு பிறகு சுமார் ரூ.58,000 வரை ஸ்விப்ட் காரின் விலை குறைக்கப்பட உள்ளது. தினசரி நகரப் பயன்பாட்டிற்கும், முதல் முறையாக கார் வாங்குபவர்களுக்கும் இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
டாடா டியாகோ
பாதுகாப்பான எண்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. ஜி.எஸ்.டி சலுகைக்கு பிறகு சுமார் ரூ.75 ஆயிரம் வரையில் டியாகோ காரின் விலை குறைக்கப்பட்டு உள்ளது. பட்ஜெட்டில் உறுதியான, நம்பகமான மற்றும் பாதுகாப்பான காரை தேடுபவர்களுக்கும், முதல் முறையாக கார் வாங்குபவர்களுக்கும் இது ஒரு சிறந்த தேர்வு.
ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ்
பிரீமியம் உணர்வையும், சவுகரியமான பயண அனுபவத்தையும் வழங்கும் இந்த காரில் 1.2 லிட்டர் காபா பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்படுகிறது. ஜி.எஸ்.டி. சலுகைக்கு பிறகு சுமார் ரூ.74 ஆயிரம் வரை விலை குறைக்கப்பட உள்ளது. ஆடம்பரமான கேபின் உடன் மென்மையாக, நகரத்திற்குள் பயன்படுத்த விரும்புபவர்களுக்கு இது சிறந்த தேர்வாகும்.
- “என்னை வகுத்தால் என் தம்பிகள்! என் தம்பிகளைக் கூட்டினால் நான்!” என்றார் பேரறிஞர் அண்ணா!
- “தி.மு.க.வை வகுத்தால் தமிழ்நாடு! தமிழ்நாட்டு மக்களை எல்லாம் கூட்டினால் தி.மு.க" என்று வளர்ந்திருக்கிறோம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
"என்னை வகுத்தால் என் தம்பிகள்! என் தம்பிகளைக் கூட்டினால் நான்!" என்றார் பேரறிஞர் அண்ணா!
புரட்சியாகத் தமிழ் மண்ணில் திராவிட முன்னேற்றக் கழகம் வேர்விட்ட இந்த 76 ஆண்டுகளில், "தி.மு.க.வை வகுத்தால் தமிழ்நாடு! தமிழ்நாட்டு மக்களை எல்லாம் கூட்டினால் தி.மு.க" என்று வளர்ந்திருக்கிறோம்!
#ஓரணியில்_தமிழ்நாடு எனத் தலைநிமிர்ந்து நின்று பகையை வெல்வோம்! தமிழ்நாட்டைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ராகுல்காந்தி சமீபத்தில் பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக யாத்திரை மேற்கொண்டார்.
- பீகார் சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் பிரசாரக்குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது.
புதுடெல்லி:
பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. கூட்டணி கட்சி நடைபெற்று வருகிறது. அங்கு நவம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது.
இந்த நிலையில் பீகார் தேர்தல் குறித்து ஆலோசிப்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் வருகிற 24-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. பீகார் தலைநகர் பாட்னாவில் தான் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முன்னாள் தலைவரும், பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி உள்பட கட்சியின் அனைத்து உயர்மட்ட தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.
நிரந்தர உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், கட்சியின் மாநில முதல்-மந்திரிகள், மாநில காங்கிரஸ் தலைவர்கள், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.
பீகார் தேர்தல் குறித்து இந்த கூட்டத்தில் கவனம் செலுத்தப்படும். கூட்டணியில் நிலவும் தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து ஆலோசிக்கப்படும். தேர்தலில் கட்சியினர் தீவிர பணியாற்றுமாறு வலியுறுத்தப்படும்.
வாக்குகள் திருடப்படுவதாக தேர்தல் ஆணையம், பா.ஜ.க. புகாருக்கு எதிராக ராகுல்காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். வாக்கு திருட்டு பிரச்சனையை தீவிரப்படுத்துவது குறித்தும் இந்த கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்படும்.
ராகுல்காந்தி சமீபத்தில் பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக யாத்திரை மேற்கொண்டார். இது கட்சியினர் இடையே உற்சாகத்தை அளித்தது.
பீகார் சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் பிரசாரக்குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது. மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்ராம், ஷகீல் அகமது கான் உள்ளிட்ட 38 உறுப்பினர்கள் அந்த குழுவில் இடம்பெறுகிறார்கள். மேலும் பீகாரை சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரும் இந்த குழுவில் நிரந்தர அழைப்பாளராக இருப்பார்கள்.
- ஜாய் கிரிசில்டா பேசியதால் 15 நாளில் ரூ.12.5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்.
- மாதம்பட்டி பகாசாலா நிறுவனம் அவரை பாதுகாப்பதாக ஜாய் கிரிசில்டா குற்றம்சாட்டியுள்ளார்.
தன்னைப்பற்றி அவதூறு கருத்து தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரி மாதம்பட்டி ரங்கராஜ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில்," ஜாய் கிரிசில்டா அவதூறாக பேசிய வீடியோக்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ரங்கராஜ் உடனான தகராறில் அவர் பார்ட்ரனாக உள்ள மாதம்பட்டி பகாசாலா நிறுவனத்தை தொடர்புபடுத்தி பேசியதாக ஜாய் கிரிசில்டா மீது அந்நிறுவனம் புகார் அளித்துள்ளது.
மாதம்பட்டி பகாசாலா நிறுவனத்தை தொடர்புபடுத்தி ஜாய் கிரிசில்டா பேசியதால் 15 நாளில் ரூ.12.5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மாதம்பட்டி ரங்கராஜ் பார்ட்னராக உள்ள மாதம்பட்டி பகாசாலா நிறுவனம் அவரை பாதுகாப்பதாக ஜாய் கிரிசில்டா நீதிமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், மாதம்பட்டி என்று குறிப்பிடாமல் வெறும் ரங்கராஜ் என குறிப்பிட்டால் யாருக்கும் தெரியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
- இந்த ஆண்டுக்கான திருக்குடை ஊர்வலம் சென்னையில் இன்று நடைபெற்றது.
- பூக்கடை சென்ன கேசவ பெருமாள் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திருமலை திருப்பதியில் புரட்டாசி பிரம்மோற்சவம் நிகழ்ச்சி நடக்கும்போது ஒவ்வொரு ஆண்டும் திருக்குடை சேவா சமிதி டிரஸ்ட்- விஸ்வ இந்து பரிஷத் தமிழ்நாடு சார்பில் அழகிய வெண்குடைகள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருக்குடை ஊர்வலம் சென்னையில் இன்று நடைபெற்றது. பூக்கடை சென்ன கேசவ பெருமாள் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் பட்டு வேட்டி சட்டை அணிந்து வந்திருந்தார்.
விஷ்வ இந்து பரிஷத் வட தமிழ்நாடு மாநில தலைவர் முனைவர் ஆண்டாள் சொக்கலிங்கம் தலைமையில் விஷ்வ இந்து பரிஷத் அகில பாரத வழக்கறிஞர் பிரிவு சீனிவாசன், மாநில செயலாளர் பாலமணிமாறன், மாநில துணைத்தலைவர் பத்ரி நாராயணன், வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர் ரமேஷ்குமார் சோப்ரா, வி.எச்.பி பொருளாளர் தணிகைவேல், தாமோதரன், பிரச்சார அமைப்பாளர் ஆர்.கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் சிறப்பு விருந்தினர்களாக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. சிவசபா ஆசிரமம் நிர்வாகி அன்னை ஞானேஸ்வரி கிரி.
திரைப்பட நடிகர் ரஞ்சித், ஆர்.எஸ்.எஸ்.மாநில செயலாளர் வி.ஜெ.ஜெகதீசன், மாநில அமைப்பாளர் ஆத்தூர் வெ.பாலாஜி, அமைப்பு செயலாளர் எஸ்.வி.ராமன், திரைப்பட நடிகர் எஸ்.ராஜா, வி.எச்.பி அறங்காவலர் ஜி.மணிகண்டன், திருச்சி சாரதாஸ் எம்.ரோஷன், திருக்குடை சேவா சமிதி டிரஸ்ட் அறங்காவலர்கள் தணிகைவேல் எஸ்.சீனிவாசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த 21 அழகிய திருக்குடைகள் பொதுமக்கள் பக்தர்கள் வழிபாடுகளுடன் ஊர்வலமாக சென்று 21-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஸ்ரீ பத்மாவதி தாயார் திருக்கோவிலிலும் மாலை 4 மணி அளவில் திருப்பதி திருமலையில் தேவஸ்தான அதிகாரிகளிடமும் தமிழக மக்கள் பிரார்த்தனைகளுடன் சமர்ப்பிக்கப்படுவதாக திருக்குடை சேவா சமிதி டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் ஜி.ராமலிங்கம் தெரிவித்தார்.
- அசாமில் பாஜக ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது.
- ஏஐ வீடியோவை பாஜக கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அசாமில் பாஜக ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அசாமில் பாஜக ஆட்சி இல்லையென்றால் என்னவெல்லாம் நடந்திருக்கும் என்று ஒரு ஏஐ வீடியோவை அம்மாநில பாஜக கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில், அசாமில் பாஜக ஆட்சி இல்லையென்றால் மாட்டுக்கறி உணவு சட்டபூர்வமாக மாறும். பாகிஸ்தானுடன் தொடபுடைய காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும். டீ எஸ்டேட் முழுவதும் முஸ்லிம்கள் இருப்பார்கள். கவுகாத்தி விமான நிலையம் கிரிக்கெட் மைதானத்தில் முஸ்லிம்கள் நிறைந்திருப்பார்கள். சட்டவிரோத முஸ்லிம் குடியேறிகள் நம் மாநிலத்தின் அரசு நிலங்களை ஆக்கிரமிப்பார்கள். அசாம் 90% இஸ்லாமிய மக்கள் கொண்ட மாநிலமாக மாறிவிடும்" என்று முஸ்லிம்கள் மீது வெறுப்பு பரப்பும் வகையில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிதளவும் தயக்கமின்றி மக்களை மத ரீதியில் பிளவுபடுத்தும் செயலில் பாஜக ஈடுபடுவதாக அசாம் மாநில அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த கண்டனங்களை பாஜக சிறிதும் பொருட்படுத்தவில்லை. அதன் விளைவாக அசாம் மாநில பாஜக அமைச்சர் அந்த வீடியோவை மீண்டும் பகிர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று பெரியாருக்கு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.
- பெரியாரின் சிலைக்கும், உருவ படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்தநாள் இன்று (செப்டம்பர் 17) கொண்டாடப்படுகிறது.
பெரியாரின் பிறந்தநாளை ஒட்டி, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பெரியாரின் சிலைக்கும், உருவ படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று பெரியாருக்கு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை பனையூரில் அமைந்துள்ள தவெக அலுவலகத்தில் உள்ள பெரியாரின் சிலைக்கு அக்கட்சி தலைவர் விஜய் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்னிந்திய பகுதி மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
19-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
20 மற்றும் 21-ந்தேதிகளில் வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
22-ந்தேதி வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
23-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதனிடையே, 19-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று முதல் 20-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.






